ஏழாம் முத்திரை Jeffersonville, Indiana, USA 63-0324E 1உமக்கு நன்றி, சகோதரனே, நாம் நின்றவண்ணமாக, ஜெபத்தை ஏறெடுப்போம், சர்வ வல்லமையுள்ள தேவனே, சகல ஜீவன்களுக்கும் காரணரே, ஆவிக்குரிய எல்லா நல்ல அனுக்கிரகங்களையும் தந்தருள்பவரே, உம் சமூகத்தில் நாங்கள் கொண்டுள்ள இம்மகத்தான, அற்புதமான ஐக்கியத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் ஜீவியத்தில் இது விசேஷித்த ஒன்றாகத் திகழ்கின்றது. நாங்கள் எவ்வளவு நேரம் இங்கு தங்க நேரிடினும், இது மறக்க முடியாத ஒரு சமயமாக உள்ளது. இந்தக் கூட்டத்தின் கடைசி இரவிலே தேவனே... பண்டிகையின் கடைசி நாளிலே இயேசு அவர்கள் மத்தியில் நின்று, “ஒருவன் தாகமாய் இருந்தால் என்னிடத்தில் வரக்கடவன்...'' என்று சத்தமிட்டுக் கூறினதாக நாங்கள் வேதத்தில் காண்கிறோம். பரமபிதாவே, அச்சம்பவம் மறுபடியும் நிகழவும், இன்றிரவு எங்களை ஊழியத்திற்கும் அவரோடு சமீபமாக நடப்பதற்கும் அழைக்கும் எங்கள் கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இம்முத்திரைகள் திறக்கப் பட்ட போது அவருடைய சத்தத்தை நாங்கள் ஏற்கனவே கேட்டதை உணருகிறோம். இது கடைசி நாட்களென்றும், சமயம் அருகாமை யிலுள்ளதென்றும் அவர் எங்களுடன் பேசினார். பிதாவே, நாங்கள் கேட்கும் இந்த ஆசீர்வாதங்களை, இயேசுவின் நாமத்திலும் அவருடைய மகிமைக்காகவும் தந்தருளும், ஆமென். நீங்கள் உட்காரலாம். 2என் ஜீவியத்தில் நான் நடத்தின எல்லா ஆராதனைகளைக் காட்டி லும், இவ்வாரம் நிகழ்த்தின ஆராதனை மிகவும் மகிமையுள்ளதாயிருந்தது என்பதனைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் எதைப் பெற்றிருந்த போதிலும்... சுகமாக்கும் ஆராதனைகளில் மகத்தான அற்புதங்கள் நிகழ் வதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இதுவோ அவையெல்லாவற் றிலும் மேலானதாயுள்ளது. இந்த ஆராதனை என் ஜீவியத்தில் மகத்தான ஒன்றாயுள்ளது. இச்சிறு கூடாரம் வெளிப்புற அமைப்பில் வித்தியாச மான தோற்றத்தைப் பெற்றுள்ளது மாத்திரமன்று உட்புறத்திலும் அது வித்தியாசமான அமைப்பைப் பெற்றுள்ளது! இப்பொழுது என்னை அழைத்துக் கொண்டுபோக பில்லி தாமத மாக வந்தான்; நான் அவனைக் கேட்டதற்கு இன்னும் ஒரு கூட்டம் (நூற்றுக்கு அதிகமானவர்கள்) இவ்வாரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஆயத்தமாயுள்ளதாக பில்லி (Billy) என்னிடம் கூறினான். ஆகவே நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆகவே, இப்பொழுது நீங்கள் தங்கியுள்ள ஸ்தலங்களில் சபைகள் இல்லாவிடில், இங்கு வந்து எங்களுடன் ஐக்கியங் கொள்ள உங்களை அழைக்கிறோம். இது உங்களுக்காகத் திறந்துள்ளது என்பது நினை விருக்கட்டும். நாங்கள் ஒரு ஸ்தாபனமல்ல, இது எக்காலத்தும் ஒரு ஸ்தாபனமாக ஆகிவிடாது என்று நம்புகிறேன். இங்கு மனிதரும் ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும் தேவனுடைய மேசையில் அமர்ந்து தேவனுடைய வார்த்தையின் பேரில் ஐக்கியங் கொள்கின்றனர். இங்கு எல்லாவற்றையும் நாங்கள் பொதுவாய் அனுபவிக்கின்றோம். 3இப்பொழுது, ஒரு அருமையான போதகர் நமக்குண்டு. அவர் உண்மையான தேவனுடைய மனிதன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கின்றேன். ஆகாரம் இவ்விடத்தில் சேகரிக்கப்பட் டுள்ளது என்பதைக் குறித்து ஒரு ஆண்டிற்கு முன்பாகத் தோன்றின ஒரு தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? அது முற்றிலும் உண்மை யாகும். நாம்... எல்லா வயதினருக்கும் ஞாயிறு பள்ளி நடத்த இந்த இடம் போதிய வசதியுள்ளதாயிருக்கின்றது. அதற்காக நாம் நன்றியுள்ளவர் களாயிருக்கின்றோம். ஒரு சமயம் ஒருவர் என்னிடம், அவர் பிள்ளைகளை அனுப்புவதற்கு ஞாயிறு பள்ளி இருந்தால் எவ்வளவு நலமாயிருக்கு மென்று கூறினார். இப்பொழுது அவை உள்ளன. ஆகவே உங்களுக்குச் சபையில்லாமலிருந்தால், நீங்கள் எங்களுடன் ஐக்கியங் கொள்ளலாம். 4ஆனால் நீங்கள் ஒழுங்காகச் செல்வதற்கு நல்ல சபை ஒன்று இருக்குமாயின், அங்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுமாயின், ஏன் அது வேறிடத்தில் அமைந்துள்ள நம்மைப் போன்ற வேறொரு குழுவாகும். உங்களுக்குச் சபையில்லாவிடில், நீங்கள்.. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அநேகர் இங்கு வந்து தங்கி, இதை தங்கள் சபையாக ஏற்றுக் கொண்டதாக நான் அறிகிறேன். உங்களெல்லாரையும் கர்த்தருடைய வார்த்தைக்கு அழைக்கிறேன். நான் இவ்விடம் விட்டு சென்றபோது, ஆராதனைகள் அனைத்தும் இக் கூடாரத்தில் நடைபெறுமென்று கூறினேன், என்று நினைவு கூறுகிறேன், எதிர்காலத்தில் கர்த்தர் எனக்காக என்ன வைத்துள்ளார் என்ப தனை நானறியேன். அதை நான் அவர் கரங்களில் சமர்ப்பித்துள்ளேன். மூட நம்பிக்கையில் நான் விசுவாசம் வைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் நான் அவர் சமூகத்தில் காத்திருந்து அவருக்கென மேலான ஊழியத்தில் ஈடுபடும் ஸ்தலத்திற்கு என்னை நடத்த வேண்டுமென்று நான் வேண்டு கிறேன். என் ஊழியம் முடிவு பெறும்போது, அவர் என்னை சமாதானத் துடன் அவர் வீட்டிற்கு ஏற்றுக்கொள்வாரென்று நம்புகிறேன். 5இப்பொழுது இக்கூடாரத்தின் மக்களின் ஒத்துழைப்புக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இக்கூடாரத்தைச் சுற்றியுள்ள எல்லா வீடுகளிலும் தூரத்திலிருந்தும் கூட்டத்திற்கு வந்தவர்கள் தங்கியிருப் பதாக பில்லி என்னிடம் கூறினான். தங்குவதற்கு வேறு ஸ்தலங்கள் இல்லாதவர்க்கு உங்கள் வீடுகளை நீங்கள் திறந்து கொடுத்திருக் கின்றீர்கள். உண்மையில் அது நல்ல கிறிஸ்தவ செயலாகும். சில வீடுகளில் மூலை முடுக்குகளிளெல்லாம் ஜனங்கள் அடைக்கப்பட் டுள்ளனர். இது ஒரு கடினமான நேரமாக இருந்து வருகிறது. ஏனெனில் கூடைப்பந்து விளையாட்டு போட்டிக்காக வந்திருப்பவர்கள் விடுதி அறைகளை ஏற்கனவே பதிவு செய்து விட்டதால், தங்குவதற்கு அறைகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. மேலும் ஒரு மகத்தான குழு... இந்தச் சிறு கூடாரத்தில் இருபத்தெட்டு அல்லது முப்பது மாநிலங் களிலிருந்து ஜனங்கள் வந்திருக்கின்றனர். அதுவுமல்லாமல் இரு அயல் நாடுகளிலிருந்தும் இந்த எழுப்புதல் கூட்டத்திற்கு ஜனங்கள் வந் துள்ளனர். எனவே ஜனநெருக்கம் அதிகமாகிவிட்டது. “ஜெபர்ஸன்வில் ஜனங்கள் அதிகம் பேரைக்காணவில்லை என்று நான் கேள்விப்பட்டேன்'' என்று நான் இன்று சிலரிடம் கூறினேன். 6அவர்கள், ''எங்களால் உள்ளே நுழைய முடியவில்லை'' என்று பதிலளித்தனர். காவல் துறையினரில் சிலரும், மற்றொரு கூட்டத்திற்காக உள்ளே வரவேண்டும் என்று விரும்பினர். அவர்கள் கூடாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே அது நிரம்பிவிட்டதால் உள்ளே வர முடியா மற்போயிற்று என்று கூறினர். பின்பு ஒரு வேளை அவர்களுக்குச் சமயம் கிடைக்காமலிருக்கலாம். ஆனால் அவர்களால் உள்ளே வரமுடியாமற் போயிற்று. ஆகவே பல்வேறு ஸ்தலங்களிலிருந்தும் ஜனங்கள் வரு கின்றனர். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவராயிருக்கிறோம். இப்பொழுது, எனக்குத் தெரியாது. இச்செய்தியைப் பின் தொடர்ந்து “ஏழு எக்காளங்கள்” என்னும் வேறொரு செய்தி எழலாம். ஆனால் முத்திரைகளிலே உண்மையாக எல்லாமே அடங்கியுள்ளன. ஏழு சபைகள் அதில் காணப்படுகின்றன. அதை நாம் முதலில் பொருத்தி னோம். அது மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஆனால் அதனுடைய அந்த நேரம்... இப்பொழுது திறக்கப்பட்ட முத்திரைகள், சபை எங்கு செல்கின்ற தென்றும், அது எவ்விதம் முடிவடைகிறதென்றும் நமக்குக் காண்பிக் கின்றன. நமக்குள்ளதை நாம் காண பரம பிதா கிருபையாய் நம்மை அனுமதித்திருக்கிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். 7இதனைக் கூற விரும்புகின்றேன். அநேக ஆண்டுகளுக்கு முன் பாக நான் நிகழ்த்திய பிரசங்கங்களின் குறிப்புகளை நோக்கிப் பார்க்கும் போது, நான் எது சரியென்று அப்பொழுது நினைக்க முற்பட்டேனோ அதனையே நான் பிரசங்கித்துக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் அது உண்மையான விளக்கத்திலிருந்து மாறுபட்டதாயிருந்தது. நான்கு முத்திரைகளையும் குறித்து நான் இருபது நிமிடப் பிரசங்கத்தில் பிரசங் கித்ததுண்டு. வெளிப்படுத்தலில் கூறப்பட்ட நான்கு முத்திரைகளின் மேலிருப்பவர்களை ஒன்றாக இணைத்து, ''ஒரு வெள்ளைக் குதிரை சென்றது, அது ஒருக்கால் ஆதி சபையாயிருக்கலாம்'' என்றும், “அடுத்த குதிரை சென்றது. அது பஞ்சத்தைக் குறிக்கிறது'' என்றும் இவ்விதமாக நான் பிரசங்கித்திருக்கிறேன். ஆனால் வார்த்தையின் உண்மையான அர்த்தம் வெளிப்பட்டபோது, நான் முன்பு பிரசங்கித்ததைக் காட்டிலும் அது முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. எனவே நாம் விழித்திருந்து காத்திருக்க வேண்டிய அவசியம் நமக்குண்டாயிருக்கிறது. இம்முறையும் அதை நாம் செய்ய வேண்டி யவர்களாயிருக்கின்றோம். நான் கூறின அநேக காரியங்களை சிலர் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் எடுக்கப்படுதல் நிகழ்ந்து நாம் நம்முடைய கர்த்தரை சந்திக்கும்போது, நான் கூறினவை சரி யென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நான் கூறினவை அது -அது -அது முற்றிலும் சரியாகும். 8இப்பொழுது வெகு தூரத்திலிருந்து வந்திருப்பவர்களே! இவ் வளவு தொலைவிலிருந்து பிரயாணம் செய்து, உங்கள் விடுமுறைகளை இங்கு கழித்து, தங்குவதற்கு இடமில்லாமற் போனாலும் அதைப் பொருட் படுத்தாதிருக்கும் உங்கள் உத்தமத்தை நான் பாராட்டுகிறேன். எனக்கு எப்படித் தெரியுமென்றால், உங்களில் சிலருக்கு நான் இடவசதி செய்து கொடுத்தேன். உண்பதற்கு பணமில்லாதிருந்தும் சிலர், எப்படியாவது அவர்கள் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்னும் விசுவாசத்துடன் இங்கு வந்துள்ளனர். ஆகாரம் இல்லாமலிருந்தாலும் தங்குவதற்கு இடமில்லாமலிருந்தாலும் பரவாயில்லை; எங்ஙனமாயினும் செய்தியைக் கேட்க வேண்டுமென்னும் உங்கள் மகத்தான விசுவாசம் பாராட்டுக் குரியது. எல்லாருமே நூற்றுக்கு நூறு அவ்விதமுள்ளனர். இந்தக் கூடாரம் கட்டப்படும்போது, அது அந்த -அந்த... சபையைக் கட்டும்போது. ஆகவே அதைக் கட்டின என் மைத்துனரை நான் சந்தித்து அவர் செய்த வேலையை நான் பாராட்டினதுண்டு. நான் கட்டிடம் கட்டுபவனல்ல. அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் சதுர மூலை (Square corner) யென்றால் என்னவென்பது எனக்குத் தெரியும். அது சரிவர அமைக்கப்பட்டுள்ளதா இல்லையாவென்று என்னால் அறிந்துகொள்ள முடியும். 9ஆகவே அவர், ''நான் உமக்கு கூறுவது என்னவெனில் இது போன்ற ஒரு தருணம் எப்பொழுதுமே இருந்ததில்லை. எல்லோரும் ஒன்றாக வேலையில் ஈடுபடும்போது, மனிதர் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையை நீர் கண்டிருக்கவே மாட்டீர்'' என்று கூறினார். சகோதரன் உட்ஸ் (Bro. Woods), சகோதரன் ராபர்ஸன் (Bro. Roberson) எல்லோருமே அவரவர் வேலையைத் திறன்படச் செய்தனர். ஒலி சப்த இயல், அந்த... இல்லை. ஒலி பெருக்கியை அமைத்துக் கொடுத்த சகோதரன். 'எல்லாமே சரிவர நிறைவேறினது'' என்று அவர்கள் என்னிடம் கூறினர். அவர்களுக்கு ஏதாவது ஒரு அவசியம் காணப்பட்டபோது. அதைச் செய்வதற்கென்று ஒருவர் அங்கு வந்து நிற்பார். எனவே இம்முழுத் திட்டத்திலும் தேவன் காணப்பட்டார். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவராய் இருக்கிறோம். இங்கு அமர்ந்துள்ள சகோதரன் டெள (Bro. Dauch). சகோதரி டெள, இன்னும் அநேகர் இதற்கென்று மிகுந்த பண உதவி செய்தனர். நான் இவர்கள் பெயர்களைக் கூறுவது அவர்களுக்கு விருப்பமிராது செலுத்த வேண்டிய எல்லாத் தொகைகளும் செலுத்தி முடிந்துவிட்டது. அதற்கென்று நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 10இது உங்கள் சபையென்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெ னில் நீங்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர். அநேக ஊழியக்காரர் தோன்ற வும், ஏற்கனவே கிறிஸ்துவின் ஊழியக்காரராயிருப்பவர் இதனுள் வந்து இயேசுகிறிஸ்துவின் பேரில் ஐக்கியங் கொண்டு மகிழ்ச்சிக் கொள்ள வேண்டுமெனக் கருதியே இது கட்டப்பட்டுள்ளது. எல்லோருக்கும் வரவேற்புண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும். ஆகவே இப்பொழுது, சில நேரங்களில் பரிசுத்த ஆவியின் அபி ஷேகத்தினால் நான் ஸ்தாபன முறைமைகளைக் கண்டித்து பேசும்போது, இங்கு குழுமியுள்ள போதகரையோ அல்லது ஏதாவதொரு சகோதர னையோ அல்லது சகோதரியையோ குற்றப்படுத்துகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். ஏனெனில் எல்லா ஸ்தாபனங்களிலும் தேவன் தம் பிள்ளைகளை வைத்திருக்கிறார். ஆனால் அவர் ஸ்தாபனங்களை அங்கீ கரிப்பதில்லை. ஸ்தாபனங்களிலுள்ள நபர்களை ஏற்றுக்கொள்ள அவர் ஆயத்தமாயுள்ளார். அது ஸ்தாபனங்களை உடைமையாகக் கொள் வதில்லை . 11ஜனங்கள் ஸ்தாபனங்களின் முறைமைகளால் கட்டப்படும்போது, ஸ்தாபனங்கள் கூறுவதைத் தவிர வேறெதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. நீங்கள் பாருங்கள். இதன் விளைவாக, அவர்கள் மற்றவர்களுடன் ஐக்கியங் கொள்ளத் தவறுகின்றனர். தேவன் ஸ்தாபன முறைமைகளில் விருப்பங்கொள்வதில்லை. அவை தேவனால் நியமிக் கப்படாத உலகப் பிரகாரமான செயல்களாகும். ஆகவே, இப்பொழுது, நான் எந்த தனிப்பட்ட நபரைக் குறித்தும் சொல்லவில்லை-அது கத்தோலிக்க ஸ்தாபனமோ, யூத ஸ்தாபனமோ அல்லது மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், ப்ரெஸ்பிடேரியன் ஸ்தாபனமோ அல்லது மற்றைய ஸ்தாபனங்களோ - தேவன் தம் பிள்ளைகளை எல்லா ஸ்தாபனங்களுக்குள்ளும் வைத்துள்ளார். பாருங்கள்? அவர்கள் ஒரு நோக்கத்துக்காக அங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அநேக முறைகள் நான் நம்புகிறேன்- அவர்கள் அங்கு வெளிச்சத்தைத் தந்து எல்லாவிடங்களிலுமிருந்தும் முன் குறிக்கப்பட்டவர்களைக் கொண்டு வருவதற்கென வைக்கப்பட்டுள்ளனர். அந்த மகத்தான நாளிலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சபை ஆகாயத்தில் ஒன்று கூடுவதற்கென அழைக்கப்படுவதை நாம் காண்போம். அவரைச் சந்திக்க நாமெல்லாரும் மேலே எடுத்துக் கொள்ளப்படுவோம். அத்தருணத் திற்காக நான் காத்திருக்கிறேன். இப்பொழுது, அநேக காரியங்களைக் குறித்து நாம் சொல்லலாம். 12கூட்டம் முடியப்போகும் கடைசி இரவாகிய இன்றிரவில்... சுக மளிக்கும் கூட்டங்களில் ஜனங்கள் மகத்தான செயல்கள் நிகழுமென எதிர்நோக்கி நரம்பெல்லாம் முறுக்கேற்றப்பட்டவர்களாய் காத்துக் கொண்டிருப்பது வழக்கம். அதுபோல் இன்றும் ஒவ்வொருவரும் மகத்தான செயல் நிகழ எதிர்நோக்கியிருக்கின்றனர்... என்று நான் காண்கிறேன். முத்திரைகள் திறக்கப்பட்ட ஒவ்வொரு இரவும் அவ்வாறே நிகழ்ந்துள்ளது. இப்பொழுது, இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் முத்திரையைக் குறித்த இரகசியம் எனக்கு அறையில் வெளிப்பட்டபோது, அது அதைக் குறித்து நான் ஏற்கனவே கொண்ட கருத்தைக் காட்டிலும், அல்லது ஏனையோர் அதைப் பற்றி கொண்டிருந்த கருத்தைக் காட்டிலும் முற்றிலும் முரண்பாடானதாய் அமைந்திருந்தது. அந்நேரத்தில் என் சிந்தையானது. இன்று காலை நான் சுக மளிக்கும் கூட்டங்களை நடத்துவதற்குக் காரணமென்னவெனில், எட்டு நாட்களாக அந்த அறையில் ஜன்னல்கள் யாவையும் அடைத்துவிட்டு மின்சார விளக்கைப் போட்டு அங்கு தங்கியிருந்து வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டதன் பலனாக, என் சுய சிந்தை ஆலோசிக்கும் தன் மையை இழந்து, அதனின்று அப்பாற்சென்று விட்டது. நான் காரில் ஏறி வேறெங்கும் செல்லவில்லை. 13சபைக்கென கடன் வாங்கிய பணத்திற்காக கையொப்பமிடுவதற் காக சில சகோதரர்களுடன் வங்கிக்கு (Bank) ஒரு முறை செல்ல நேர்ந்தது. அங்கிருந்து திரும்பி வந்தவுடன், நான் நேரடியாக அறைக்குச் சென்று விட்டேன். ஆனால் இதுவரை, அங்கு பெற்ற வெளிப்பாட்டிற்கு ஒத்த கருத்துக் கள் ஒன்றையும் யாருமே இதுவரை கூறியதில்லை. அவர்கள் அதைக் குறித்து திரும்பத் திரும்ப விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு காரியம் என்னவெனில், எனக்குக் கிடைக்கப்பெற்ற வெளிப்பாடு மிகவும் அற்புதமானது? நான் தற்பொழுது தங்கியிருக்கும் சகோ. உட் (Bro. Wood)ன் வீட்டில் எப்பொழுதும் வாகனங்கள் நின்றவண்ணமாகவே இருக்கும். இது போன்ற சமயங்களில் எட்டு அல்லது பத்து பேர்கள் அவர்கள் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் இச்சமயம் ஒருவரும்கூட அங்கு தங்கவில்லை. 14இன்று காலை நமது இரட்சகர் அவரது களைத்துப்போன தாசனாகிய எனக்குக் காண்பித்த கிருபையை நான் ஒருபோதும் மறவேன். ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு நான் பதிலுரைத்தேன். எனக்குத் தெரிந்தவரை அது சரியான பதிலென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் சடுதியாக, ஒரு பிள்ளையிடம் ஏதோ ஒன்றை நான் பிடுங்கினால் எவ்வாறு மனதில் குத்தப்படுவேனோ, அவ்விதமான உணர்ச்சியை நான் பெற்றேன். நான் மிகவுமாக கடிந்து கொள்ளப்பட்டேன். ஆதலால் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ''சுகமளிக்கும் ஆராதனையை நான் ஆரம்பிக்க உந்தப்படுகின்றதால் அவ்வாறிருக்கும். ஒருக்கால் அதிக நோய்வாய்ப் பட்டவர்களுக்காக நான் உடனடியாக ஜெபம் செய்ய வேண்டியதா யிருக்கும். அதற்காகவே அத்தகைய உணர்ச்சியை நான் பெற்றேன்'' என்றெல்லாம் எண்ணினேன். உடனே ஜெபம் செய்ய வேண்டியவர்கள் யாராவது உண்டா என்று குழுமியிருந்தவர்களிடம் கேட்டேன். ஆனால் சில நிமிடங்களில் அதன் காரணம் வெளிப்பட்டது. ஒருவர் என்னிடம், ''நீங்கள் படித்த வாக்கியத்தைத் திரும்பவும் படிப்பீர்களா?'' என்று கேட்டார். அப்பொழுது மேசையின் மேலிருந்த துண்டு காகிதத்தைக் கையிலெடுத்து மறுபடியும் படித்து, அதனை புஸ்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, கேட்கப்பட்ட கேள்விக்கு நான் தவறாக பதிலுரைத்ததை உணர்ந்தேன். பாருங்கள்? இதனை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டது சம்பவிக்கும்போது, அது தேவ னுடைய சிந்தையாகத்தான் இருத்தல் வேண்டும். அவை நிகழும்போது உங்கள் சுய சிந்தையிலிருந்து நீங்கள் அப்பாற்சென்றுவிட்டு, உங்கள் சிந்தை..... இதனை நான் விவரிக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அதை என்னால் விவரிக்க இயலாது. பாருங்கள்? நான் மாத்திரமல்ல, யாருமே அதை விவரிக்க முடியாது. 15ஏனெனில் எலியா என்னும் பாடுள்ள மனிதன் மலையின்மேல் தேவனுடைய சமூகத்துக்கு முன்பாக நின்று வானத்திலிருந்து எவ்வாறு அக்கினியை வரவழைத்து, அதன் பின்பு மழையையும் வரவழைத்து, வேறொரு சமயத்தில் மூன்றரை வருடம் மழை பெய்யாதபடி வானத்தை யடைத்து, அந்நாளிலே மறுபடியும் மழைவரக் கட்டளையிடமுடியும்? அவன் தேவனுடைய அபிஷேகத்தைப் பெற்றவனாய், பாகாலின் நானூறு தீர்க்கதரிசிகளைக் கொலை செய்யத் தைரியம் கொண்டு, அதே சமயத்தில் அவனைக் கொல்லச் சபதமெடுத்திருந்த யேசேபேல் என்னும் ஒரு ஸ்திரீக்கு அஞ்சி, ஜீவன் தப்ப அவன் ஏன் வனாந்தரத்துக்கு ஓடிப்போக வேண்டும்? பாருங்கள்? தேவனுடைய பிரசன்னத்தையும், அங்கு நடந்த அந்தப் பெரிய அற்புதத்தையும் காண ஆகாபும் அவனுடைய ஆட் களும் அங்கே இருந்தனர். பாருங்கள், அவனுடைய ஆவியானவர் அவனை விட்டு அப்பொழுது சென்றிருக்க வேண்டும். அவன் தன் சுய ஞானத்தைக் கொண்டு எதையும் சிந்திக்க இயலாமலிருந்தான். அவன் எவ்விதம் சிந்திக்கவேண்டுமென்று அறியாதவனாயிருந்தான், பாருங்கள். தேவதூதன் அவனுக்கு நித்திரையளித்து, இளைப்பாறச் செய்து, பின்னர் நித்திரையினின்று அவனை எழுப்பி, அப்பங்களைப் புசிக்கச் செய்து, மறுபடியும் அவனை நித்திரைக்குட்படுத்தி, பின்னர் எழுப்பி அப்பங்களைக் கொடுத்து, இவ்விதம் செய்துக்கொண்டே வந்தான். நாற்பது நாட்களளவும் எலியாவுக்கு என்ன நேரிட்டது என்று நாமறி யோம். பின்னர் அவன் குகைக்கு இழுக்கப்பட்டு, அங்கே தேவன் அவனை அழைத்தார். 16இயற்கைக்கு அப்பால் சம்பவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு வியாக்கி யானம் அளிக்க முயல வேண்டாம். உங்களால் அது முடியாது. பாருங்கள்? நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, அதைக்கண்டு முன்னேறிச் செல்வதேயாகும். இதுவரை நான் உங்களிடம் இவைகளைக் குறித்து தெளிவாக்க முயன்று வந்தேன். ஆனால் இனிமேல் நான் அவ்விதம் செய்யப்போவதில்லை. நீங்கள் அதை முற்றிலும் விசுவாசித் தாலும் சரி, விசுவாசிக்காவிட்டாலும் சரி. சிறிது கழித்து அது ஏனென்று உங்களுக்குப் புலப்படும். இதுவரை நான் உண்மையாக இருக்கவே முயன்று வந்துள்ளேன். அதை தேவனறிவார். இன்று காலையிலும் கூட அந்த கேள்விக்கு நான் அறிந்தவரை உத்தமமாக பதிலளிக்கத்தான் முயன்றேன். வேத வாக்கியத்தின் முதலாம் பாகத்தை மாத்திரமே நான் படித்து பதிலுரைத்தேன். ஆனால் அது சரியான பதிலன்று. பரிசுத்த ஆவியானவர் என் சிந்தனையை அறிந்து கொண்டு..... கடந்த இரண்டு, மூன்று நாட்களில் என்ன வெல்லாம் சம்பவித்தன என்பதை நீங்கள் கவனியுங்கள். பாருங்கள், நான்-நான்- கூறினேன், எழுநூறு... ''ஏழாயிரம்'', எழுநூறு. இக்காலை, முயற்சித்துக் கொண்டிருந்தேன், அது ஜனங்கள் கண்டறிந்து கொண்டனர். பாருங்கள், ஆகவே அது நீங்கள் கவனித்துக் கொண் டிருக்கின்றீர்கள் என்பதைக் காண்பிக்கின்றது. இப்பொழுது, இன்னும் ஒன்று. வேறொரு முறை புறா' என்று சொல்வதற்குப் பதிலாக 'ஆட்டுக்குட்டி' என்று சொல்லிவிட்டேன். ஆனால் அத்தவறை நானாகவே புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் மற்றொரு தவறை நான் செய்த போது, நான் தவறு செய்ததை உணரவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் என் சிந்தனையைக் கவர்ந்து என் தவறை உணர்த்தினார். 17ஆகவே, நான் கூறுவது யாவும் சரியென்று இரட்டிப்பாக நிலை வரப்படுகின்றது. அவைகள்... நான் கூறுவது சரியாவென்று தேவன் கவனித்துக் கொண்டே இருக்கின்றார். அது சரி. இவை யாவும் சத்தி யமேயென்று நீங்கள் அறியவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். அவர்தான் இச்சத்தியத்தை அனுப்புகிறார். ஏனெனில் இவைகளை நான் சுயமாகக் கூற முடியாது... இவை வெளிப்படும்போது, நானும் உங்களுடனே கூட அதைக் கற்றுக் கொள்கின்றேன். ஆகவே, நாம்... கர்த்தரைப் பற்றி இப்பொழுது அறிந்து கொள்ளவும், நாம் எந்தக் காலத் தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவும், நான் பெற்றுள்ள அறிவுக்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். சபை எடுக்கப்படுவதற்கு முன்னாலுள்ள கடைசி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும்போதே, தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும் படியாக அவரை நாம் கேட்போம். 18எங்கள் பிரம பிதாவே, அந்த மகத்தான இரவு இப்பொழுது வரு கின்றது-ஒரு மகத்தான சம்பவம் நிகழ்ந்த அந்த மகத்தான மணி நேரம். இவை ஜனங்களைச் சுற்றிலும் உள்ளது. ஆகவே, பிதாவே, தேவன் இப்பொழுதும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் என்றும், அவர் தமது ஜனங்களை இன்னமும் நேசிக்கிறார் என்றும், இன்றிரவு ஜனங்களுடைய இருதயங்களிலும் சிந்தனைகளிலும் எவ்வித சந்தேகமும் ஏற்படாதவாறு அவை வெளிப்படவேண்டுமாய் நான் கெஞ்சுகிறேன். ஆகவே அந்த மணி நேரம் - உலகம் காணவிழைந்த அந்த மணி நேரம் இப்பொழுது அருகாமையில் வந்திருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்துக் கொள்ளட்டும். ஏனெனில் அதுதான் உலகம் மீட்புக் காகக் கதறும் சமயம். அந்த மூல கூறுகள் (elements) அதைக் கொண்டு வர ஆயத்தமாயுள்ளன. சபையை மறுபடியும் கிறிஸ்து வினுடைய சமூகத்தில் கொண்டு வருவதற்கு அந்த மூலக் கூறுகள் ஆயத்த மாயுள்ளன என்று நாங்கள் காண்கிறோம். மணவாட்டி அவளுக்குரிய கலியாண வஸ்திரம் தரித்துக் கொண்டு ஆயத்தமாவதை நாங்கள் காண்கிறோம். வெளிச்சம் மினுக்கு மினுக்கென ஒளிர்விடு வதை (flicker) நாங்கள் காண்கிறோம். நாங்கள் முடிவுக்கு வந்துவிட்டோம் என்பதை உணருகிறோம். இப்பொழுதும், பரம பிதாவே, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக மகிமையில் சம்பவித்ததும், உம் அன்பார்ந்த அப்போஸ் தலனாகிய யோவான் காணச் சம்மதித்ததுமான அந்நிகழ்ச்சியைக் குறித்து நாங்கள் இன்றிரவு பிரசங்கிக்கும்போது அல்லது போதிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே தம் வெளிப்படுத்துதலின் வல்லமையோடு முன்வந்து, கடந்த சில இரவுகளில் செய்தது போன்று, இப்பொழுதும் நாங்கள் அறிய வேண்டுமென்றிருப்பவைகளை வெளிப்படுத்தக் கோரு கிறோம். எங்களையும், உம் வார்த்தையுடன் கூட இயேசுவின் நாமத்தில் உம்மண்டை சமர்ப்பிக்கிறோம். ஆமென். 19நீங்கள் உங்கள் வேதபுஸ்தகங்களை திறக்க விரும்புவீர்கள். இது இப்பொழுது வேதத்திலுள்ள ஒரு சிறிய வசனம். ஆனால் அது கடைசி முத்திரையாகும்; ஒரே வசனத்தைக் கொண்டது. இப்பொழுது, சென்ற இரவு நாம் ஆறாம் முத்திரையைக் குறித்துப் பேசினோம். முதலாம் முத்திரையில் அந்திக்கிறிஸ்து அறிமுகமாக்கப்படு கிறான். அவனுடைய சமயம் கடந்து வந்து அவன் எவ்விதம் புறப் பட்டுச் சென்றான் என்று நாம் பார்த்தோம். எவ்வாறு தேவனுடைய வல்லமையைப் பெற்ற மிருகம் (ஜீவன்) அந்திக் கிறிஸ்துவின் வல்லமை பெற்றிருந்த மிருகத்துடன் போரிட்டது என்று நாம் பார்த்தோம். இதைக் குறித்த எந்த கேள்வியும் யாரிடமும் இருக்கமுடியாது என்று நான் நம்புகிறேன். பிறகு சபையின் காலத்தில், அந்திக்கிறிஸ்து புறப்பட்டபோது, அவனை எதிர்க்க அந்த ஜீவன் (ஒவ்வொன்றாக) உடனே புறப்பட்டுச் சென்றது என்று நாம் கண்டோம். சபையின் காலம் முடிவடைந்த பின்னர், மிருகங்கள் தோன்றுவ தில்லை என்றும், அங்கே முழுக் காட்சியும் மாறிவிட்டதையும் நாம் கண்டு கொண்டோம். பாருங்கள்? ஆனால் முன்வந்த அவைகள், சபை எடுக்கப் பட்ட பின்னர் உபத்திரவ காலம் வருகின்றது என்பதை நமக்கு அறி முகம் செய்து கொண்டிருந்தன. 20நாம் கூறியவை சபையின் காலங்களுடன் எவ்வளவு அழகாக பொருந்துவதைப் பாருங்கள். சபைக் காலங்களுக்கும், மற்றவற்றிற்கும், அதன் நேரங்களுக்கும், ஒரு இம்மி (lota) அளவுகூட பரிபூரணமாகப் பொருந்தாத ஒரு காரியத்தை நான் காணவில்லை. அதைப் பற்றி யோசித் துப் பாருங்கள். அப்படியானால் அது தேவனிடத்திலிருந்து வந்ததாக இருக்கவேண்டும். மனித சிந்தை இவைகளை ஆழ்ந்தறிந்து (Fathom) கொள்ள முடியாது. நாம் இப்பொழுது காண்பதென்னவெனில்... கடைசி காலங்களில் என்ன சம்பவிக்குமென்று இயேசு கூறிய வசனங்களை நாம் தியானிக்க கர்த்தர் அனுமதித்தார். இல்லையெனில், நாம் அதை எவ்விதம் கண்டிருக்க முடியும்? அவர் இங்கே அதை நமக்கு வெளிப்படுத்தி, அதை அப்படியே வெளிகொணர்ந்தார். அவர் அங்கே அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கின்ற அந்த பிரசங்கம், அவை ஆறு முத்திரைகளின் சம்பவங்களுடன் சரியாகப் பொருந்துகின்றன. ஆனால் இயேசுவோ ஏழாம் முத்திரையைக் கூறாமல் விட்டுவிட்டார். பாருங்கள்? முத்திரைகள் உடைக்கப்பட்டபோது, ஏழாம் முத்திரையை எந்த ஒரு அடையாளத்தின் மூலமாகவும் அவர் வெளிப்படுத்தவில்லை. பாருங்கள்? அது தேவன் மாத்திரம் முற்றிலும் அறியும் இரகசியமாகும். கவனியுங்கள். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 8-ம் அதிகாரத்தில் ஏழாம் முத்திரையைக் குறித்து வாசிக்கப் போகின்றோம். அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத் தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று 21ஏழாம் முத்திரையைக் குறித்து இதை மாத்திரமே நாமறிவோம் இப்பொழுது நாம் கவனிப்போம். உங்களை நான் அதிக நேரம் பிடித்து வைக்கப்போவதில்லை. ஏனெனில் உங்களில் அநேகர் இன்றிரவு பிரயாணப்பட்டு வீடுபோய்ச் சேரவேண்டும். இன்று காலை மறுபடியும் சுகமளிக்கும் ஆராதனை வைக்க வேண்டுமென்றிருந்தேன். அப்படி வைத்திருந்தால், நீங்கள் மாலைவரை காத்திராமல் காலையிலே சென்றிருக்க ஏதுவாயிருக்கும். நாம் இப்பொழுது... 22நானும்கூட நான் வாழும் அரிசோனாவிலுள்ள டுசானுக்குப் பிரயாணம் செய்ய வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால் நான் மீண்டும் இங்கு வருவேன். இப்பொழுது அதுதான் என் வீடாகும். கர்த்தருக்குச் சித்தமானால் நான் மறுபடியும் இங்கு வரவிரும்புகிறேன். ஜூன் மாதத் தில் சில நாட்கள் இங்கு வரவேண்டுமென்று என் குடும்பத்தினர் விரும்பு கின்றனர். அவ்வமயம் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்து உங்களெல் லாரையும் சந்திக்க முற்படுவேன். நான் நடத்தவிருக்கும் அடுத்த கூட்டம் நியூ மெக்ஸிகோவிலுள்ள ஆல்புகர்க் என்னும் ஸ்தலமாகும். அங்கு 9, 10, 11-ம் தேதிகளில் கூட் டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். வியாழனன்றும், பெரிய வெள்ளிக்கிழமையன்றும் நான் அங்குதான் இருப்பேன். எனக்கு மற்ற நிகழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இந்த கூட் டங்கள் முடியும்வரை, என்னால் அதைச் செய்யமுடியாது. ஆகவே வியாழன் இரவும், வெள்ளிக்கிழமை இரவும் நியூமெக்ஸிகோவிலுள்ள ஆல்புகார்க்கில் நான் கூட்டங்கள் நடத்துவேன். அதன் பின்னர் வடக்கு கரோலினாவிலுள்ள சதர்ன் பைன்ஸ் (Southern Pines) என்னும் ஸ்தலத்திலுள்ள நள்ளிரவு சத்தம்' (Midnight Cry) என்னும் பெயர் கொண்ட குழுவின் அங்கத்தினருடரான நல்ல நண்பர்களுடன் நான் தங்குவேன். இப்பொழுது அவர்கள் செய்தியைத் தொலைபேசியின் மூலமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் 'சிறிய மலை' (Little Rock) என்னும் ஸ்தலத்திலுள்ள 'இயேசுவின் நாமம்' ஜனங்களிடம் வந்துள் ளனர். அங்கிருந்து எனக்கு தந்தியடித்திருந்தனர். அவர்கள் ஆர்க்கன் ஸாஸிலுள்ள (Arkansas) சிறிய மலையில் (Little Rock) கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு முதற்கொண்டு, நான் ஒரு இரவாகிலும் அவர்களுடன் பேசவேண்டுமென்று, அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். ஆகவே, அவர்கள் கன்வென்ஷனைக் குறித்து விளம்பரம் செய்து விட்டு, பின்னர் எனக்குத் தெரியப்படுத்தலாமென்று நான் அவர்களிடம் கூறினேன். 23அவர் இப்பொழுதுதான் கூப்பிட்டாரா? ஊஊம் சரி. என்ன கூறுகிறீர்கள்? (ஒரு சகோதரன் 'ஹாட்ஸ்பிரிங்ஸ்' என்று கூறுகின்றார் -ஆசி) ஹாட்ஸ்பிரிங்ஸ் என்ற இடத்திலா? நான் தவறாகப் புரிந்து கொண்டேன் ('இருபத்தி நான்காம்'.) இருபத்தி நான்காம்... ('மே') மே? (யாரோ ஒருவர் ஜுன் 24 முதல் 28 முடிய என்று கூறுகின்றார்) ஜூன் 24 முதல் 28 வரை. ஆகவே அது விளம்பரம் செய்தாகிவிட்டது. கர்த்தருக்குச் சித்தமானால் நான் அங்கு செல்வேன். பாருங்கள்? நான்... நான் அக்காரியங்களைச் செய்ய விரும்புவதின் காரணத்தை சிறிது நேரத்திற்குப்பிறகு நீங்கள் அறிந்து கொள்ளுவீர்கள். பாருங்கள்? ''நீ போ'' என்று கர்த்தர் சொல்லும் இடத்திற்கு மாத்திரமே நான் போக விரும்புகிறேன். ஏனெனில் சத்துரு எனக்கு விரோதமாக அங்கு எழும் பினாலும், ''நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வந்திருக்கிறேன். ஆகவே, பின்னாலே போ'' என்று என்னால் சொல்ல முடியும். பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் அப்பொழுது நிற்பது ஸ்திரமான ஸ்தல மாகும். அவர் உங்களை ஓரிடத்திற்கு அனுப்பினால், அவர் தாமே உங் களைக் கவனித்துக் கொள்வார். பாருங்கள்? ஆனால் நீங்கள் ஊகித்து ஓரிடத்திற்குச் சென்றால், அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஒருக்கால் அவர் அங்கே உங்களுடன் இருக்க மாட்டார். எனவே, அவருடைய சித்தத்தை நிச்சயமாக அறிந்த பின்னரே, அவ்விடம் செல்ல நான் விரும்புகிறேன். அவர் கூறாத எத்தனையோ காரியங்களை நான் செய்திருக் கிறேன். ஆயினும் என்னால் இயன்றவரை அவருடைய சித்தத்தை நான் நிச்சயமாக அறிய விரும்புகிறேன். கர்த்தர் உங்களெல்லாரையும் ஆசீர் வதிப்பாராக. 24இப்பொழுது இங்கு ஒரு வசனம் மாத்திரமேயுள்ளது என்று நாம் பார்க்கிறோம். அதைக் குறித்து சற்று சிந்திக்கலாம். நாம் 7-ம் அதிகாரத்தை விட்டு விட்டோம் என்பதைக் கவனியுங்கள். 6-ம் அதி காரத்தில் ஆறாவது, ஆறாம் முத்திரை முற்று பெறுகிறது. ஆனால் ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்குமிடையில் சில காரியங்கள் சம்பவிக்கின்றன. பாருங்கள்? அவை எவ்வளவு அழகாக 6-ம் அதிகாரத் துக்கும் 7-ம் அதிகாரத்துக்கும் இடையே வைக்கப்பட்டுள்ளன. நாம் ஏழாம் அதிகாரத்தை கவனிக்கும்போது, ஆறாவது முத்திரைக்கும் ஏழாவது முத்திரைக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு என்பதை நாம் கவனிக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் ஆறு, ஏழு அதிகாரங்களில் நடுவில்... இந்த இடைவெளியானது ஆறு ஏழு முத்திரைகளின் நடுவில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் இதைக் கவனிக்க விரும்புகிறோம். இந்தச் சிறிதளவான நேரத்தை நாம் கவனிக்க வேண்டியது நமக்கு மிக முக்கியமானதாகும். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்துக்குப் பிறகு சபை எடுக்கப்படுகின்றது என்பதை இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். நான்கு குதிரைகளின்மீது சவாரி செய்தவர்கள் கடந்து சென்ற பிறகு சபை எடுக்கப்படுகின்றது. பாருங்கள்? சபைக்கு நிகழவிருக்கும் யாவுமே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம் வரை நிகழ்ந்து விடுகின்றன. அந்திக் கிறிஸ்துவின் இயக்கத்தில் நிகழவிருக்கும் யாவும் கூட 4-ம் அதிகாரத்துடன் நிறைவு பெறுகின்றது. அந்திக் கிறிஸ்துவுக்கும், கிறிஸ்துவுக்குமான (சபையைக் குறித்த-தமிழாக்கியோன்) யாவும், வெளிப்படுத்தல் நான்காவது முத்திரையில் முடிவுறுகின்றது. அதன் பின்னர் அந்திக்கிறிஸ்து அவன் சேனைகளுடன் தன்னுடைய அழிவிற்கென வருகின்றான். இயேசு கிறிஸ்து அவர் சேனைகளுடன் வருகின்றார். 25இத்தகைய போராட்டம், காலம் என்று ஒன்று உண்டாவதற்கு முன்னறே ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே அப்பொழுது அவர்கள்... சாத்தானும் அவனைச் சார்ந்த தூதர்களும் தள்ளப்பட்டனர். அவர்கள் பூமிக்கு வந்தனர். மறுபடியும் யுத்தம் தொடங்கியது. ஏனெனில் ஏவாள் தனக்கு அரணாகக் கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் எல்லையை மீறினாள். அன்று முதல் சாத்தான் தேவனுடைய வார்த்தையுடன் போராடி வென்றான். ஏனெனில் தேவனுடைய பிரஜையில் பலவீனமான ஒருத்தி இதற்குக் காரணமாயிருந்தாள். ஒவ்வொரு முறையும் சாத்தான் அதேவிதமாக யுத்தத்தில் வெற்றி கொண்டு வருகிறான். அதற்கு காரணம் தேவனுடைய பிரஜைகள் அவருடைய வார்த்தையின் எல்லையை மீறுகிறார்கள். இக்கடைசி சபையின் காலத்திலும் ஸ்தாபன முறைமைகளின் மூலம் இதுவே சம்பவித்துக்கொண்டு வருகின்றது. ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான பரிசுத்த சபை, குதிரைமேல் சவாரி செய்யும் பொய்யனுடன் சேர்ந்து (Lying rider) வார்த்தையை ஏற்க மறுத்து, சபையை வார்த்தையிலிருந்து மனிதப் பிரமாணங்களுக்கு மாற்றினது. 26இப்பொழுது, ரோமன் கத்தோலிக்க சபையானது தத்துவங்களின் பேரில் கட்டப்பட்டுள்ளது என்பதனை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) அதை அவர்கள் ஒத்துக் கொள்கின்றனரா? நிச்சயமாக; ரோமன் கத்தோலிக்க சபையும் அதை ஒப்புக் கொள்கின்றது. அதனோடு மட்டுமல்ல. ஆகையால் இதை கூறுவதால் அவர்களுடைய இருதயம் புண்படாது. ஏனென்றால், அவர்கள் அதை அறிந்துள்ளனர். சமீபத்தில், அதாவது பத்து வருடங்களுக்கு முன்னர், மரியாள் உயிர்த்தெழுந்தாள் என்னும் வேறொரு கொள்கையை அவர்கள் புகுத்தியிருக்கின்றனர். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களில் எத்தனைப்பேருக்கு ஞாபகம் உள்ளது? ('ஆமென்') செய்தித்தாள்கள் இதனைப் பிரசுரித்தன. நிச்சயமாக பாருங்கள்? இவையனைத்தும் ''ஸ்தாபனக் கொள்கையே யன்றி'' தேவனுடைய வார்த்தையல்ல. பாருங்கள்? அண்மையில் நான் ரோமன் கத்தோலிக்க போதகர் ஒருவரை பேட்டி கண்டபோது, அவர், “திரு. பிரான்ஹாமே, தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார்' என்றார். நானோ 'தேவன் தம் வார்த்தையில் இருக்கிறார்' என்று பதிலுரைத்தேன். அப்பொழுது அவர், 'நாம் இதைக் குறித்து தர்க்கிக்கக் கூடாது' என்றார். 27நான் அவரிடம், ''நான் தர்க்கிக்கவில்லை. நான் அறிந்துள்ளதை மாத்திரம் கூறுகிறேன்'' என்றேன். தேவன் தம் வார்த்தையிலிருக்கிறார் என்பது முற்றிலும் உண்மையாகும். 'ஒருவன் எதையாவது அதனுடன் கூட்டினால் அல்லது எடுத்துப் போட்டால்...' என்று வேதம் கூறுகின்றது. அவர், ''கிறிஸ்து தம் சபைக்கு வல்லமையை அளித்து, அவர்கள் பூமியில் கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் என்று கூறினார்'' என்றார். 'ஆம், அது முற்றிலும் உண்மை ' என்றேன் நான். அவர் “அந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, பாவத்திலிருந்து விடுவிக்க எங்களுக்கு அதிகாரமுண்டு என்று நாங்கள் எண்ணுகிறோம்'' என்றார். அப்பொழுது நான், “சபை எதை செய்யவேண்டுமென்று கூறப் பட்டதோ, அல்லது எதை செய்ததோ, அவ்விதமாகவே நீங்கள் செய்தால் நான் ஒப்புக் கொள்வேன். அப்படியானால் உங்கள் பாவமன்னிப்புக் கென்று நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளத் தண்ணீர் இங்கு ஆயத்தமாயிருக்கின்றது- ஒருவன் பாவம் நிவர்த்தியாகிவிட்டது என்று சொல்வதனால் அது நிவர்த்தி யாகாது'' என்றேன். பாருங்கள்? பாருங்கள்? அது முற்றிலும் சரியாகும். 28திறவுகோல்களைக் கொண்ட பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்ததைக் கவனியுங்கள். ரோமன் கத்தோலிக்கர் பேசிக் கொள்ளும் திறவுக் கோல்கள் பேதுருவினிடத்தில் தான் இருந்தன என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். குழுமியிருந்த ஜனங்கள், 'சகோதரரே, இரட்சிக்கப்படு வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டனர். பேதுரு பிரதியுத்தரமாக! ''நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றான். (எதற்காக?) ''பாவ மன்னிப்புக்கென்று. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'. அது உண்மையாகும். அதனுடன் அது முற்றுபெற்றது. எல்லாம் முடிவுறு கின்றது. அது அதைச் செய்தது. இப்பொழுது, ஆனால் நான் உங்களுக்குக் காண்பித்தவண்ணம், அந்திக்கிறிஸ்து வந்து... என்னே ஒரு வெளிப்பாடு! என்னே, என்னே! ஆகவே இதைக் குறித்து சிந்திக்கும்போது இத்தனை ஆண்டுகளாக அது நிகழ்ந்தேறுவதை நாம் காண்கையில், இங்கே அது நிச்சயமாக, நேரடியாக 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று நாமறியலாம். 29இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரத்துக்கும் 7-ம் அதிகாரத்துக்கும் ஒரு இடைவேளி உண்டு என்று நாம் கவனிக் கிறோம். வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரம் ஒரு சம்பவத்தை வெளிப்படுத்துகின்றது. 7-ம் அதிகாரம் காரணமின்றி எழுதப்பட வில்லை. அது காரணமின்றி இடையில் வைக்கப்படவில்லை. பாருங்கள்? அது ஒரு நோக்கத்திற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு காரியத்தை நமக்கு வெளிப்படுத்தும் வெளிப்பாடாகும். கணித ரீதியாக இவ்வறிவுக்கெட்டாத இரகசியம் எவ்வளவு அழகாக வேதத்திற்குள் சரியாகப் பொருந்துகின்றது என்பதைப் பாருங்கள். தேவனுடைய கணிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) இல்லையென்றால் நிச்சயமாக நீங்கள் இழந்து போக... இல்லாவிடில், நீங்கள் தேவ னுடைய வார்த்தையை சரிவர புரிந்து கொள்ளாமல் தவறிப் போவீர்கள். தேவனுடைய ஒழுங்கின்படி அமைந்துள்ள கணிதத்தில் நான்கு அல்லது ஆறு அல்லது மற்றொன்றை என்ற உங்கள் சொந்த எண்ணிக்கைகளைப் புகுத்துவீர்களானால் எங்கோ ஒரு இடத்தில் ஒரு பசு மரத்தின் மேல் புல்லைத் தின்பது போன்ற ஆபத்தும் நேரிட வகையுண்டு. நீங்கள், நிச்சயமாக தவறிப் போவீர்கள். ஏனென்றால் தேவன் ஒரு போதும்... தேவனுடைய எல்லா வார்த்தையும் கணித ரீதியாக அமைந்துள்ளது. ஆம், ஐயா! மிகவும் பூரணமானது. அதைப் போன்று கணிதத்தில் பரி பூரணமான வேறெந்த இலக்கியமும் எழுதப்படவில்லை. 30இப்பொழுது, 8-ம் அதிகாரம், ஏழாம் முத்திரை நிகழ்ந்த ஸ்தலத்தை மாத்திரம் குறிப்பிடுகின்றது. வேறொன்றும் அங்கு வெளிப்படவில்லை. ஏழாம் முத்திரையில் வேறொன்றும் வெளிப்படுத்தப்படவில்லை... இப்பொழுது, அதற்கும் 7-ம் அதிகாரத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இது ஏழாம் முத்திரையின் வெளிப்படுதலானது. மிகவும் அமைதியாய் (mute) உள்ளது. எனக்கு மாத்திரம் சமயமிருந்தால், சில பகுதிகளை (வேதத்திலுள்ள- தமிழாக்கியோன்)... நான் உங்களுக்குக் காண்பிக்க முயற்சிப்பேன். ஆதியாகமம் தொடங்கி, இந்த ஏழாம் அதி... அல்லது இந்த ஏழாவது முத்திரை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாகமத்தில், துவக் கத்திலிருந்தே இந்த ஏழாவது முத்... இந்த முத்திரைகள் தொடர்ந்து வந்தன (moved right up) இன்று காலையில் நாம் இவைகளைக் குறித்து பேசினது நினைவிலுண்டா ? ஆகவே, இன்றிரவும் அதைக் குறித்து நாம் பேசும்போது, ஏழாம் முத்திரையையடைந்தவுடனே அது வேறுபடுகின்றது என்பதைக் கவனிக்கவும். (சகோதரன். பிரான்ஹாம் தன் விரலை ஒரு முறை சொடுக்கு கின்றார் - ஆசி) ஆம். 31இயேசுகிறிஸ்து முடிவு காலத்தைக் குறித்து பேசினபோது அவர் ஆறு முத்திரைகளைப் பற்றிப் பேசினார். ஆனால் ஏழாம் முத்திரையை அடைந்தபோது, அவர் நிறுத்திக் கொண்டார், இதோ அது, பாருங்கள். இது ஒரு மகத்தான காரியம். இப்பொழுது, இப்பொழுது ஆறாம் முத்திரையையும் ஏழாம் முத்திரையையும் இணைக்கும் 7-ம் அதிகாரத்தைக் குறித்து நாம் சற்று பேசலாம். ஏனெனில் நாம் பேசுவதற்கு அது ஒன்று மாத்திரமேயுள்ளது. ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையில் இஸ்ரவேலர் அழைக்கப்படுகின்றனர். இப்பொழுது 'யேகோவா சாட்சிகள்' (Jehovah's Witness) என்னும் குழுவைச் சார்ந்திருந்த என் நண்பர்கள் அநேகர் இங்கிருக் கின்றனர். ஒருக்கால் அவர்களில் சிலர் இன்னும் யேகோவா சாட்சிகளாக இருக்கலாம். அவர்களின் தலைவரான திரு. ரஸ்ஸல் (Russell) என்பவர், இந்த 1,44,000 பேர் கிறிஸ்துவின் இயற்கைக்கு மேம்பட்ட மண வாட்டியைக் குறிப்பதாகக் கருத்து கொண்டிருந்தார். பாருங்கள்? ஆனால் அது உண்மையல்ல. இவர்களுக்கும், சபையின் காலங்களுக்கும் எவ்வித தொடர்பு மில்லை. அவர்கள் முற்றிலும் இஸ்ரவேல் ஆவர். இன்னும் சில நிமிடங் களில் அவ்வாக்கியங்களைப் படிக்கப் போகின்றோம். இப்பொழுது, ஆறாவது முத்திரை... இப்பொழுது இந்த இடைவெளி முத்திரைகள் இடையேயுள்ள இந்த 1,44,000 யூதர்கள், சபையானது எடுக்கப்பட்ட பின்னர், உபத்திரவ காலத்தில் அழைக்கப்பட்டு முத்திரிக்கப்பட்ட வர்கள். பாருங்கள்? எனவே அவர்களுக்கும் சபையின் காலங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது வேதவாக்கியங்களுடன் அருமையாகப் பொருந்துகின்றது. தானியேல் கூறின கடைசி மூன்றரை வாரங்கள் தானியேலின் “ஜனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. புறஜாதிகளுக் கல்ல. தானியேலின் 'ஜனங்களுக்கு, '' தானியேல் ஒரு யூதன். 32இஸ்ரவேல் ஜனங்கள் அடையாளங்களால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிகளை மாத்திரமே விசுவாசிப்பர் என்பதை இப்பொழுது கவனிக் கவும். அப்போஸ்தல சபையின் காலம் முதற்கொண்டுள்ள சபையின் காலங்களில் பிராடெஸ்டண்ட் சபைகளுக்கு ஒரு தீர்க்கதரிசியும் கூட ஒருபோதும் இருந்ததில்லை. அவ்விதம் யாராகிலும் இருந்தால் எனக்குக் காண்பியுங்கள். ஆதி அப்போஸ்தலக் காலத்தில் அகபு என்னும் தீர்க்க தரிசி ஒருவன் இருந்தான். அவன் தேவனால் உறுதிபடுத்தப்பட்ட தீர்க்க தரிசி. ஆனால் புறஜாதியார் தேவனுடைய உரிமைக்குள் வந்தபோது, நாம் நேற்று படித்ததுபோல, பேதுருவுக்குப் பிறகு பவுல் புறஜாதி களிடம் திரும்பி, அவருடைய நாமத்திற்கென்று புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்டம் ஜனங்களை-அதாவது மணவாட்டியை-ஆயத்தம் செய்ய தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றிருந்தான். ஆனால் புறஜாதி களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருந்ததாக வரலாற்றில் சான்று எதுவுமில்லை. நீங்களே சரித்திரத்தைப் படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள். ஏன்? தீர்க்கதரிசி புறஜாதிகளுக்கு இருந்திப்பானென்றால் அது தேவ னுடைய வார்த்தைக்கு முற்றிலும் முரண்பாடுள்ளதாக அமையும். 33முதலாவது சென்ற மிருகம் ஒரு சிங்கமாகும். அதுதான் தீர்க்க தரிசி-தேவனுடைய வார்த்தை . அடுத்ததாக சென்றது கிரியை-தியாகம், அதற்கடுத்தபடியாக சென்றது. மனிதனின் - உபாயம். ஆனால் இந்த கடைசிக் காலங்களில், இதுவரை தவறாக நடத்தப் பட்ட, இழக்கப்பட்ட, செய்யாமல் விடப்பட்ட போதிக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் சரியாக்கப்படும்; சபைக்கு மறுபடியும் வரும் என்னும் வாக்குத்தத்தத்தை நாம் பெற்றுள்ளோம். ஏனெனில் ஏழாம் தூதனின் செய்திகள் தேவனுடைய இரகசியங்களைப் பூர்த்தியாக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளைக் குறித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இவையாவும் வேதவாக்கியங்களுடன் முற்றிலு மாகப் பொருந்துகின்றன. அதுதான் காரணம். 34இப்பொழுது, அறிவிக்கப்பட்ட அந்த மனிதன் தோன்றும்போது, அது மிகவும் எளிமையுள்ளதாயிருப்பதால், ஸ்தாபனங்கள் யாவும் அதைக் காணத் தவறிவிடும் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். சீர்திருத்தக்காரர்களின் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபனங்களுக்கும் அவர்களுடைய போதகங்களுக்கும் உறுதியாய் எதிர்க்கின்ற, தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்களா? இப்பொழுது ஒரே ஒரு மனிதன் மாத்திரமே அந்த தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை ஏற்று நிறைவேற்ற முடியும். நான் அறிந்தவரை அது பூமியில் இருந்த ஒரே ஒரு ஆவி... அது அவனுடைய காலத்தில் தோன்றும் எலியாவாயிருக்க வேண்டும். அது அவ்விதமாகவே இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அது கிறிஸ்துவின் ஆவியேயன்றி வேறல்ல. 35கிறிஸ்து தோன்றினது போது, அவர் தேவனுடைய பரிபூரணமாய் இருந்தார். அவர் அந்த தீர்க்கதரிசி. அவர் தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் தேவன். பாருங்கள்? பாருங்கள்? கிறிஸ்துவை அக்காலத்தவர் எவ்விதம் வெறுத்தனர் என்பதைப் பாருங்கள். ஆனால் எவ்வாறு தோன்றுவாரென்று தேவனுடைய வார்த்தை கூறினதோ, அவ்வண்ணமாகவே அவர் தோன்றினார். அவர் தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவருக்குள் வாசமாயிருந்து ஜனங்களின் சிந்தையைப் பகுத்தறிதல் போன்ற காரியங்களைச் செய்த தேவனுடைய ஆவியை ''அசுத்த ஆவியென்று'' அவர்கள் தேவதூஷணம் செய்த கார ணத்தால், தேவனுடைய இராஜ்யத்துக்கு அவர்கள் புறம்பாயினர். ''அவரை குறி சொல்லுகிறவரென்றும் பிசாசென்றும்'' அழைத்தனர். 36குறி சொல்லுகிறவன் ஒரு பிசாசு, பாருங்கள் பிசாசின் ஆவி. நிச்சயமாக. அது உங்களுக்குத் தெரியுமா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி). முற்றிலும் சரி. குறி சொல்பவன் ஒரு தீர்க்கதரி சியைப் போல் பாவனை செய்கிறபடியால், அது தேவனுக்கு முன்பாக தேவதூஷணமாகக் கருதப்படும். வேதத்தில் கூறிய தானியேலின் மூன்றரை வாரங்களுடன் எவ் வளவு நன்றாகப் பொருந்துகிறது என்று இப்பொழுது பாருங்கள். கவனியுங்கள்! இஸ்ரவேலின் விசுவாசிக்கு - விசுவாசிகளுக்கு அளிக்கப்பட்ட தீர்க்கதரிசியை, அவன் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு விசுவாசிக்க வேண்டுமென்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட் டுள்ளது. “உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாக அல்லது தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். சொப்பனங்களுக்கு அர்த்தம் விவரிப்பேன்.'' யாருக்காகிலும் சொப் பனம் நேர்ந்தால், தீர்க்கதரிசியால் அதன் அர்த்தத்தை விவரிக்க இயலும். ஒருவன் தரிசனம் கண்டால், அது என்னவென்பதை அவன் வெளிப் படையாகக் கூறுவான். 'தரிசனங்களின் மூலமாகவும் சொப்பனங் களின் மூலமாகவும் என்னை வெளிப்படுத்துவேன், என்னை வெளிப் படுத்துவேன். அந்த தீர்க்கதரிசி கூறினது நிறைவேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள். ஏனெனில் நான் அவனுடன்கூட இருக்கிறேன். அது நிறைவேறாமற் போனால் அவனுக்குப் பயப்பட வேண்டாம்''. ஆம், அது சரி ”அவனிடமிருந்து விலகுங்கள்; அவனைத் தனியே விடுங்கள்.'' இப்பொழுது அந்த... 37இப்பொழுது இஸ்ரவேலர் எக்காலத்தும் அதை மாத்திரமே விசுவாசிப்பர். நீங்கள் அதைக் காணவில்லையா? ஏன்? இன்றிரவு நான் கற்பிக்கும் பாடத்தை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஏன்? ஏனெனில் தேவன் இஸ்ரவேலருக்கு அளித்த கட்டளையாகும் அது. புறஜாதியார் எத்தனை கைப்பிரதிகளை இஸ்ரவேல் நாட்டில் கொடுத்தாலும் எனக்குக் கவலையில்லை. உங்கள் அக்குளில் வேத புத்தகத்தைக் கொண்டவர்களாய் இஸ்ரவேல் நாட்டிற்குச் சென்று இதை அதை அல்லது மற்றவை நிரூபிக்க நீங்கள் முயன்றாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் தீர்க்கதரிசியையன்றி வேறு யாரையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது முற்றிலும் உண்மை . ஏனெனில் தீர்க்கதரிசி மாத்திரமே தேவனுடைய வார்த்தையை சரியான இடங்களில் பொருத்தி, தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்கமுடியும். அப்பொழுது அவர்கள் நம்புவார்கள். அது உண்மை . 38பென்டன் ஹார்பர் (Benton Harbour) என்ற ஸ்தலத்தில், வாழ் நாள் பூராவும் குருடனாயிருந்த ஜான் ரையன் (John Ryan) என்பவர் பார்வையடைந்தார். அவர்கள் “தாவீதின் வீட்டிற்கு” (House of David) என்னைக் கொண்டு சென்றனர். அங்கிருந்த நீண்ட தாடியை வைத்திருந்த யூத ரபி ஒருவர் என்னிடம், “நீங்கள் எந்த அதிகாரத்தினால் ஜான் ரையனுக்குப் பார்வையளித்தீர்?'' என்று வினவினார். நான் “தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்'' என்று பதிலுரைத்தேன். அவர் தேவனுக்குக் குமாரன் உள்ளார் என்பதை நம்பமுடியாது'' என்றார். பாருங்கள்? மேலும் அவர், “தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை மூன்று கடவுள்களாக்கி யூதர்களிடம் கொடுக்க முடி யாது. நீங்களெல்லாரும் அஞ்ஞானிகளின் கூட்டம்!'' என்று கூறினார். அப்பொழுது நான், ''நான் அவ்வாறு தேவனை மூன்று துண்டு களாக வெட்டுவதில்லை'' என்று கூறிவிட்டு, ''ரபீ, உங்கள் தீர்க்கதரிசி களில் ஒருவர் தவறாகக் கூறினார் என்ற நீங்கள் விசுவாசிப்பது உங்க ளுக்கு விசித்திரமாயில்லையா?'' என்று கேட்டேன். அவரோ, “எங்கள் தீர்க்கதரிசிகள் தவறு ஒன்றையும் கூறின தில்லை '' என்றார். நான், ''ஏசாயா 9:6ல் ஏசாயா யாரைக் குறித்து உரைத்தார்?'' என்று கேட்டேன். “அவர் மேசியாவைக் குறித்து'' என்றார். “அப்படியானால் மேசியா என்பவர் மனித-தீர்க்கதரிசியாயிருப் பார், அப்படித்தானே?'' என்று கேட்டேன். அவரும், 'ஆம் ஐயா, அது உண்மை ' என்றார். நான், “இயேசு எங்கே அதற்கு குறைவாக இருந்தார் என்று எனக்குக் காண்பியுங்கள்'' என்றேன். அவர் சொன்னார். 'மேசியா வாகிய தீர்க்கதரிசிக்கும், தேவனுக்குமுரிய உறவு என்னவாயிருக்கும்?' என்று நான் வினவினேன். அவர் பிரதியுத்தரமாக, 'அவர் தேவனாயிருப்பார்' என்றார். நானும், ''நீர் கூறுவது உண்மையே; இப்பொழுது, அவ்விதமே நீங்கள் அதை வார்த்தையில் பெற்றிருக்கிறீர்கள்,'' என்றேன் 102. அந்த யூதனுக்குக் கண்களில் நீர் ததும்பியது. அவர் என்னிடம், “வேறு ஒரு முறை நீங்கள் சொல்வதைக் கேட்க விரும்புகிறேன்'' என்றார். நான், “ரபீ, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?'' என்றேன். அவர், “கவனியுங்கள், தேவன் இந்த கல்லுகளினால் ஆபிர காமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்' என்றார். அவர் புதிய ஏற்பாட்டிலிருந்து வசனம் கூறுகிறார் என்று எனக்குத் தெரியும். “சரி, அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் ரபீ?'' என்று நான் கேட் டேன். அவர், ''அதை நான் பிரசங்கித்தால், கீழே பள்ளத்தாக்கில் நான் என்னுடைய போஜனத்திற்காக நான் பிச்சை எடுக்க நேரிடும்'' என்றார். (அவருள்ள ஸ்தலம் மலையின் மேலுள்ளது). நான் அவரிடம், “அப்படியானால் நான் கீழே சென்று என்னுடைய சாப்பாட்டிற்காக பிச்சையே எடுத்துக் கொண்டிருப்பேன். நான் தேவனிடமிருந்து அகன்று போய் என் பெயர் அந்த கட்டிடத்தில், பொன்னினால் பொறிக்கப்படுவதைக் காட்டிலும், நான் தேவனுடன் ஒன்றுபட்டு, உப்பு பிஸ்கோத்தையும் தண்ணீரையும் குடித்து வாழ் வதையே விரும்புவேன்” என்றேன். யூதனுக்கு இன்னமும் பணத்தின் பேரில்தான் சிந்தையுள்ளது. பாருங்கள்? பாருங்கள்? அதன் பின்னர் அவர் நான் சொல்வதற்குச் செவிகொடுக்க மறுத்து விட்டார். ஆகவே, அவர் உள்ளே சென்று விட்டார். 39ஆனால், அதுவேதான். நீங்கள் தேவனை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக்கி, “பிதா, குமாரன், பரிசுத்தாவி'' என்றழைத்து, மூன்று தெய்வங்களாக ஒரு யூதனுக்கு சமர்ப்பிக்க முடியாது. கர்த்தருடைய கற்பனை யாதெனில், ''என்னையன்றி வேறே தேவர்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்...'' 'இயேசு என்ன கூறினார்? ”இஸ்ரவேலே கேள், நானே உங்கள் தேவனா கிய கர்த்தர் ஒரே தேவன்,'' மூன்றல்ல. யூதர்களுக்கு மூன்று தெய் வங்களை நீங்கள் அளிக்கமுடியாது. இல்லை. எந்த ஒரு தீர்க்கதரிசியும் மூன்று தெய்வங்களைக் குறித்து பேச மாட்டான். இல்லை. அவன் அவ் விதம் பேசுவதை நீங்கள் கேட்கவே முடியாது. இல்லை ஐயா. ஏனெனில் அது அஞ்ஞான பழக்க வழக்கங்களிலிருந்து தோன்றியதாகும். ஆம், ஐயா. 40கவனியுங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள். அது மாத்திரமல்ல... அவர்களைக் குறித்து நாம் சற்று படித்திருக்கிறோம். நீங்கள் ஒலி நாடாக்களைக் கேட்டும் இன்னும் மற்ற விதங்களிலும் அவர்களைக் குறித்து நீங்கள் அதிகம் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தீர்க்கதரிசிகளின் அடையாளங்களைக் கொண்டவர்களாய், முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டவர்களாயிருப்பார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் அவர்களுக்குச் செவி கொடுப்பார்கள். இப்பொழுது யேகோவா சாட்சி குழுவைச் சார்ந்த நண்பர்களே, இதைப் புரிந்து கொள்ளுங்கள். 1,44,000 பேருக்கும் மணவாட்டிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த உங்கள் கருத்தை ஆதரிக்க வேதத்தில் எந்த பகுதியுமில்லை. இல்லை ஐயா. அவர்கள் மணவாட்டியல்ல, யூதர்கள்- தானியேலின் எழுபது வாரங்களின் கடைசி பகுதியில் தோன்றும் மூன்றரை வருட காலங்களில் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்தாம் இவர்கள். 41நான் - நான் இதைத் திரும்பத் திரும்பக் கூறுவது உங்களுக் கல்ல. இந்த செய்தியடங்கிய ஒலிநாடாக்கள் எல்லாவிடங்களிலும் செல்கின்றன என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அதன் காரண மாகவே இதனை நான் திரும்பத் திரும்ப உரைக்கிறேன். இயேசு யாரென்பதை அறிந்து கொள்ளக் கூடாதவாறு ...இயேசு... அல்லது... தேவன் யூதர்களைக் குருடாக்கினார் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் மாத்திரம் நியாயப்பிரமாண காலத்தில் தேவன் அவர்களுக் களித்த தீர்க்கதரிசியை ஏற்றுக் கொண்ட சிந்தையை அப்பொழுதும் பெற்றிருந்தால், இயேசு செய்த அற்புதங்களையும் அடையாளங் களையும் கண்டு 'இவர் தான் மேசியா'வென்று அவரை ஏற்றுக் கொண் டிருப்பார்கள். பின்னை ஏன் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை? 42அக்காலத்தில், ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட அவருடைய அப்போஸ்தலர் போன்றவர்கள் இயேசு செய்தவைகளைக் கண்டு அவரை அறிந்து கொண்டனர். மற்றவர்கள் ஏன் அவரைக் கண்டுகொள்ளத் தவறினர்? பாருங் கள். ஏனெனில் அவர்கள் காணாதவாறு குருடாக்கப்பட்டனர். இப் பொழுதும்கூட அவர்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒரு காலத்தில் ஒரு தேசமாகும்வரை அதைக் காணத் தவறுவர். அதாவது... 43தேவனுடைய வார்த்தை ஒருபோதும் பொய்யாகாது என்பதை நினைவுகூரவும். நீங்கள் எவ்வளவாக உணர்ச்சி வசப்பட்டாலும், இன்னும் என்னென்ன சம்பவித்தாலும் அதைக் குறித்து ஒன்றுமில்லை. ஆயினும், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. தேவன் கூறிய விதமாகவே அது சம்பவிக்கும். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையின்படி இவையாவும் சம்பவிக்க வேண்டியதென்பதை நாம் உணருகிறோம். இயேசு தம்மை தீர்க்கதரிசியென்று பூரணமாக நிரூபித்த போதிலும், அவர்கள் அவரை அறிந்து கொள்ளாமைக்கு அதுவே காரண மாகும். கிணற்றடியிலிருந்த அந்த சமாரிய ஸ்திரீயும் கூட- அவர் அதற்கு முன் சமாரியாவுக்கு சென்றதில்லை. அவர் சமாரியாவுக்குச் சென்று, அவ்வழியாகச் செல்ல அவசியமாயிருக்கிறது என்று கூறினார். அவர் அங்கு சென்றபோது, அந்த ஸ்திரீ அங்கிருந்தாள். அக்காலத்திலிருந்த மதபோதகர்களைக் காட்டிலும் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மேலான நிலையில், அவள் தன் பாவநிலையிலும் காணப்பட்டாள். அவ்வாறே அவள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டாள். நிச்சயமாக. இப்பொழுது, பாருங்கள்? அக்காலத்து மதபோதகர்கள் அவரைப் புறக்கணித்தாலும் அவர்களிடையேயுள்ள ஒரு உத்தமமான மனிதன் (நிக்கோதேமு) அவர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிவதாக அவன் ஒப்புக் கொண்டான். 44அமெரிக்காவின் தென்நாடுகளிலுள்ள ஒரு வைத்திய நிபுண ருடன் அண்மையில் அவருடைய அலுவலகத்தில் நான் சம்பாஷிக்க நேர்ந்தது. அவர் லூயிவில் என்னும் ஸ்தலத்தில் பணிபுரியும் ஒரு நிபுணர்! அது மாத்திரமல்ல, அவர் பெருந்தன்மையுடைய ஒருவர். அவரி டம் நான், 'டாக்டர், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்' என்றேன். அவரும் 'சரி' என்றார். நான், 'உங்கள் வைத்திய அடையாளமாக, ஒரு கோலில் ஒரு பாம்பு சுற்றியுள்ளதே, அது எதைக் காண்பிக்கிறது?'' என்று கேட்டேன். அவர், 'எனக்குத் தெரியாது' என்று பதிலுரைத்தார். நான் “இதுதான் அதன் அடையாளம். மோசே, உண்மையான கிறிஸ்துவுக்கு அடையாளமாக வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினானே, அது தெய்வீக சுகமளித்தலின் சின்னமாயுள்ளது'' என்றேன். இப்பொழுது, இன்றைக்கு, மருந்துகள் தெய்வீக சுகமளித்தலுக்கு அடையாள மாயுள்ளது. அதை அநேகர் விசுவாசிப்பதில்லையெனினும், திறனுள்ள உண்மையுள்ள வைத்தியர்கள் அதை நம்புகின்றனர். ஆனாலும் அவர்களில் அநேகர் அதை நம்புவதில்லை. ஆனால் அவர் களிடம் காணப்படும் அந்த அடையாளச் சின்னம், அவர்கள் நம்பி னாலும் சரி நம்பா விட்டாலும் சரி, சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பாருங்கள்? அது சரி. ஆம், வைத்திய அடையாளமாக வெண்கலச் சர்ப்பம் ஒரு கோலில் தொங்கிக் கொண்டுள்ளது. 45இப்பொழுது இந்த யூதர்களைக் கவனியுங்கள். இப்பொழுது, குருடாக்கும் செதில்கள் இவர்கள் கண்களை மூடிக்கொண்டுள்ளன. அவர்கள், அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியாது. அது தேவனால் அங்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தீர்க்க தரிசிகள் வரவிருக்கும் காலம்வரை அது அவ்வாறே இருக்கும். நீங்கள் ஒருக்கால் அவர்களிடம் மிஷினரிமார்களை அனுப்பலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்த தீர்க்கதரிசிகள் தோன்றும்வரை, இஸ்ரவேலர் மனம் மாறுவதில்லை. புறஜாதி சபை எடுக்கப்பட்ட பின் னரே அது சம்பவிக்கும், காளையின் காலத்தில், சிங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. காளையின் ஆவி புறப்பட்டுச் சென்றதாக தேவன் தம் வசனத் தில் கூறியுள்ளார். சீர்திருத்தக்காரரின் காலத்தில் மனிதன் புறப்பட்டுச் சென்றான். பாருங்கள்? நீங்கள்... அந்தந்தக் காலத்துக்குரியவைகளையே அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியும். அவர்கள் இப்பொழுது குருடாக்கப்பட்டிருக்கின்றனர். அவ் வளவுதான். இப்பொழுது கவனியுங்கள். ஆனால் புறஜாதிகளின் காலம் முடிவடையும் ஒரு சமயம் வரும். ஒரு மரமுண்டு, அதன் வேர்கள் யூதர்களாகும். அந்த மரம் வெட்டப் பட்டு, அதில் “காட்டொலிவ மரமாகிய'' புறஜாதிகள் ஒட்டவைக்கப்பட் டனர். அது இப்பொழுது கனி கொடுத்துக் கொண்டு வருகின்றது. நான் இப்பொழுது பேசிக் கொண்டிருந்த (மணவாட்டி மரமாகிய) புறஜாதி மணவாட்டி முறிக்கப்பட்டு தேவனுடைய சமூகத்திற்கு எடுக்கப்பட்ட பின்னர், அவிசுவாசமுள்ள புறஜாதிகளை-உறங்கிக் கொண்டிருக்கிற கன்னிகைகளை-நிர்மூலமாக்கி, மறுபடியும் யூதர்களை அவர் ஒட்டு போடு வார். அவ்விதம் செய்யப் போவதாக அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். 46அந்தக் காலம் வரை நீங்கள் எங்கு இருக்க வேண்டுமென்று... நீங்கள் இப்பொழுது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று திண்ண மாக அறிந்திருந்தால் நலம். இல்லாவிடில், நீங்கள் இருளில் தடுமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். ) இப்பொழுது, அக்காலத்தில்தான் யூதர்கள் மனம் திரும்புவார்கள். இப்பொழுது, சபை காலத்தைப்போல, வாக்குத்தத்தம் பண்ணப்பட் டிருக்கும் அபிஷேகத்தின் மூலம், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள் வார்கள். ஆனால் இப்பொழுது புறஜாதிகளின் காலம் நடந்து கொண் டிருக்கும் இச்சமயத்தில், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்க்க தரிசிகளும் எத்தகைய செய்தியைப் பிரசங்கிப்பார்கள் என்று இப் பொழுது நாம் பார்க்கலாம். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைத் தெளிவாக நாம் காணலாம். முன் குறிக்கப்பட்ட 1,44,000 பேர்-இஸ்ரவேலில் மீதியானவர்கள்-தேவனுடைய முத்திரையைப் பெற்றுக் கொள்வார்கள், 47இப்பொழுது நாம் படிக்கலாம். இப்பொழுது நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். கூடுமானால் என்னோடுகூட நீங்களும் இதைப் படிக்க விரும்புகிறேன். ஏனெனில் சற்று கழித்து மறுபடியும் நான் இதைக் குறித்துச் சொல்லப் போகிறேன். 7-ம் அதிகாரம். இது ஆறாம் முத்தி ரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே உள்ளது. இவைகளுக்குப் பின்பு - இவைகளுக்குப் பின்பு, (அதாவது இம் முத்திரைகளுக்குப் பின்பு) ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டது. அதுதான் உபத்திரவ காலம். எல்லோரும் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டது. உபத்திரவ காலம் ஆரம்பமானது. அதன் பின் என்ன? பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது சமுத்திரத்தின் மேலாவது ஒரு மரத்தின் மேலாவது காற்று அடியாதபடிக்கு பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். (நான்கு தூதர்கள்) ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறி வரக் கண்டேன். அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக் காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும்... பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப் படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். மணவாட்டியல்ல, “ஊழியக்காரர்''. குமாரர்கள் அல்ல. ”ஊழியக் காரர்''. இஸ்ரவேலர் எப்பொழுதுமே தேவனுடைய ஊழியக்காரராயி ருந்தனர். சபையோ பிறப்பின் மூலம் அவருடைய குமாரர். கவனியுங்கள். இஸ்ரவேல் ஒவ்வொரு இடத்திலும் எப்பொழுதும் வேலைக்காரனா கவே இருக்கிறான். ஆபிரகாம் அவருடைய ஊழியக்காரன். நாமோ ஊழியக்காரர்களல்ல: நாம் பிள்ளைகள், குமாரரும் குமாரத்திகளும். ஆம். நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் இப்பொழுது கவனியுங்கள். நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் ... நமது தேவன் அவர்களின் நெற்றிகளில் முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன். இப்பொழுது இதனைப் படிக்கும்போது, நீங்கள் மிகவும் நன்றாகக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். 48அவர் அவர்கள் பெயர்களை முழுமையாகக் குறிப்பிடுகிறார். இப் பொழுது, இங்கு ஆங்கிலோ -இஸ்ரவேல் (British-Israel discerner) பகுத்தறிவாளர் அமர்ந்திருக்க நேர்ந்தால், இது எவ்விதம் அதைப் பொய் யாக்குகின்றது என்பதை கவனியுங்கள். பாருங்கள். யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் (“கோத்திரம்' என்று அழைக்கப்படுகின்றனர்) ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்; காத்... கோத்திரத்தில் முத்திரை போடப் பட்டவர்கள் பன்னீராயிரம்; இப்பொழுது, கோத்திரங்களைக் கவனியுங்கள். ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்... நப்தலி கோத்திரத்தில் முத்திரை போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள்... பன்னீராயிரம். சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள்... பன்னீராயிரம், லேவி கோத்திரத்தில் முத்திரை போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் (இஸ்ஸாக்கர்- நீங்கள் இவ்விதம் உச்சரிக்கிறீர்கள் என்று ஊகிக்கிறேன்) கோத்தி ரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில்... முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் (of all the... எல்லாவற்றிலும் என்று சகோதரன் பிரான்ஹாம் வாசிக்கிறார் - தமிழாக்கியோன்) முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 49இப்பொழுது, அங்கே பன்னிரண்டு கோத்திரங்கள். ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் பன்னீராயிரம் பேர்; பன்னீராயிரத்தை பன்னிரண் டால் பெருக்கினால் எவ்வளவு? -(சபையார் 1,44,000 என்று கூறு கின்றனர்- ஆசி) 1,44,000. இப்பொழுது கவனியுங்கள். அவர்களெல் லாரும். இஸ்ரவேல் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது, கவனியுங்கள். இவைகளுக்குப் பின்பு. இவர்களுக்குப் பின்பு வேறொரு கூட்டம் வருகின்றது. இப்பொழுது, மணவாட்டி ஏற்கனவே சென்று விட்டாள் என்று நாமறிவோம். ஆனால் இந்தக் கூட்டம் வருதைப் பாருங்கள். இவைகளுக்குப்பின்பு நான் பார்த்த போது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக் காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாதது மான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டி யானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்கா சனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். எல்லா தேசங்களும் (all the nations எல்லா தேசங்களும் என்று சகோதரன் பிரான்ஹாம் வாசிக்கிறார்) சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங் காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு; ஆமென்... எங்கள் தேவனுக்குத் துதியும்... மகிமையும்... ஞானமும்... ஸ்தோத்திரமும்... கனமும்... வல்லமையும் பெல னும் சதா காலங்களிலும் உண்டாவதாக; ஆமென். என் றார்கள். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன்... 50அவன் எப்பொழுதும் மூப்பர்களுக்கு முன்பாக நின்றிருப்பதை நாம் எல்லா முத்திரைகளிலும் கண்டோம். என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்?... இப்பொழுது, யோவான் யூதனானதலால் தன் சொந்த ஜனங்களை அடையாளம் கண்டுக்கொண்டான். அவர்களைக் கோத்திரம் கோத்திரமாக அவன் கண்டான். அது சரியா? அவர்களை அடையாளம் கண்டுக் கொண்டு, கோத்திரம் கோத்திரமாக அவர்களைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆனால் இந்த திரள் கூட்டத்தை அவன் கண்டபோது அவனுக்குக் குழப்பம் உண்டானது. இதையறிந்த மூப்பனும்; 'வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். யோவான் இப்பொழுது பதிலுரைக்கிறான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அவர்கள் யாரென்று யோவான் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் சகல கோத்திரங்களிலும் (ஆங்கிலத்தில் Kindreds), பாஷைக் காரரிலும், ஜனங்களிலுமிருந்து வந்தவர்கள்). அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத் திலிருந்து (வேறுவிதத்தில் கூறுவோமானால், மகாபெரிய உபத்திரவத்திலிருந்து) வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கி களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால் இவர்கள், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத் திலே அவரைச் சேவிக்கிறார்கள்; அவர்கள் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே (ஆங்கிலத்தில் அவர்கள் நடுவே (among) என்றுள்ளது தமிழாக்கியோன்) வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவது மில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக் குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவ தண்ணீருள்ள ஊற்று களண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும்... துடைப்பார் என்றான். 51இப்பொழுது நாம் முத்திரைக்கு வருவோம். நீங்கள் கவனித்தீர்களா... முதலில் இஸ்ரவேல் கோத்திரத்தாரைக் கண்டோம். பின்னர் உபத்திரவங்களில் சுத்திகரிக்கப்பட்ட சபையையும் கண்டோம். அவர்கள் மணவாட்டியல்ல. அவர்கள் மிகுந்த உபத்திரவத் திலிருந்து வந்த உத்தம இருதயங்கொண்ட திரளான கூட்டத்தார். பாருங்கள், பாருங்கள், அது சபையாகும். அவர்கள் சபையல்ல. ஏனெனில் மணவாட்டி ஏற்கனவே சென்றுவிட்டாள். இப்பொழுது இயேசுவானவர், சிங்காசனங்கள் வைக்கப்படு மென்றும், ஒவ்வொருவரும் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டுமென்றும் கூறினார் என்று நாம் கண்டோம். இப்பொழுது, இந்த யூதர் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை யினால் முத்தரிக்கப்பட்டவர்கள் என்று நாம் பார்க்கிறோம். (அது சரியா?) ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்பது என்ன? இப்பொழுது, நான் யாருடைய மனதையும் புண்படுத்துவதற் கென இதைக் கூறவில்லை. பாருங்கள். அநேக வேத பண்டிதர்கள், இரத்தத்தினால் வெளுக்கப்பட்ட திரளான கூட்டத்தார் மணவாட்டி என்று கூறுகின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அவ்வாறே 1,44,000 பேர்களும் கூட மணவாட்டியென்னும் கருத்தினை அநேக வேதபண்டிதர்கள் கொண்டுள்ளனர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் அது சரிவர பொருந்தாமல் தவறான ஒன்றாகவே இருக்க முடியும். 52கவனியுங்கள். ஓய்வுநாள் ஆசரித்தலே தேவனுடைய முத்திரை யாகுமென ஏழாம் நாள் ஆசரிப்புக்கார நண்பர்கள் கூறுகின்றனர் என்பதை நீங்கள் அறியவீர்கள். அதுதான் தேவனுடைய முத்திரை என்பதை நிரூபிக்க வேதத்தில் ஒரு வசனத்தையாவது காண நான் விரும்புகிறேன். பாருங்கள்? அது ஒரு மனிதன் உண்டாக்கின கருத்தாகும். ஆனால் எபேசியர் 4:30ஐ நீங்கள் படிப்பீர்களானால் ''அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனு டைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று கூறு கின்றது. ஆம், ஐயா. மத்தியஸ்த ஊழியம் முடிவடைந்தவுடன், தமக்குச் சொந்தமானவர்களை மீட்டுக் கொள்ள கிறிஸ்து வருகிறார். அடுத்த எழுப்புதல் கூட்டம் வரை நீங்கள் முத்திரிக்கப்படவில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினால் ஒரு முறை முத்திரிக்கப்பட்டால், தேவன் உங்களை ஏற்றுக் கொண்டாரென்பதற்கு அறிகுறியாக, அது தேவனால் பூர்த்தி செய்யப்பட்ட ஓர் கிரியையாகும். அதிலிருந்து நீங்கள் மறுபடியும் அகன்றுபோக முடியாது. 53“நான் அதைப் பெற்றிருந்தேன். இப்பொழுது அதினின்று நான் விலகிவிட்டேன்'' என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவேயில்லை. அது மீட்கப்படும் நாள் வரை நிலைநிற்கும் என்பதாய் தேவன் கூறுகின்றார். இப்பொழுது, ஊும் அதைக் குறித்து நீங்கள் தர்க்கிக்க முனைந்தால், நீங்கள் தேவனிடம் தர்க்கம் செய்யுங்கள். ''நீங்கள் மீட்கப்படும் நாள் வரை''. கவனியுங்கள், அங்கே இருந்ததுபோல... தெரிந்து கொள்ளு தலின்படி அங்கே மீதியானவர்கள் இருந்தது போலவே, தெரிந்து கொள்ளுதலின்படி இந்த யூதர்களும் இங்கே இருக்கின்றனர். எலியா முதன்முதலாக யூதரிடம் ஊழியம் செய்தபோது, ஏழாயிரம் விசுவாசிகள் தேவனுடைய கரத்தினால் காக்கப்பட்டனர். ஆனால் இப்பொழுதோ 1,44,000 பேர் முன்குறித்தலின் மூலம் தெரிந்துகொள்ளப்படும் காலம் வரப்போகின்றது. அவர்கள் அந்த நேரத்தின் செய்தியை, அந்தச் செய்தியை விசுவாசிக்கின்ற 1,44,000 பேராய் இருப்பார்களள். இப்பொழுது ஒருக்கால், நீங்கள், “ஓ, சகோதரனே, சற்று பொறும். இந்த 'தெரிந்து கொள்ளுதலைக்' குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அதை நான் வேத புத்தகத்தில் காணவில்லை'' என்று சொல்லலாம். 54இப்பொழுது நாம், அது சரியா தவறா என்று பார்க்கலாம். மத்தேயுவில் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளதா என்று ஆராயலாம். நான் சரியாக இருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். அதைப் பற்றிய குறிப்பை நான் எழுதி வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது அது என் மனதில் தோன்றியது. நாம் 30-ம் வசனத்தின் பின் அதைக் காண்போம். நாம் நேற்று இரவு 6வது முத்திரையை 30-ம் வசனத்துடன் முடித்தோம். நாம் இப்பொழுது அந்த வசனத்தைப் படிப்போம். 31-ம் வசனம். பாருங்கள்? ''மனுஷ குமாரன் மகிமையோடு வருவதை அவர்கள் காண் பார்கள்.''இப்பொழுது 31-ம் வசனம். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற் கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலுமிருந்து சேர்ப்பார்கள். (மத். 24:31) 55“தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வெளிவருவார்கள். அது என்ன சமயம்? - உபத்திரவகாலம். தேவன் தாம் தெரிந்து கொண்டவர்களை அழைப்பார். அவர்கள் தான் யூதர்கள்-தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ”தெரிந்து கொள்ளுதலைக்' குறித்து வேதம் கூறுகின்றது. பவுலும் அதைக் குறித்துச் சொல்கின்றான். அங்குள்ள கோடிக்கணக்கானவர் களின் மத்தியில், தெரிந்து கொள்ளுதலின்படியுள்ள 1,44,000 பேர் செய்தியை விசுவாசிப்பார்கள். எலியா தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களில் பாலஸ்தீனாவில் கோடிக்கணக்கானோர் இருந்தனர். ஆனால் ஏழாயிரம் பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். இப்பொழுது, “தெரிந்து கொள்ளுதலின்படி.' அவ்வாறே தங்கள் தாய் நாடாகிய இஸ்ரவேல் நாட்டில் கோடிக்கணக்கான யூதர்கள் இருக்கின்றனர். அது ஒரு நாடாயிற்று. ஆனால் 1,44,000 பேர் மாத்திரமே தெரிந்து கொள்ளப்படுவர், அவர்கள் செய்தியை கேட்டு ஏற்றுக் கொள்வார்கள். 56புறஜாதி சபையிலும் அவ்வாறே சம்பவிக்கும். அதிலொரு மண வாட்டி உண்டு. அவள் தெரிந்து கொள்ளப்பட்டவள். “தெரிந்து கொள்ளுதலின்படி அவன் அழைக்கப்படுவான்.'' கவனியுங்கள், இது சபைக்கு, தெரிந்து கொள்ளப்பட்ட விசுவாசிகளுக்கு முழுமையான முன்னடையாளமாயுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகளைத் தவிர மற்றவர் விசு வாசிப்பதில்லை. நீங்கள் ஒரு மனிதனுக்கு சத்தியத்தை எடுத்துரைத்து, தேவவசனத்தின் மூலம் அதை நிரூபித்து, அதை அடையாளங்களினாலும் உறுதிபடுத்தினாலும், அவன், “நான் அதை விசுவாசிக்கமாட்டேன்'' என்றுதான் சொல்கின்றான். நீங்கள் கூடுமானால் சற்று இன்னும் அதனுடன் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். இயேசு “பன்றிகளுக்கு முன் முத்துக்களைப் போடாதிருங்கள்'' என்றார். பாருங்கள்? ''அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள். இல்லாவிடில் அவர்கள் உங்களைக் கால்களின் கீழ் மிதித்துப் போடுவார்கள். உங்களை அவர்கள் பரிகசிப்பார்கள். அவர்களை விட்டு அகன்று சென்று விடுங்கள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால்..... '' 57சிறிது காலத்திற்கு முன்பு நான் ஒரு மனிதனிடம் சென்றேன். இல்லை, அவன் என்னிடம் வந்தான். தெய்வீக சுகமளித்தலுக்கு விரோதமாக தர்க்கித்துக்கொண்டிருந்த இடங்களிலும் அவன், ''உங்கள் தெய்வீக சுகமளித்தலின் பேரில் எனக்கு நம்பிக்கையில்லை“ என்றான். அதற்கு நான், “அது சரிதான். நான் தெய்வீக சுகமளிப்பதில்லை.'' என்றேன். அவன்... தேவன் ஒருவர் மாத்திரமே பரிபூரணர்'' என்றேன். அவன், ”தெய்வீக சுகமளித்தல் என்னும் ஒன்று கிடையவே கிடையாது'' என்றான். நானோ, “நீ அதைக் காலதாமதப்படுத்திக் கூறுகின்றாய். ஒருக்கால் இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்னால் தர்க்கம் செய்திருந்தால் சரியாயிருந்திருக்கும். ஆனால் இது வேறொரு காலம் -அதற்கு சாட்சி பகர இப்பொழுது லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஆகவே, நீ கால தாமதமாகிவிட்டாய்'' என்றேன். நல்லது, ''நான் அதை நம்ப முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை'' என்று கூறினான். நானும், 'ஆம், உன்னால் நம்பத்தான் முடியாது' என்றேன் பாருங்கள்? அவன் என்னிடம், ''உங்களிடம் பரிசுத்த ஆவி இருந்தால், பவுல் செய்ததுபோல் என்னைக் குருடாக்குங்கள் பார்க்கலாம்'' என்றான். நான், “நீ ஏற்கனவே குருடாயிருக்கும்போது, உன்னை எப்படி நான் குருடாக்க முடியும்? உன் பிதாவாகிய பிசாசானவன் சத்தியத்தைக் காணாதவாறு உன்னைக் குருடாக்கிப் போட்டான். நீ ஏற்கனவே குரு டாயிருக்கிறாய்'' என்றேன். அவன், ''நான் அதை விசுவாசிக்க மாட்டேன்; நீர் என்ன செய்ய முயன்றாலும் எத்தனை சாட்சிகளைக் கொண்டு நிரூபித்தாலும், அல்லது வேறொன்றைச் செய்தாலும், எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நான் அதை விசுவாசிக்க மாட்டேன்'' என்றான். ''நிச்சயமாக, தெய்வீக சுகமளித்தலென்பது அவிசுவாசிகளுக் கல்ல. விசுவாசிகளுக்கு மாத்திரமே உரியது அவ்வளவுதான்'' என்று பதிலுரைத்தேன். பாருங்கள்? 58அது என்ன? பாருங்கள், அங்கே தெரிந்துகொள்ளுதல் என்பது கிரியை செய்தது என்று நீங்கள் பார்க்கலாம். அதனுடன் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். இயேசுவும், “அவர்களைத் தனியே விட்டு விடுங்கள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள் அல்லவா?'' என்று அதே காரியத்தைக் கூறினார். ஆனால் அவர் ஒரு வேசியான ஸ்திரீயிடம் வந்தபோது, (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார் -ஆசி) அங்கே அனல் மூண்டது. அது என்ன? தெரிந்து கொள்ளப்பட்ட வித்து அங்கு விதைக்கப்பட்டிருந்தது. பாருங்கள்? அது அதைச் சரியாகக் கண்டு கொண்டது. அவ்வாறே அவர் பேதுருவிடம் வந்தபோதும், அங்கேயும் தெரிந்து கொள்ளப்பட்ட வித்து புதைக்கப்பட்டிருந்தது. அவர்களெல் லாரும் சத்தியத்தை அறிந்து கொண்டார்கள். ''பிதாவானவர் எனக்குக் கொடுத்த (கடந்த காலம்) யாவும் என்னிடத்தில் வரும். அவர்கள் என்னி டத்தில் வருவார்கள்,'' ஓ, என்னே ! அது எனக்கு மிகவும் பிரியமான வசனம். ஆம் ஐயா, கவனியுங்கள், விசுவாசி அதை விசுவாசிக்கிறான். 59ஆனால் அவிசுவாசிகளோ அதை விசுவாசிக்க முடிகிறதில்லை. ஆகவே , இப்பொழுது, சர்ப்பத்தின் வித்தைக் குறித்து தர்க்கம் செய்பவர் களிடம் நீங்கள் ஆதாரப்பூர்வமான வசனங்களை எடுத்துக் காண்பித் தாலும், அவர்கள் செவிகொடாமல் சென்று விடுவார்கள். அவர்களைத் தனியே விட்டு விடுங்கள். பாருங்கள் தேவன் தர்க்கம் செய்பவரல்ல. அவருடைய பிள்ளைகளும் அவ்வாறே. கவனியுங்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட 1,44,000 யூதர்களும் மிருகத்தின் ஸ்தாபன கொள்கைகளுக்கோ அல்லது விக் கிரகங்களுக்கோ தலைவணங்கமாட்டார்கள். இஸ்ரவேல் நாடு மிருகத் துடன் உடன்படிக்கை செய்துக் கொண்டிருந்தாலும், இந்த 1,44,000 பேர் மாத்திரம் வணங்க மாட்டார்கள். அவர்கள் தாம் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள். புறஜாதி சபையிலும் இப்பொழுது அதுவே நிகழ்ந்து வருகின்றது. மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்டவள். அவளை இத்தகைய கொள்கை களுக்குள் இழுத்துக் கொள்ள முடியாது. இல்லை, ஐயா ஏனெனில் அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். ஒருமுறை ஒளி அவர்களைத் தொட்டவுடன், அதனுடன் எல்லாமே சரியாகிவிட்டது. செய்தி அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிப்படுவதை அவர்கள் கண்டு, வேத வசனங்களினாலும் அது நிரூபிக்கப்படுவதை அவர்கள் காணும்போது... அவர்களுடன் இன்னும் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவ்வளவேதான். அவ்வளவேதான். அவர்களால் விளக்கம் தரமுடியாமற்போனாலும், அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர் என்று மாத் திரம் அறிவர். ஆகவே, நானும்கூட ''அநேகக் காரியங்களை நான் உங்களுக்கு விளக்க இயலாது. ஆனால் அவை யாவும் உண்மையென்று நானறி வேன்'' என்று கூறியதுண்டு. ஊஊம் சரி. 60ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே அவர் அந்த ஜனங்களை அழைக்கிறார். இதைக்குறித்து இயேசு மத்தேயு 24-ம் அதிகாரம் 31-ம் வசனத்தில் கூறியுள்ளார். அதை இப்பொழுது நாம் வாசித்தோம். பாருங்கள் எக்காளம் தொனிக்கும்போது இரண்டு சாட்சிகளின் எக்காளசத்தம் கேட்கும் காலம்தான் யூதர்களுக்குக் கிருபையின் காலமாகும். கவனியுங்கள். ஒரு எக்காளம் தான் தொனிக்கிறது. அவர் ''எக்காளம் ஊதுங்கள்“ என்கிறார். இங்கே 31-ம் வசனத்தைப் பாருங்கள். ''வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை (ஒருவன் அல்ல, பாருங்கள், அங்கே இருவர் உள்ளனர்) அனுப்புவார்.“ அது என்ன? தேவன் பேச ஆயத்தமாகும்போது, எக்காள சத்தம் தொனிக்கிறது. அது எக்காலத்திலும் அவர் யுத்தத்திற்கு அழைக்கும் அவருடைய சத்தமாகும். பாருங்கள். தேவன் பேசுகின்றார். அப்பொழுது இத்தூதர்கள் எக்காள சத்தத்தோடே புறப்பட்டு வருகின்றனர். 61வேறொன்றைக் கவனித்தீர்களா? கடைசி தூதனின் செய்தியின் போது எக்காளம் தொனிக்கின்றது. முதலாம் தூதனின் செய்தியின் போதும் இரண்டாம் தூதனின் செய்தியின் போதும், அவர் அதை அனுப் பினபோதும் எக்காளம் தொனித்தது. கவனியுங்கள். முத்திரைகள் அறி விக்கப்பட்டபோது, ஒரு கூட்ட ஜனங்களை அழைப்பதற்கென அது தேவனுடைய செய்கையாயிருந்தது. ஆகவே ஒரே எக்காள சத்தம், ஆனால் ஏழு முத்திரைகள் உடைக்கப்பட்டன. கவனியுங்கள், “தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களை வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.'' நாம் பார்த்தபடி இயேசு ஆறு முத்திரைகளைக் குறித்து சொன்னார். ஆனால் ஏழாம் முத்திரையைக் குறித்தல்ல. ஏழாம் முத்திரையைக் குறித்து அவர் எங்குமே குறிப்பிடவில்லை. பாருங்கள், 32-ம் வசனத்தில் அவர், தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களை அழைக்கும் சமயத்தைக் குறித்து ஒரு உவமையைக் கூறு கின்றார். இப்பொழுது இங்கே கவனியுங்கள், பாருங்கள். 62“வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களை வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.'' இப்பொழுது, அவர் ஆரம்பிக்கிறார்..... பாருங்கள், அவர் ஏழாம் முத்திரையைக் குறித்து இங்கே ஒன் றையும் கூறவில்லை. பாருங்கள்? அவர் ஆறாவது முத்திரையைக் குறித் துப் பேசினார்; ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. ஆனால் கவனியுங்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் (ஆங்கில வேதாகமத்தில் 'அது'' (It) வாசலருகே வந்திருக்கிறது என்றுள்ளது - தமிழாக்கியோன்) சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 63இது அவர்கள் அவரிடம் கேட்ட கடைசி கேள்வி. அவர்கள் அவரை, ''உலகத்தின் முடிவுக்குரிய அடையாளம் என்ன?'' என்று கேட்டனர். “இந்த யூதர்களை நீங்கள் காணும்போது... இவைகளின் மற்ற காரியங்களையெல்லாம் நீங்கள் காணும்போது, என்ன நடக்குமென்று நீங்கள் அறிவீர்கள்” அவர் யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்! இப்பொழுது கவனியுங்கள். அவர் யாரிடம் பேசுகிறார்? புறஜாதிகளி டமா? அவர் எந்த குழுவினிடம் பேசிக் கொண்டிருக்கிறார். புறஜாதி களிடமா? யூதர்களிடம்! யூதர்களிடம்! பாருங்கள்? இப்பொழுது, அவர், ''என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்“ என்றார். 64இப்பொழுது, ''அவர். அந்த யூதர்கள் அங்கே துளிர்விடுகிறதைக் காண்கிறீர்கள் அல்லவா?'' இஸ்ரவேல் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பும்போது, சபையானது எடுக்கப்படுதலுக்கு ஆயத்தமாயிருக்கும். அதன் பின்பு பழைய உலகம் முடிய மூன்றரை வருட காலமேயுண்டாகும். அது பிறகு வெறுமையாகி, புதிய பூமிக்கு ஆயிர வருட அரசாட்சி காலம் வரும். ''சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்'' என்றார். பூமியில் ஆயிரம் வருடம் தேவனுடைய பார்வைக்கு ஒரு நாளாயிருக்குமானால், மூன்றரை வருட காலம் தேவனுடைய கணக்கின்படி சில வினாடிக ளேயாகும். எனவே, தான் அவர், “அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக் கிறார்'' என்றார் (ஆங்கில வேதம், [it is near, even at the doors) என்கின்றது - தமிழாக்கியோன்). 'இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'. 65என்ன? எது ஒழிந்து போகாது? யூதர்களை நிர்மூலமாக்க வேண்டு மென்று எல்லா காலங்களிலும் முயன்று வந்தனர், அவர்கள் ஒருக்காலும் அதைச் செய்ய முடியாது. ஆனால், கவனியுங்கள், பாலஸ்தீனாவுக்குத் திரும்புகிற அதே யூத சந்ததிதான் இவைகள் யாவும் சம்பவிக்கக் காணும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவள் ஒரு தேசமாகிவிட்டாள், அவளுடைய நாட்டிற் கென்று பிரத்தியேக நாணயமுண்டு. இப்பொழுது அவள் ஒரு தேசமாக இருக்கிறாள். அப்படியானால் நண்பர்களே, இப்பொழுது நாம் எங்கிருக்கின் றோம்? முத்திரைகளும் மற்ற யாவும் திறக்கப்படுகின்றன. இச்சம்பவம் முத்திரைகளின் இடையில் நடைபெறுகின்றன. நாம் இப்பொழுது எங்கிருக்கின்றோம்? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர் -ஆசி). நான் சொல்வதை நீங்கள் புரிந்துக்கொள்கின்றீர்கள் என்று நம்பு கிறேன். எனக்குக் கல்வியறிவு கிடையாது. நான் பேசுவது என்னவென் பது எனக்குத்தெரியும். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு அதை விவரிக்க என்னால் ஒருக்கால் முடியாமல் இருக்கலாம். இவ்விதம் அர்த்தம் காணமுடியாதவாறு கலந்துள்ள என் வார்த்தைகளை தேவன் தாமே சரிவரப்பிரித்து உங்களுக்குத் தந்து, அது என்னவென்பதை உங் களுக்கு அறிவிப்பாராக. ஏனெனில் நாம் வாசலருகே இருக்கிறோம். நாம் அந்த நேரத்தில் இருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். 66பாருங்கள், அவர் யூதர்களிடம் தம் கவனத்தைத் திருப்புகிறார். முடிவு காலத்தில் என்ன நிகழும் என்பதையும் அவர் தெரியப்படுத்து கின்றார். இஸ்ரவேல் கோத்திரத்தார் சிதறடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாமறிவோம். 2500 ஆண்டுகளாக அவர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காற்றடிக்கும் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது நமக்குத் தெரியும். அதை வேதபுத்தகத்தில் தேடி இப்பொழுது படிக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் களைப்புறு முன்பு முக்கியமான சிலவற்றை நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன். கவனியுங்கள், இஸ்ரவேல் கோத்திரத்தார் கோத்திர வம்ச வரலாறு அல்லது புவியியல் அல்லது கோத்திர ஸ்தானம் என்று அதை நீங்கள் எவ்விதமாக அழைக்க விரும்பினாலும் ஒவ்வொருவரும் இப்பொழுது ஒரே இடத்தில் இல்லை. அவர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது எருசலேமில் கூடியுள்ள யூதர்களுக்கு அவர்கள் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்களென்று தெரியாது. அவர்களுடைய கோத்திரத்தைக் குறிக்கும், எந்தக் கொடியும் இப்பொழுது அவர்களிட மில்லை. அவர்கள் யூதர்கள் என்று மாத்திரமே அவர்களுக்குத் தெரியும். உலகம் பூராவும் அவ்விதமே அவர்கள் இருப்பார்கள் என்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அவர்களுடைய புத்த கங்கள் எல்லாம் யுத்தங்களில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. அவர்கள் அதை அறியார்கள். அவர்களிடம், 'நீங்கள் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்' என்று கேட்டால், 'எனக்குத் தெரியாது' என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எந்த கோத்திரத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர் களுக்குத் தெரியாது. ஒன்று பென்யமீனிலிருந்து, ஒன்று இதிலிருந்து, ஒன்று அதிலி ருந்து (என்று எடுக்கப்படுகின்றனர் - தமிழாக்கியோன்). அவர்கள் எந் தக் கோத்திரத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. இந்த 2500 வருடங்களில், யுத்தங்களின் மூலமாக, அவர்கள் புஸ்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யூதர்கள் என்று மட்டுமே அறிந் துள்ளனர். அவ்வளவுதான். ஆகவே அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும்பி யுள்ளனர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களின்... கவனி யுங்கள், அவர்களுக்கு அவர்களுடைய கோத்திரங்களின் பெயர் தெரியாவிட்டாலும் தேவன் அதை அறிவார். 67அது எனக்கு எவ்வளவு பிரியமாயுள்ளது! ''உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார். ஹும்! கவனியுங்கள்! அவர் எதையுமே இழந்து போவதில்லை. ''நான் கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன். அவர்கள் தங்கள்-தங்கள்-தங்கள் கோத்திரங்களைக் குறிக்கும் கொடிகளை இழந்துப்போயிருந்தாலும், யார் எதைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவேளை அவர்கள் இது அல்லது அதுவாக இருந்தாலும் அவர்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது ரூபன் அல்லது இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களோ என்று அறியாம லிருந்தாலும், தேவன் அதை அறிந்து அவர்களை அழைக்கிறார். 68இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ''பன்னீராயிரம் பேர்' தெரிந்து கொள்ளப்பட்டதாக வெளிப்படுத்தல் 7-ல் வாசிக்கின்றோம். ஒவ்வொரு கோத்திரத்திலும் பன்னீராயிரம் பேர் தெரிந்து கொள்ளப்பட்டு கோத்திர ஒழுங்கின்படி இங்கே அமைக்கப் படுகின்றனர். ஓ, என்னே! அவர்கள் யார்? அவர்கள் கோத்திர ஒழுங்கின் படி இருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் அவ்விதம் இல்லா விடினும் இனிமேல் அவர்கள் அவ்வமைப்பில் வருவார்கள். அவர்கள் கோத்திர ஒழுங்கின்படி இருக்கிறார்கள். யார் இந்தக் கோத்திர ஒழுங்கில் வருவார்கள்? எல்லா யூதர்களுமா? இல்லை. தெரிந்து கொள்ளப்பட்ட 1,44,000 பேர் இந்த கோத்திர ஒழுங்குக்குள் வருவார்கள். ஓ, என்னே ! நான் எவ்வளவாய் அதை உங்களுக்குக் காண்பிக்க விரும்பு கிறேன்! ஆனால் நாம் அதை ஆராயப் போவதில்லை. ஆனால் அவ்வாறே, சபையும் கிரமப்படி அவர்களுடைய ஒழுங்கில் வரவேண்டியவர்களா யிருக்கின்றனர். ஊஊம். இப்பொழுது ஒரு நிமிடம் நீங்கள் கூர்ந்து கவனித்து, என்னுடன் வாசிக்க விரும்புகிறேன். இந்தக் கோத்திரங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரு காரியத்தை நீங்கள் கவனித்திருக்கமாட்டீர்கள். சற்று முன்பு வெளிப்படுத்தல் 7-ம் அதிகாரத்தைப் படிக்கக் கூறினேன். என்னோடுகூட மறுபடி யும் அதைப் படித்து, சொல்லப்பட்ட கோத்திரங்களின் பெயர்களைக் கவனமாய்ப் பாருங்கள். வெளிப்படுத்தல் 7-ம் அதிகாரத்தில் தான் கோத்திரமும் எப்பிராயீம் கோத்திரமும் காணப்படவில்லை. அவை மற்ற கோத்திரங்களுடன் எண்ணப்படவில்லை; அதை கவனித்தீர்களா? அவைகளுக்குப் பதிலாக யோசேப்பின் கோத்திரமும் லேவியின் கோத் திரமும் சேர்க்கப்பட்டுள்ளன. அதை கவனித்தீர்களா? தாண் கோத் திரமும், எப்பிராயீம் கோத்திரமும் அங்கே இல்லை. இல்லை ஐயா. ஆனால் தாண் எப்பிராயீம் கோத்திரங்களுக்குப் பதிலாக, யோசேப்பின் கோத் திரமும் லேவி கோத்திரமும் சேர்க்கப்பட்டுள்ளன. 69ஏன்? அவர்கள். எல்லாவற்றையும் நினைவில் கொள்ளும் தேவன் தம் வார்த்தையின் எல்லா வாக்குத்தத்தங்களையும் நினைவு கூருபவராய் இருக்கின்றார். ஓ, நான் அதைக் குறித்துப் பிரசங்கிக்க விரும்புகிறேன். பாருங்கள்? தேவன் மறக்கிறவர் போலக் காணப்பட்டாலும், அவர் எதையுமே மறப்பதில்லை. அவர் மோசேக்கு கூறியதுபோல. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் “நானூறு வருடங்கள்'' அடிமைகளாய் இருந்தனர். அவர் ஆபிரகாமிடம், அவன் சந்ததியார் அந்நிய தேசத்திலே நானூறு வருடகாலம் பரதேசிக ளாயிருப்பார்களென்றும், அதன் பின்னர் அவர் பலத்த கரத்தினால் அவர்களை வெளியே கொண்டு வருவாரென்றும் அறிவித்திருந்தார். அவர் மோசேயிடம், ''நான் அளித்த வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தேன். அதை நிறைவேற்றவே நான் இறங்கினேன்'' என்றார். தேவன் ஒருபோதும் மறப்பவரல்ல. அவர் தாம் கூறின சாபங்களை மறவாதது போலவே, அவரளித்துள்ள ஆசீர்வாதங்களையும் அவர் மறக்கிறவரல்ல. ஆனால், அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குத்தத்தத் தையும் அவர் நிறைவேற்றுபவராயிருக்கிறார். நீங்கள் கவனிப்பீர்களானால், அவைகள் காணப்படாததன் காரணத்தை அறியலாம். இப்பொழுது படியுங்கள். இப்பொழுது நீங்கள் என்னுடன் படிக்க விரும்புகிறேன். உபாகமம் 29-ம் அதிகாரத்துக்குத் திருப்புங்கள். இந்த இரண்டு கோத்திரங்களும் அங்கு காணப்படா ததற்கு ஒரு காரணமுண்டு. எல்லாவற்றிற்குமே ஒரு காரணமுண்டு. உபாகமம் 29-ம் அதிகாரத்தை வாசிப்போம். நாம் அதைப் புரிந்துக் கொள்ள கர்த்தர் உதவி புரிவாராக! உபாகமம் 29-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். இப்பொழுது கவனியுங்கள். மோசே பேசுகின்றான். (நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்து வந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்து வந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களுடைய அருவருப்புகளையும் அவர்களிடத்திலிருக் கிற மரமும்... கல்லும், வெள்ளியும்... பொன்னுமான அவர் களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.) 70அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை உதாரணமாக பரி. சிசிலியாவின் சொரூபம் போன்றவைகளை-வைத்திருந்தார்கள். (கவனியுங்கள்) ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷ னாகிலும்... ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமா கிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தை களைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக் கொண்டால்....... “ஓ! அவன் தன் உள்ளத்தைத் தேற்றிக் கொள்கின்றான்'' (ஆங்கில வேதத்தில் He bless himself in his heart' என்றுள்ளது) என்பதாக சிலர் சொல்கின்றனர். இப்பொழுது அவர்கள் செய்கின்றது போன்று, 'ஒரு சிறு சிலுவையையோ அல்லது அதைப்போன்று வேறொன்றையோ அவர்கள் செய்துக் கொண்டனர். பாருங்கள் அதே காரியம்! அது அஞ்ஞான பழக்கவழக்கமாகும். அவன் தன் மன இஷ்டப்படி நடந்து தன் உள்ளத்தை தேற்றிக் கொள்கின்றான். அது மாத்திரமல்ல.... “தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து” - குடிக்கின்றான். 'நீ ஆலயத்திற்குப் போவாயானால், குடித்தாலும் பரவா இல்லை' என்று சொல்கின்றனர். கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங் களெல்லாம் அவன் மேல் தங்கும் (அதனின்று ஒன்றையும் எடுத்துப் போடாதே, ஒன்றையும் கூட்டாதே பாருங்கள்), கர்த்தர் அவன் பெயரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப் போடுவார் . அதாவது அவன் இங்கு பூமியில் இருக்கும் போது - “வானத்தின் கீழ் இருக்கும்போது.'' இந்த நியாயப் பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப் போடுவார். 71எனவே, ''யாராவது ஒருவன் விக்கிரகங்களைச் சேவிக்கவோ அல்லது விக்கிரங்களைப் பூண்டு கொண்டு, தன் மன இஷ்டப்படி அவன் உள்ளத்தைத் தேற்றிக் கொண்டு, விக்கிரங்களைத் தொழுவானாகில், தேவன், 'ஆண், பெண், குடும்பம், கோத்திரம், அவன் நாமம் யாவும் மக்களிடையே இராதபடிக்கு அழிக்கப்படும்'' என்கிறார். இப்பொழுது, நான் கூறுவது சரியா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்) அது எவ்வளவு உண்மை ! சபையின் காலங்களில் விக்கிரகாராதனை அதைத்தான் செய்தது. இப்பொழுதும் செய்துக்கொண்டு வருகின்றது. நான் காண்கிறேன்... அந்திக்கிறிஸ்து எவ்வாறு சரியான இயக்கத்திற்கு விரோதமான இயக் கத்தைக் கொண்டு வந்தான் என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய பரிசுத்தவான்கள் மாதிரியே பிசாசும் கொண்டு வருகின்றான் என்பதை உங்களில் எத்தனைபேர் அறிந்திருக்கின்றீர்கள்? 72பாவம் என்பது என்ன? அது சரியான ஒன்று தாறுமாறாக்கப்படுத லாகும். பொய் என்பது என்ன? சத்தியம் தவறாக அருளப்படுவதே பொய் என்பதாகும். விபச்சாரம் என்பது என்ன? அது சரியான சட்டப் பூர்வமான கிரியை, தவறான வழியில் நடத்தப்படுதலாகும். பாருங்கள்? இப்பொழுது பெயரைக் குலைத்துப் போடும் காரியத்தில், மரித்தோரின் சொரூபங்களைச் சேவிக்கிற அதே மிருகம்தான், சபையின் காலங்களில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக் குலைத்துப் போட்டு அதற்குப் பதிகலாகப்பட்டப் பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவைகளை அளித்தது என்பதை நீங்கள் கவனித் தீர்களா? அதற்கும் அதேப் போன்ற சாபம் காத்திருக்கின்றது. தாணும் எப்பிராயீமும் இஸ்ரவேலின் மாய்மால அரசனாகிய யெரொபெயாமின் ஆட்சியின் கீழ் அதையே செய்தனர். இப்பொழுது கவனியுங்கள். 1 இராஜாக்கள் 12-ம் அதிகாரம், 25 முதல் 30 வசனங்கள். நாம் சார்ந்திருப்பவைகளுக்கு இது ஒரு அடிப்படையாக அமைகின்றது. 1-இராஜாக்கள் 12-ம் அதிகாரம் 25முதல் 30 வரை வாசிக்க விரும்புகிறேன். யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான். யெரொபெயாம்: (பாருங்கள், அவனுடைய இருதயத்தின் எண்ணம்) இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்: ஜனங்கள் எங்கே போய் விடுவார்களோவென்று பயப்படுகிறான். பாருங்கள்? இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத் திலே பலிகளைச் செலுத்தப்போனால்... இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு... யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயா மின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே (ஆங்கில வேதாகமத்தில் 'இருதயத்தில் சிந்தித்தான் என்றுள்ளதுதமிழாக்கியோன்) (பாருங்கள் அவனுடைய இருதயத்தின் கற்பனை) சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனை பண்ணி பொன்னி னால் இரண்டு கன்றுக் குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின் உங்கள் தேவர்கள் என்று சொல்லி; ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக் குட்டிக்காக தான் மட்டும் போவார்கள். பாருங்கள்: பெத்தேலில் எப்பிராயீமும், தாணும்; அவன் சொரூ பங்களை ஸ்தாபித்தான். அவர்கள் அதை வணங்கச் சென்றார்கள். 73நாம் இப்பொழுது ஏறக்குறைய ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்துக்கு வந்திருக்கிறோம், தேவன் இப்பொழுதும் அந்தப் பாவத்தை நினைவில் கொண்டிருக்கிறார். அவர்கள் கோத்திரங்களுடன் எண்ணப்பட வில்லை. ஆமென்! மகிமை! (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒருமுறை கொட்டுகிறார்-ஆசி) அவர் எவ்வளவு நிச்சயமாக நல்ல வாக்குத்தத்தங்களை நினைவில் கொண்டுள்ளாரோ, அவ்வளவு நிச்சய மாக அவர் தமது சாபங்களையும் நினைவில் கொண்டிருக்கிறார். சற்று ஞாபகங் கொள்ளுங்கள்... ஆகவே தான், என் நண்பர்களே, அது எவ்வளவு வினோதமாகக் காட்சியளித்தாலும், நான் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க முயன்று வந்திருக்கிறேன். பாருங்கள், இப்பொழுது அவர்கள் அங்கே அதைக் குறித்து அப்பொழுது நினைப்பதாகயில்லை. அப்பொழுது அவர்கள் அதன் விளைவைக்குறித்து சற்றேனும் சிந்திக்கவில்லை. “நாம் எப்படியும் தப்பித்துக் கொண்டோம்'' என்று அவர்கள் நினைத்தனர். சரி, ஆனால் ஆயிரம் வருட அரசாட்சிக் காலம் தொடங்கவிருக்கும் காலத்தில், அவர்கள் தேவனால் சபிக்கப்பட்ட விக்கிரகாராதனையைக் கைக்கொண்டதால், அவர்கள் நாமங்களும் அவர்கள் கோத்திரங்களின் நாமங்களும் அகற்றப்பட்டுவிட்டன. 74அவர் நிக்கொலாய் மதஸ்தினரையும் யேசபேலையும் “வெறுப்ப தாகக் கூறவில்லையா? அதனின்று விலகுங்கள். யேசபேல் குமாரத் திகளை ஆவிக்குரிய மரணத்தினால் கொன்று, அவர் சமூகத்தினின்று நித்திய காலமாய் அவர்களைப் பிரித்துவிடுவதாக அவர் கூறவில்லையா? அதை ஒருக்காலும் நம்ப வேண்டாம். அதனின்று விலகுங்கள். ஆகவே, தேவன் நினைவுகூருகிறார். கவனியுங்கள். அவர்களுடைய பெயர்கள் “அகற்றப்பட வேண்டும்'' என்று இங்கே நீங்கள் கவனித்தீர்களா? ஏன்? ஏனெனில் அவர்களுக்குப் புகட்டுவதற்கு அப்பொழுது, வானத்தின் கீழ் பலி செலுத்தப்பட்டு அதன் விளைவாகப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அருளப்படவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் சுயநலசிந்தை கொண்டு அவர்கள் விருப்பப்படி செய்தனர். ஆனால் எசேக்கியேல், ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்த தரிசனம் கண்டபோது, எல்லாம் சரிவர அமைந்திருக்கக் கண்டான். அந்தப் பகுதியை நீங்கள் படிக்க விரும்பினால் அதைக் குறித்துக் கொண்டு, வீட்டில் சென்று படியுங்கள். எசேக்கியேல் 48:1-7, மேலும் 23 முதல் 29 வசனங்கள். எல்லாக் கோத்திரங்களும் கிரமமாக இருப்பதை எசேக்கியேல் கண்டான். சரி. 75மறுபடியும் வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரத்தில், யோவான் அந்த கோத்திரங்கள் கிரமமாக இருப்பதைக் காண்கிறான். அது சரி. அந்தந்த கோத்திரம் அவரவர்க்குரிய ஸ்தலத்தில் இருக்கின்றது. என்ன நேர்ந்தது? 'வானத்தின் கீழ் கோத்திரங்களின் நாமம் அகற்றப்படும்'' என்று அவர் கூறினது நினைவிருக்கிறதா? அவர்கள் வானத்தின் கீழுள்ளவரை அவர்களுடைய பெயர்கள் அகற்றப்பட்டிருக்கும். இந்த 1,44,000 பேர்களும் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தாம். சரியா? ஆனால் அவர்களுக்கு காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் பலி மாத்திரம் இருந்த படியால், அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய பெயர் கள் வானங்களின் கீழிராதபடி அவர் அகற்றினார் என்பதைக் கவனி யுங்கள். ஆனால், பரிசுத்த ஆவியின் நாட்களில் வாழும் புறஜாதிகள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தால், அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்திலிருந்து முற்றிலுமாக எடுத்துப் போடப்படும். அவர் களுக்கு இவ்வுலகிலோ அல்லது வரப்போகும் உலகிலோ மன்னிப் பேயில்லை. அது சரியா? நாம் இங்குதான் நிற்கிறோம். 76இஸ்ரவேல் ஜனங்கள் காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் கீழிருந்தனர். தாண், எப்பிராயீம் கோத்திரங்கள் காணப்படவில்லை. அவர்கள் ஒருக்காலும் மறுபடியும் சேர்க்கப்பட முடியாது. இப்பொழுது எல்லா... 1,44,000 பேர்களை அவர் அழைத்தபோது, இவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. அது உண்மை . அவர்கள் அங்கு எண் ணப்படவுமில்லை. தாண், எப்பிராயீம் கோத்திரங்களுக்குப் பதிலாக யோசேப்பு, லேவி கோத்திரங்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதை நீங்கள் வேதத்தில் காணலாம். அது உங்களுக்கு முன்னால் உள்ளது. பாருங்கள்? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தேவன் எச்சரித்திருந்தார் என்பதை நாம் பார்க்கிறோம். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை பலமுறைகள் தட்டுகிறார் -ஆசி). இப்பொழுது என்ன நேர்ந்தது? பயங்கரமான உபத்திரவ காலத்தில் அவர்கள் சுத்திகரிக்கப்படுகின்றனர். இப்பொழுது, ஒரு நல்ல ஸ்திரீயாகிய கன்னிகையையே, அவளிடம் எண்ணெய் இல்லாமலிருந்த காரணத்தால், தேவன் அவளை உபத்திரவத்தின் மூலம் சுத்திகரிக்கச் சித்தம் கொண்டால்-இஸ்ரவேல் கோத்திரங்களையும் அவர் உபத்திரவ காலத்தில் சுத்திகரிக்கின்றார். ஏனெனில் அது நியாயத் தீர்ப்பாகும். ஆனால் நீங்கள் பாருங்கள்... இஸ்ரவேலர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு 1,44,000 பேர் வருகின்றனர். அவ்வாறே உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகளும் சுத்திகரிக்கப் பட்டு வெள்ளையங்கிகளைத் தரித்துக் கொள்கின்றனர். பாருங்கள்? எவ்வளவு பூரணமாக அழகாகப் பொருந்துகின்றதைப் பாருங்கள். 77யாக்கோபு உபத்திரவ சமயத்தைக் கடந்தது போன்றதாகும், அவர்கள்... யாக்கோபு தவறு செய்தான். யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்குத் தீங்கிழைத்ததால் அவன் உபத்திரவ காலத்தில் பிரவேசிக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? சேஷ்ட புத்திர பாகத்தைப் பெறு வதற்கென அவன் சகோதரனை ஏமாற்றினான். அவன் பெயர் யாக்கோபு என்பதிலிருந்து இஸ்ரவேல் என்னும் பெயராக மாறுவதற்கு முன்பாக அவன் சுத்திகரிப்புக்குள் பிரவேசிக்க வேண்டியதாயிருந்தது. இது தேவனுடைய ஒழுங்குக்கு ஒரு உதாரணம். அது இன்றைய நாளுக் கென்று உதாரணமாக உள்ளது. இப்பொழுது நாம் எட்டாம் வசனத்திற்கு அல்லது நான் கருதுவது எட்டாம் அதிகாரம் முதலாவது வசனம், வெளிப்படுத்தல் 8:1ஐப் படிப் போம். 78நீங்கள் எல்லாரும் களைப்பாயிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். இன்னும் சில நிமிடங்கள் கவனியுங்கள். பரம தேவனே, எங்களுக்கு உதவி புரியும் என்பதுதான் என் ஜெபம். 231. இந்த ஏழாம் முத்திரை எல்லா காரியங்களும் முடிவடையும் சமயம் என்பதை நாம் நினைவு கூரவேண்டும். அது உண்மை . ஏழாம் முத்திரையைக் கொண்ட புஸ்தகத்தில் எழுதப்பட்டவை உலகத் தோற்றத்துக்கு முன்னால் மீட்பின் திட்டம் அதில் முத்திரையிடப்பட் டிருந்தது. எல்லாமே முடிவடைகின்றது. அதுதான் முடிவு; கஷ்டத்தினால் போராடிக் கொண்டிருக்கும் உலகத்தின் முடிவு அதுவாகும். தவித்துக் கொண்டிருக்கும் இயற்கைக்கு அதுவே முடிவாகும். எல்லாவற்றிற்கும் அதுவே முடிவாகும். அதில் எக்காளங்கள் முடிவடைகின்றன; கலசங்கள் முடிவடைகின்றன; பூலோகமும் முடிவடைகின்றது. அது... 'காலம்' என்பது கூட முடிவடைகின்றது. 'இனிகாலம் செல்லாது' என்று வேதம் உரைக்கின்றது. மத்தேயு 7-ம் அதிகாரம்... நான் கருதுவது வெளிப்படுத்தல் 7வது. வெளிப் படுத்தல் 10-ம் அதிகாரம் 1 முதல் 7 வசனங்களில் காலம் முடிவடை கின்றது. பலமுள்ள தூதன், ''இனி காலம் செல்லாது'' என்கிறான். இந்த மகத்தான காரியம் நிகழும் நாட்களில்.... ஏழாம் முத்திரையின் முடிவில் இந்தக் காலத்துடன் எல்லாமே முடிவடைகின்றன. கவனியுங்கள். சபையின் காலங்களின் முடிவும் அதுவாகும்; ஏழாம் முத்திரையின் முடிவும் அதுவே. எக்காளங்கள் அப்பொழுது முடிவடைகின்றன. கலசங்களும் முடிவடைகின்றது. ஏழாம் முத்திரையில், ஆயிரம் வருட அரசாட்சியின் வருகையின் முன்னறிவிப்பும் முடிவடைகின்றது. 79இது ஒரு ராக்கெட்டை ஆகாய மண்டலத்தில் வெடிப்பது போன்ற தாகும். அந்த ராக்கெட் இங்கே வெடித்து மேலே சென்று, மறுபடியும் வெடிக்கின்றது, அச்சமயம் ஐந்து நட்சத்திரங்கள் அதனின்று வெளியே வருகின்றன. அவ்வாறு வெளிவந்த நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம், மறுபடியும் வெடித்து அதனின்று ஐந்து நட்சத்திரங்கள் வெளியே வருகின்றன. அதனின்று வந்த நட்சத்திரங்களில் ஒன்று வெடித்து அதினிலிருந்து ஐந்து நட்சத்திரங்கள் புறப்பட்டுச் சென்று மறைந்து விடுகின்றன. அதுதான் ஏழாம் முத்திரையாகும். உலகத்தின் காலத்தை அது முற்றுப் பெறச் செய்கின்றது. இதனுடைய காலத்தை அது முற்றுப் பெறச் செய்கிறது. அதனுடைய காலத்தை அது முடிவடையச் செய் கின்றது. இதனுடைய காலத்தை அது முடிவடையச் செய்கின்றது. அது காலத்தை முடிக்கிறது. ஏழாம் முத்திரையில் எல்லாமே முடிவடை கின்றன. இப்பொழுது, அவர் அதை எவ்விதம் செய்யப்போகின்றார்? அதுதான் நமக்குத் தெரியாது. அல்லவா? நமக்குத் தெரியாது. 80இவை யாவும் முடிவடைந்து ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கு வதற்கு சமயம் வந்துவிட்டது. கவனியுங்கள், இந்த முத்திரை உடைக்கப்பட்டது ஒரு மகத்தான செய்கையாதலால், பரலோகம்கூட அதனால் “அரைமணி நேரம் அமைதி யாயிருக்கக்” கட்டளை பெற்றது. இப்பொழுது, அது மகத்தானதா? அது என்ன? பரலோகம் அமைதியாயிருக்க உத்தரவு பெற்றது. அரைமணி நேரத்தில் எதுவும் நகரவும்கூட இல்லை. இப்பொழுது, ஒரு நல்ல காலம் உண்டாயிருக்கும்போது, அரைமணி நேரம் என்பது ஒரு நீண்ட சமயமல்ல. ஆனால் ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு ஐயப்பாடு உள்ளபொழுது, அரைமணி நேரம் என்பது ஆயிரம் வருடம் நீண்டது போன்றதுதான் காட்சியளிக்கும். அப்பொழுது நடக்கும் சம்பவங்கள் மிக மகத்தானவை. ஆகவேதான் இயேசு அதைக் குறித்து ஒன்றுமே உரைக்க வில்லை- மற்றவர்களும்கூட. யோவான் அதை எழுதவும் கூட முடியவில்லை. இல்லை. அவன் அதை இங்கே எழுதி வைப்பதற்குத் தடை செய்யப்பட்டான். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை இருமுறை மெல்ல தட்டுகிறார் -ஆசி) பாருங்கள், அங்கே மாத்திரம்.... அவன் அதை எழுதவில்லை அமைதி உண்டாயிற்று என்று மாத்திரமே அவன் எழுதியுள்ளான். 81கின்னரங்களை வாசித்துக்கொண்டு தேவனுக்கு முன்பாக நின்ற இருபத்து நான்கு மூப்பர்களும் கின்னரம் வாசிப்பதை நிறுத்திவிட்டனர். பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் பாடுவதை நிறுத்திக் கொண் டனர். யோசியுங்கள்! ஏசாயா தேவாலயத்தில் கண்ட பரிசுத்த கேரூபீன் களும் சேராபீன்களும் அவ்வாறு செட்டைகள் கொண்டவர்களாய், இரண்டு செட்டைகளால் தங்கள் முகத்தை மூடி இரண்டு செட்டைகளால் தங்கள் கால்களை மூடி, இரவும் பகலும் தேவனுடைய சமூகத்தில் பறந்து, ''சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று பாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்தபோது, வாசல்களின் நிலைகள் அவர்களுடைய பிரசன்னத்தால் அசைந்தன. அத்தகைய பரிசுத்த சேராபீன்களும் கூட பாடுவதை நிறுத்திக் கொண்டு அமைதியாயினர். ஊஊம்... வ்யூ! தேவனுடைய சமூகத்தில் “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று பாடி பறந்து கொண்டிருந்த தூதர்களும் வாயடைத்துக் கொண்டிருந்தனர். எந்த தேவதூதனும் பாட வில்லை. யாரும் போற்றித் துதிக்கவில்லை. பீட ஆராதனை வேறொன்றும் அங்கு நிகழவில்லை. இல்லை, ஒன்றுமில்லை. பரலோகத்தில் அரை மணிநேர அளவு பயங்கர அமைதி உண்டாயிருந்தது. மீட்பின் புஸ்தகத்தில் காணப்பட்ட ஏழாம் முத்திரை உடைக்கப் பட்டபோது, வானத்தின் எல்லா சேனைகளும் அரைமணி நேரமளவு அமைதலாயிருந்தனர். சற்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அது உடைக்கப்பட்டுவிட்டது. ஆட்டுக் குட்டியானவர் தாமே அதை உடைக்கிறார். என்ன நேர்ந்தது தெரியுமா? அவர்கள் அதைக்கண்டு பக்தி பூர்வமான பயம் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அவர்கள் அதை முன்பு அறிந்திருக்கவில்லை. அதைக்கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். ஏன்? அது என்ன? இப்பொழுது, நாம் யாரும் அது என்னவென்று அறியமாட்டோம். ஆனால் அதைக் - அதைக் குறித்த என்னுடையஎன்னுடைய வெளிப்பாட்டை நான் உங்களிடம் கூறப்போகின்றேன், 82ஆகவே, இப்பொழுது நான் எல்லை மீறிய மதப்பற்றுள்ளவன் (Fanatic) அல்ல; நான் அதை அறியாதவனாய் இருக்கிறேன். பாருங்கள். நான்... நான் ஒன்றை அறியாமலிருந்தால், கற்பனை செய்து ஒரு காரி யத்தைக் கூறுவது கிடையாது. சிலருக்கு விசித்திரமாகத் தென்படும் காரியங்களை நான் கூறி யதுண்டு. ஆனால் தேவன் வந்து, அதன் பின் நின்று, அதை உறுதிப்படுத்தி, அதுதான் சத்தியம் என்று நிரூபிக்கும்போது, அப் பொழுது அது தேவனுடைய வார்த்தையாயிருக்கின்றது. பாருங்கள்? அந்த விதத்தில் அது விசித்திரமாகத் தோன்றக்கூடும். பாருங்கள்? நான் இப்பீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நான் இதைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றுள் ளேன் என்று உறுதி கூறுகின்றேன். அது மூன்று பாகங்களாக அமைந் துள்ளது. ஆகவே பிறகு நீங்கள்... அதன் ஒரு பாகத்தை தேவ ஒத்தாசையைக் கொண்டு நான் உங்களுக்கு உரைக்கின்றேன். முதலில் அந்த வெளிப்பாடு என்னவென்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்பு கிறேன். சம்பவிப்பது என்னவெனில்... ஏழு இடி முழக்கங்களை யோவான் கேட்டு அதை எழுத வேண்டுமென்றிருந்தபோது, அதை எழுத வேண்டாமென்று கட்டளை பெற்றான் அல்லவா? அவ்வாறு அடுத்தடுத்து முழங்கின ஏழு இடிகளின் பின்தான் அந்தப் பரமரகசியம் அடங்கியுள்ளது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறை தட்டுகிறார் -ஆசி). 83இப்பொழுது, ஏன்? அதை நாம் நிரூபிக்க முற்படுவோம். ஏன்? அந்த இரகசியத்தைக் குறித்து யாருமே அறியமாட்டார்கள். அதை எழுத வேண்டாமென்று யோவான் கட்டளை பெற்றான்-அதன் ஒரு அடை யாளத்தைக்கூட எழுதவும் அவன் தடை செய்யப்பட்டான். ஏன்? இதற் காகத்தான் பரலோகத்தில் எவ்வித செயல்களும் அப்பொழுது இல்லை. அடையாளம் எழுதியிருந்தால் அது பரம இரகசியத்தை வெளியாக்கி விடும். இப்பொழுது புரிகின்றதா? (சபையார் “ஆமென்” என்று கூறு கின்றனர் - ஆசி). அது மகத்தான ஒன்றாயிருப்பதால் அதைக் குறித்து எழுதப்பட வேண்டும். ஏனெனில் அது நிகழ்ந்தாக வேண்டும், ஆனால் ஏழு இடிகள்......? இப்பொழுது கவனியுங்கள். ஏழு தூதர்களும் அவர்கள் எக் காளங்களை முழங்கத் தோன்றினபோது - ஒரு இடி முழங்கினது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒருமுறை தட்டுகிறார்-ஆசி) இஸ்ரவேல் ஜனங்கள் கூட்டப்பட்டபோது -ஒரு எக்காளம் தொனிக் கின்றது. காலம் என்பது முடிவடையும்போது கடைசி எக்காளம் தொனிக் கும். அப்பொழுது ஒரு இடிதான் முழங்கினது. ஆனால் இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அது பரிபூரணமான எண் ணிக்கையாகும். இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. (சகோதரன் பிரான்ஹாம் பீடத்தை ஏழுமுறை தட்டினார்-ஆசி). அப்பொழுது பரலோகத்தால் அதை எழுத முடியவில்லை. அங்கே ஒன்றும் சம்பவியாததால், பரலோகத்தால் அதை அறியமுடியவில்லை. யாரும் அதை அறிய முடியாது. அது ஓய் வின் நேரமாயிருந்தது (relaxing time) அது மிகவும் மகத்தானதா யிருந்ததால், அது தூதர்களும் அறியாதவாறு இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. 84இப்பொழுது, ஏன்? சாத்தான் மாத்திரம் இதை அறிந்திருந்தால், அதிககேடு விளைவித்திருப்பான். அவன் அறியாத ஒரு காரியம் அங்கே இருக்கிறது. இப்பொழுது அவன் எந்த ஒரு காரியத்தையும் வியாக்கி யானம் செய்து சுய அர்த்தம் கொடுக்க முடியும். (நீங்கள் கற்றுக் கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்) அவ்வாறே ஆவியின் எந்த ஒரு வரத்தையும் பெற்றது போன்று அவன் ஆள் மாறாட்டம் செய்ய முடியும். ஆனால் இதை மாத்திரம் அவன் அறியவே முடியாது. ஏனெனில் அது வேதத்தில் எழுதப்படவேயில்லை. அது பரிபூரண இரகசியம். தேவ தூதர்கள் யாவரும் வாயடைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சற்றேனும் அசைந்தால்கூட, இரகசியத்தை வெளியிட நேரிடும். ஆகவேதான் அவர்கள் ஒன்றும் பேசாமல், கின்னரம் வாசிப் பதையும் நிறுத்தி விட்டனர். ஒவ்வொன்றும் நின்றுபோனது. 85ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண்ணிக்கையாகும் (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழுமுறை தட்டுகிறார்-ஆசி.) ஏதோ ஒன்று எழுத்துக் கூட்டி வாசிப்பது போல் ஏழு இடிகளும் ஒரே வரிசையில் ஒவ் வொன்றாக முழங்குகின்றன. அப்பொழுது யோவான் எழுத வேண்டு மென்றிருந்தான் என்பதைக் கவனியுங்கள். அப்பொழுது அவர், 'அதை எழுத வேண்டாம்' என்று கூறினார். இயேசு அதைக் குறித்து பேசவும் இல்லை. யோவானும் அதை எழுத முடியவில்லை. தேவ தூதர்களும் அது என்ன வென்று அறியார்கள். அது என்ன? பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்களென்று இயேசு சொன்ன அதே காரியம்தான் அது. பாருங்கள்? பாருங்கள்? அவரும் கூட அதை அறிந்திருக்கவில்லை. “தேவன் மாத்திரமே” அதை அறிவா ரென்று அவர் கூறினார். ஆனால் அவர் கூறினார், “இந்த அடையாளங்களை நீங்கள் காணத் தொடங்கும்போது...'' (இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா? சபையார் 'ஆமென்'' என்று கூறுகின்றனர்) சரி. கவனியுங்கள், நாம் ”இந்த அடையாளங்களைக் காணத் தொடங்குகிறோம்.'' பாருங்கள்? சாத்தானுக்கு மாத்திரம் அது தெரிந்திருந்தால்... ஏதாவது தொன்று சம்பவிக்க வேண்டுமென்று நீங்கள் விரும் பினால்... இப்பொழுது நான் சொல்லுவதை நீங்கள் உண்மையென கருத வேண்டும். நான் ஏதாவது ஒன்றைச் செய்யத் திட்டமிடும்போது, அதை நான் மற்றவர்களுக்கு அறிவிப்பதில்லை. அவர்கள் அதை மற்றவர் களிடம் பரப்புவார்கள் என்பதற்காகவல்ல. சாத்தான் அதைக் கேட்டு விடுவான் என்ற ஐயத்தினால்தான். பாருங்கள்? என் இருதயத்தில் அந்த இரகசியத்தைத் தேவன் பரிசுத்த ஆவியினால் மூடி வைத்திருக்கும்வரை, சாத்தான் என் இருதயத்திலுள்ளதை அறிந்துகொள்ளவே முடியாது. ஏனெனில் அது எனக்கும் தேவனுக்கும் மாத்திரம் அறியப்படும் ஒரு இரகசியமாயிருக்கும். பாருங்கள்? நான் என் இருயத்தில் மறைந்து கிடப்பதை வாயினால் அறிவிக்கும் வரை, அவன் அதைக் குறித்து ஒன்றையும் அறிய முடியாது. நான் முயற்சித்துள்ளேன்... நான் பேசின பிறகு, அவன் அதைக் காதினால் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். நான் ஒரு காரியத்தைச் செய்யப்போவதாக மக்களிடம் அறிவிப்பேனானால், என்னைத் தோற்கடிக்க பிசாசு அவனால் இயன்றவரை முயல்வதை நீங்கள் பார்த்திருக் கலாம். ஆனால் தேவனிட மிருந்து நேரடியாக வெளிப்பாட்டைப் பெற்று அதைக் குறித்து ஒன்றும் பேசாமலிருந்தால், அப்பொழுது அது ஒரு வித்தியாசமான காரியம். பிசாசு ஒன்றும் செய்ய முடியாது. 86சாத்தான் போலியாகச் செய்ய முயல்வான் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். சபை செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அவன் போலியாகச் செய்ய முயல்வான். அவன் அவ்விதம் செய்ய முயன்றிருக் கிறான். அந்திக்கிறிஸ்துவின் மூலமாக அவன் அவ்விதம் செய்ததை நாம் கவனித்திருக்கிறோம். ஆனால் இந்த ஒரு காரியத்தில் மாத்திரம் அவன் போலியாகச் செய்யமுடியாது. பாருங்கள், ஏனெனில் அதைக் குறித்து அவனுக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்வதற்கும் அவனுக்கு வழியில்லை. அது மூன்றாம் இழுப்பாகும். அதைக் குறித்து அவனுக்கு ஒன்றும் தெரியாது. பாருங்கள்? அவனுக்கு அது புரியவுமில்லை. ஆனால், அதனுள்ளில் ஒரு இரகசியம் மறைந்து கிடக்கின்றது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒரு முறை தட்டுகிறார் - ஆசி) உன்னதத்திலுள்ள தேவனுக்கு மகிமையுண்டாவதாக! நான் கண்ட போது நான் முன்பு கருதியிருந்தவாறு, ஏனைய என் ஜீவிய காலத்தில் நான் கருத முடியாது. இப்பொழுது, அது என்னவென்று எனக்குத் தெரியாது... அதனுடைய அடுத்த படியை நான் அறிவேன். ஆனால் அதை எவ்விதம் அர்த்தம் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அது நிகழ இன்னும் அதிக காலமில்லை. அது நிகழ்ந்த போது நான் இங்கு எழுதிவைத்துக்கொண்டேன்-உங்களால் காணமுடிந் தால்! “நிறுத்து! இதற்கு மேல் எழுதாதே” என்னும் கட்டளை எழுந்தது. நான் மூட வைராக்கியம் கொண்டவனல்ல - நான் உங்களிடம் சத்தி யத்தை மட்டும் சொல்லுகிறேன். நான் தரிசனத்தில் கண்ட ஒரு சிறு பாதரட்சையைக் குறித்து உங்களிடம் விளக்கிக் கூறினது உங்களுக்கு நினைவிருக்கலாம்- எப்படி அந்த ஆத்துமாவும் உள்ளான மனசாட்சியும் இன்னார் - இன்னாருக்கு அடுத்தாற்போல் உண்டாயிருந்தது என்றெல்லாம் விளக்கினேன். ஆனால் அது ஒரு பெரிய போலிக்குழுவை விளைவித்தது. எப்படி நான் மக்களின் கைகளை பிடிக்கும்போது ஒருவித அதிர்வு ஏற்பட்டது என்று கூறினபோது, எல்லாரும் கைகளைப் பிடிக்கும்போது அவ்வித அதிர்வு உண்டாவதாகக் கூறினர். 87ஆனால் அவர் என்னை உயரக் கொண்டுபோய், 'இதுதான் மூன்றாம் இழுப்பு. இதை யாரும் அறிய மாட்டார்கள்' என்று கூறினது நினை விருக்கின்றதா? (சபையார் 'ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) தரிசனங்கள் ஒரு போதும் தவறானதில்லை. அவை முற்றிலும் உண்மை யாகும். தூதர்களின் கூட்டத்தைப் பற்றிய தரிசனம் உங்களுக்கு ஞாப கமிருக்கிறதா? சார்லி. நான்... இங்கேதான் இருக்கிறீர்கள். ஏதோ ஒன்று இந்த வாரம் சம்பவித்துக் கொண்டிருப்பதாக நான் உங்களிடம் கூறினேன். அது உங்களைச் சுற்றிலும் இருக்கின்றது. ஆனால் அதை நீங்கள் கவனித்தீர்களா என்று நான் வியப்புறுகிறேன். நான் இங்கிருந்து அரிசோனாவுக்குச் செல்லப் புறப்பட்டபோது, தூதர்களின் கூட்டத்தின் தரிசனத்தை நான் கண்டது நினைவிருக்கிறதா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) 'ஐயன்மீர், இதுவா சமயம்? ' என்னும் செய்தி ஞாபகமிருக்கிறதா? (''ஆமென்'') அது ஞாபகத் தில் உள்ளதா? கவனியுங்கள். அங்கு ஒரே ஒரு பெருத்த இடிமுழக்கம் தான் உண்டானது, ஆனால் ஏழு தேவ தூதர்கள் தோன்றினர். அது சரியா (”ஆமென்'') ஒரு இடிமுழக்கம், ஏழு தூதர்கள் தோன்றினார்கள். “ஆட்டுக் குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்துபார் என்று இடி முழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன்.“ கவனியுங்கள். ஒரு இடி முழக்கம்-ஆனால் அதில் முத்திரிக்கப் பட்ட ஏழு செய்திகள், இக்கடைசி காலம்வரை வெளிப்பட முடியா தவை. நான் சொல்லுகின்றது உங்களுக்குப் புரிகின்றதா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி). 88இப்பொழுது, இந்த வாரத்தின் பரம இரகசியமான பாகத்தைக் கவனித்தீர்களா? அதுதான் அது. இருந்து வந்ததும் அதுவேதான். அது மனிதனல்ல, அது கர்த்தருடைய தூதர்களாகும். கவனியுங்கள். இங்கே மூவர் அதற்கு சாட்சிகளாக அமர்ந்திருக்கின்றனர். ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்பு நான் மலையின் மேலேறி, மெக்ஸி கோவுக்கு மிகவும் அருகாமையில் மலையின்மேல் வந்தேன். அப்பொழுது இங்கு வீற்றிருக்கும் இரண்டு சகோதரர்கள் என்னுடன் இருந்தனர். அவர்கள் என் கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த ஊமச்சியை (cocklebur) எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மலையே குலுங்கும்படி ஒரு பெருத்த இடி உண்டானது. அது உண்மை . அதை நான் என்னுடன் இருந்த சகோதரரிடம் அறிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒரு வித்தியாசத்தைக் கண்டனர். அவர் என்னிடம், ''ஆயத்தப்படு! கிழக்கே போ அந்த தரிசனத்தின் வியாக்கியானம் இவையேயாகும்'' என்றார். பாருங்கள்? சகோ. சாத்மனுக்கு (Sothmann) அவர் வேட்டையாடிச் சென்ற வேட்டைப் பொருள் கிடைக்கவில்லை. அவருக்கு வேட்டை பொருள் கிடைக்க நாங்களும் முயன்று வந்தோம். அவரோ என்னிடம், “இன்றிரவு அவருக்கு வேட்டைப் பொருள் கிடைக்காது. அது உனக்கு ஒரு அடை யாளமாயிருக்கும். இந்த தேவதூதர்கள் உன்னைச் சந்திக்க இருப்பதால், நீ உன்னை இப்பொழுது பிரதிஷ்டை செய்து கொள்ளவேண்டும்'' என்றார். அப்பொழுது, நான் என் சுய உணர்வில் இல்லை. 89நான் அப்பொழுது மேற்கு திசையில் இருந்தேன். தேவதூதர்கள் கிழக்கு திசையிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வந்தபோது, நானும் அவர்களுடன் எடுக்கப்பட்டேன். (அது உங்களுக்கு நினைவிருக்கிறதா?) கிழக்கிலிருந்து வந்தனர். (சபையார் “ஆமென்” என்று கூறினர் -ஆசி). இன்றிரவு நம் மத்தியிலுள்ள சகோ. ஃபிரட் சாத்மனும் (Bro. Fred Sothmann) சகோ. நார்மனும் (Bro. Norman) அதற்கு சாட்சிகள். நாங்கள் மலையை விட்டு கீழே இறங்கும்போது, சகோ. சாத்மனிடம் மேலேயே தங்கி வேட்டைபொருளை பெற்றுக்கொள்ள எவ்வளவோ தூண்டினேன். சகோ. சாத்மன், நான் கூறுவது சரியா? (சகோ.ஃபிரட் சாத்மன் “ஆமென்'' என்கிறார் -ஆசி) ஆம். அதோ அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். நான் அவரைத் தூண்டினேன். அவரோ, 'வேண்டாம்' என்று கூறிவிட்டார். நான் ஒன்றும் கூறவில்லை - கீழே இறங்கி வந்து கொண்டேயிருந்தேன். 90அன்று அந்த கூடாரத்தின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஏதோ ஒன்று... சகோ. சாத்மன், நினைவிருக்கிறதா? சில காரியங்கள் அறிவிக் கப்பட்டவுடனே, உங்களையும் சகோ. நார்மனையும்... சகோ. நார்மன் எங்கே? அங்கே பின்னால் இருக்கிறார்-அங்கு நடந்தவைகளை வெளியே கூறக் கூடாது என்று உறுதிமொழி கூறச் சொன்னேன். அது சரியா? (அந்த சகோதரர்கள் “ஆமென், அது உண்மை '' என்று கூறுகின்றனர் -ஆசி) நான் இவ்விதம் திரும்பி, கூடாரத்தை விட்டு அப்பால் நடந்தேன் அல்லவா? நான் கூறுவது சரியா? (''அது உண்மை ''). 91ஏனெனில் இதுதான் அது. முற்றிலும் அதுவேயாகும். அது நிகழும்வரை நான் அதைக் குறித்து சொல்லி, ஜனங்களைப் புரிய வைக் கக்கூடாது. ''அங்கு ஒரு தேவதூதன் மாத்திரம் வித்தியாசமாகக்' காணப்பட் டான் என்று நான் கூறியதை நீங்கள் கவனித்தீர்களா? மற்ற தேவ தூதர்களைக் காட்டிலும் அவன் மேலாகக் காட்சியளித்தான், அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்ஆசி) அவர்கள் ஒரு கூட்டமாக வந்தனர். ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று தூதர்களும் மேலே ஒருவரும் இருந்தனர். எனக்குப் பக்கத்தில் இருந்த தேவதூதன், இடமிருந்து வலம் எண்ணும்போது, ஏழாவது தூதனாயிருப்பான். அவன் மற்ற தூதர்களைக் காட்டிலும் பிரகாசமுள்ள வனாய், மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு முக்கியமானவனாய் காணப்பட்டான். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 'அவன் இவ்விதம் தன் மார்பை முன்னால் தள்ளியவாறு கிழக்கே பறந்து சென்றான்'' என்று நான் கூறினது நினைவிருக்கிறதா? ”அது என்னை மேலே தூக்கியது'' என்றும் நான் கூறினேன். ஞாபகமிருக்கிறதா? ('ஆமென்''). இதுதான் ஏழாம் முத்திரையைக் கொண்டது என் வாழ்நாள் முழுவதும் என்னை வியப்புறச் செய்த ஒன்று. ஆமென்! மற்றைய முத் திரைகளும்கூட எனக்கு முக்கியமானவைதாம். ஆனால், ஓ, இது எனக்கு எவ்வளவு முக்கியமானதென்று நீங்கள் அறியமாட்டீர்கள். என் வாழ்வில் ஒரு சமயம்... (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை பலமுறை தட்டுகிறார் -ஆசி). நான் ஜெபித்தேன், தேவனிடம் கதறி அழுதேன். நான்-நான்-நான் அது பீனிக்ஸ் கூட்டத்திற்குப் பிறகு... என்னுடன் இருந்தவர்கள் அதை அறிவீர்கள். நான் மலையின்மேல் படுத்துக் கொண்டேன். ஒரு நாள் காலை நான் எழுந்திருந்து சபினோ கான்யானுக்கு (Sabino Canyon) - உயர்ந்த, கரடுமுரடான மலை. நான் அதன் மேலே சென்ற போது, ஒரு நடைபாதை லெம்மன் மலைக்கு (Lemmon Mountain) சென்றது. அது முப்பதுமைல் நடைதூரமாகும். அங்கு முப்பது அடி உயரமுள்ள பனி பெய்திருந்தது. அதிகாலையில் அந்த மலையின் நடை பாதையில் நான் இவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் திரும்பிச் செல்ல உந்தப்பட்டேன். நான் திரும்பி கரடுமுரடான பாறை களின் நடுவே சென்றேன். ஓ, என்னே, நூற்றுக்கணக்கான அடிகள் உயரமுள்ளவை. 92நான் இப்பாறைகளின் நடுவே முழங்காற்படியிட்டு, இந்த வேத புத்தகத்தையும், கையிலுள்ள குறிப்பு எழுதும் காகிதங்கள் அடங்கிய புத்தகத்தையும் கீழே வைத்துவிட்டு, (சகோதரன் பிரான்ஹாம் தன்னு டைய வேதபுத்தகத்தையும், அந்த புத்தகத்தையும் காண்பிக்கிறார் -ஆசி) ''தேவனாகிய கர்த்தாவே, இந்த தரிசனத்தின் அர்த்தம் என்ன? நான்-நான்-நான் மரிக்கவேண்டுமென்பதன் அறிகுறியா இது?'' என்று கேட்டேன். ''ஏதோ ஒன்று என்னைக் குலுக்கியதால் நான் மரிக்கும் தருணம் வந்துவிட்டதாகக் கருதினேன்.'' என்று உங்களிடம் கூறினது நினைவிருக்கிறதா? உங்களில் எத்தனை பேர் அதை நான் சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சமாக எல்லாரும் கேட்டிருக்கிறீர்கள். (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) ஏன், பாருங்கள், நீங்கள் அனை வரும் அதைக் கேட்டிருக்கிறீர்கள். அது என் மரணத்தைக் குறிப்பதாக நான் எண்ணினேன். பிறகு என் அறையில் நான் அவரிடம், 'கர்த்தாவே அது என்ன என்ன- என்ன? அது எதைக் குறிக்கிறது? நான் மரிக்கப் போகிறேன் என்பதுதான் அதன் அர்த்தமா? அப்படியானால் சரி, அதை நான் என் குடும்ப நபர்களுக்கு அறிவிக்கமாட்டேன். என் ஊழியம் முடிவடைந்து விட்டால், நான் போகட்டும்“ என்றேன். நான் கூறினேன்... இப்பொழுது, அது என்ன? ஆனால் அவர் ஒரு சாட்சியை அனுப் பினார்-நான் கூறினது நினைவிருக்கலாம்-அது நான் நினைத்தவாறு அல்ல. அது என் ஊழியத்தின் தொடர்ச்சியாகும். ஓ, ஓ, ஓ. நான் கூறுவது அர்த்தமாகின்றதா? - பாருங்கள் (சபையார் ''ஆமென்' - ஆசி) சபினோ கான்யானில் உட்கார்ந்து கொண்டு... 93பரமபிதா இதை அறிவார்-அது நிறைவேறுவதை நீங்கள் கண்டது எவ்வளவு உண்மையோ, அது போலவே அந்த தேவதூதர்கள் அங்கு இறங்கி வந்து ஒவ்வொரு செய்தியும் சரியே என்று உறுதிப்படுத்தினர். அப்படியானால், அது தேவனிடத்திலிருந்து வந்ததா இல்லையா என்பதை இதனால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அது தரிசனத்தின் மூலம் உங்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. ஆராதனை முடியும்வரை அதை உங்களிடம் கூறக்கூடாது என்னும் கட்டளை பெற்றேன். அன்று காலை சபினோ கான்யானில் கரங்களை உயர்த்தியவாறே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, காற்று என்.. பழைய கறுப்புத் தொப் பியைக் கொண்டு சென்றது. நான் நின்று கொண்டு கரங்களை உயர்த்தி, “தேவனாகிய கர்த்தாவே, இதன் அர்த்தம் என்ன? என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் பரம வீட்டுக்குச் செல்ல வேண்டிய சமயம் வந்து விட் டிருந்தால், நான் அங்கு செல்லட்டும். அவர்கள் யாரும் என்னைக் கண்டு பிடிக்கவே முடியாது. நான் போக வேண்டுமானால், யாரும் அழுது துக்கிக்க நான் விரும்பவில்லை. நான் - நான் பரம பாதையில் நடந்து சென்று விட்டேன் என்று மாத்திரம் என் குடும்பத்தினர் நினைக்க விரும்புகிறேன். அவர்கள் என்னைக் கண்டுபிடிக்க முடியாது. என்னை எங்காவது மறைத்துக் கொள்ளும். நான் போக வேண்டுமானால், என்னைப் போக அனுமதியும். ஒருக்கால் என் மகன் ஜோசப் என் வேதபுஸ்தகம் இங்கிருப்பதைக் கண்டுபிடிக்கலாம். அது அவனுக்கு உபயோகமாயிருக்கும். கர்த்தாவே, நான் செல்ல வேண்டுமானால், நான் அங்கு செல்ல அனுமதியும்' என்று ஜெபித்தேன். நான் என் கைகளை உயர்த்தியிருந்தேன், அப்பொழுது அந்த நேரத்திலேயே ஏதோ ஒன்று என் கையைத் தட்டியது. 94நான் எந்நிலையில் இருந்தேன் என்று என்னால் கூற இயலாது. நான் உறங்கிக் கொண்டிருந்தேனா அல்லது நினைவிழந்த நிலையில் இருந்தேனா என்பது எனக்குத் தெரியாது. அது தரிசனமா? அதுவும் என்னால் கூற இயலாது. என்னால் கூற முடிந்த ஒரே காரியம் என்ன வெனில்... அது தூதர்களின் வருகையைப் போன்றதாகவே இருந்தது. அது என் கையைத் தட்டியது. நான் பார்த்தபோது அது ஒரு பட்டயம். அதற்கு முத்துக்களால் செய்யப்பட்ட கைப்பிடி உண்டா யிருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. அதன் உறை பொன்னினால் செய்யப்பட்டிருந்தது. அதன் வெட்டும் பாகம் (blade) மிகவும் பள பளப்பாக வெள்ளியினால் செய்யப்பட்டது போன்றிருந்தது. ஓ, என்னே, அது மிகவும் கூர்மையாகவும் இருந்தது. “மிகவும் அழகாயிருக்கிற தல்லவா? என் கையில் அது சரியாகப் பொருந்துகின்றது'' என்று எண்ணினேன். ஆனால், ''பட்டயம் என்றாலே எனக்கு அதிக பயம். நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்று நினைத்தேன். அப்பொழுது ஒரு சத்தம் தோன்றி பாறைகளையும் அதிரச் செய்தது. அது, ''இது அந்த இராஜாவின் பட்டயம்'' என்று உரைத்தது. அப்பொழுது நான் என் பழைய நிலைக்கு வந்தேன். ''அந்த இராஜாவின் பட்டயம்'', இப்பொழுது அது, ''ஒரு இராஜாவின் ஒரு பட்டயம்'' என்று கூறவில்லை. ஆனால்... அது அந்த இராஜாவின் பட்டயம்“ என்றுதான் உரைத்தது. ''அந்த இராஜா'' என்பவர் ஒருவர்தான், அவர்தான் தேவன். அவருக்கு ஒரு பட்டயம் மாத்திரமே உள்ளது. அதுதான் அவருடைய வார்த்தை. நான் அதனால் தான் வாழ்ந்து வந்திருக்கிறேன். ஆகவே தேவனே, உதவி புரியும். நான் இங்குள்ள அவருடைய பரிசுத்த பீடத்தண்டை நிற்கிறேன். அவருடைய பரிசுத்த வார்த்தை இங்குள்ளது. அதுதான் தேவனுடைய வார்த்தை. ஆமென். ஓ! என்னே ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு வருகிறோம் - என்ன மகத்தான காரியம். பரம இரகசியத்தைக் கண்டீர்களா? அந்த மூன்றாவது... அந்த பட்டயம் என்னை விட்டு எடுபட்டபோது ஏதோ ஒன்று என்னிடம் வந்து, “பயப்படாதே” என்று உரைத்தது. ஒரு சத்தத்தையும் அப்பொழுது நான் கேட்கவில்லை-அது எனக்குள்ளே பேசினது. நான் அங்கு நிகழ்ந்தவாறே உங்களிடம் கூறுகிறேன் என்பது சத்தியம், என்னைத் தட்டிய அது, “பயப்படாதே, இதுதான் அந்த மூன்றாம் இழுப்பு'' என்றது. 95மூன்றாம் இழுப்பு! அது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர் -ஆசிய அவர், ''நீ விளக்கம் கூறின யாவற்றிற்கும் போலியாட்கள் உண்டு. ஆனால் இதை நீ செய்ய முயற் சிக்காதே'' என்றார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த தரிசனம் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது. ('ஆமென்'') அது ஒலிநாடாக் களில் பதிவு செய்யப்பட்டு எல்லாவிடங்களிலும் சென்றுள்ளது. ஆறு வருடங்கள். ஏழு வருடங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அவர், 'அதை விளக்க முயற்சி செய்ய வேண்டாம். இதுதான் மூன்றாம் இழுப்பு. ஆனால் நான் உன்னை அங்கு சந்திப்பேன்' என்றார். அது சரியா? (“ஆமென்”'). அவர், ''முயற் சிக்க வேண்டாம்...'' என்றார். 96நான் ஒரு குழந்தையின் பாதரட்சையுடன் நின்று கொண்டிருந்த போது, அவர் என்னிடம், ''இப்பொழுது, முதலாவது இழுப்பைச் செய். அதை நீ செய்யும்போது, மீன் தன்னை வசப்படுத்தும் தூண்டிலின் பின் னால் ஓடும்'' என்றார். பின்பு அவர், ''உன் இரண்டாம் இழுப்பைக் கவனி. ஏனெனில் சிறு மீன்கள் மாத்திரமே இருக்கும்'' என்றார். அவர் பின்னும், ''மூன்றாம் இழுப்பின் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வாய்'' என்றார். போதகர் எல்லாரும் ஒன்றுகூடி என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, உங்களால் இதைச் செய்ய முடியும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அல்லேலூயா! சகோதரன் பிரான்ஹாம்'' என்றனர். 'அங்குதான் நான் சிக்கலில் பிணைக்கப்பட்டேன். இந்த போதகக் குழுவினருடன். பாருங்கள்? நான் மக்களை சிநேகிக்கிறேன். பாருங்கள்? நான் இதை, அதை, எல்லாவற்றையும் விளக்கித் தரவேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். 97நான், ''நல்லது, ஊஊம் ஊம் அதன் அர்த்தம் எனக்குப் புலப் படவில்லை. மீன் பிடிக்கும் முறையை நானறிவேன். மீன் பிடிக்கும் போது முதலாவதாக செய்ய வேண்டியது-இவ்விதம்தான் அதைச் செய்வது வழக்கம். சுற்றிலும் மீன்கள் உள்ளதை காணும்போது தூண் டிலை திடீரென்று இழுக்க வேண்டும்'' என்றேன். நல்லது, அதுதான் மீன் பிடிக்கும்போது கையாள வேண்டிய உபாயம். 'தூண்டிலை இழுக்க வேண்டும்.'' இப்பொழுது நான் முதன் முறையாக தூண்டிலை திடீ ரென்று இழுத்தபோது, மீன்கள் பின்வந்தன. ஆனால் அவை யாவும் சிறிய மீன்களாகும். அவைகள் அதைப் பிடிப்பது போலிருந்தன. ஆகவே பிறகு நான்- நான் கூறினேன், ''பிறகு நீங்கள் - நீங்கள் அவ்வாறு...'' கரையில் நான் தூண்டிலை இழுத்தபோது, ஒரு மீன் அகப் பட்டது. ஆனால் அது தூண்டிலின்மேல், தோல் சுற்றிக் கொண் டிருந்தது போன்று அவ்வளவு சிறியதாக இருந்தது. நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம், “அப்படி செய்ய வேண்டாமென்று நான் உன்னுடன் சொன்னேன் அல்லவா?'' என்றது, நான் அழத் தொடங்கினேன். எல்லா கயிறுகளும் என்னைச் சுற்றிலும் இவ்விதம் சிக்கலாக இருந்தது போன்று காணப்பட்டது. ஆகவே நான்... தலையைத் தாழ்த்தியவண்ணம் இவ்வாறு நான் நின்று கொண்டு அழுதபடியே, 'தேவனே, ஓ, என்னை மன்னித்தருளும். நான்நான் ஒரு மூடன். தேவனே, என்னை மன்னித்தருளும்' என்று மன்றாடினேன். கயிறு என்னைச் சுற்றிலும் சிக்கிக் கொண்டிருந்தது. 98என் கையில் இவ்வளவு நீளமுள்ள ஒரு குழந்தையின் பாதரட்சை இருந்தது. அதில் கோர்க்க வேண்டிய கயிறும் என்னிடமிருந்தது. அது சுமார் என் கைவிரலளவு பருமனாக இருந்தது. சுமார் அரை அங்குலம் பருமனான கயிற்றை அச் சிறு துவாரத்தில் கோர்க்க நான் முயன்றேன். ஊம்! அப்பொழுது ஒரு சத்தம் உண்டானது. அது, ''பெந்தெகொஸ்தே குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட பரம காரியங்களைக் கற்பிக்க உன்னால் இயலாது. அவர்களைத் தனியே விட்டு விடு“ என்றது. அப்பொழுது அவர் என்னைக்கொண்டு சென்று, ஒரு கூட்டம் நடக்குமிடத்தில் உட்கார வைத்தார். அது ஒரு கூடாரத்தைப் போன்று அல்லது ஆலயத்தைப் போன்று காட்சியளித்தது. அங்கு நான் பார்த்த பொழுது, ஒரு மூலையில் பெட்டியைப்போன்ற ஒரு சிறிய ஸ்தலம் இருந்தது. நீங்கள் புகைப்படத்தில் காணும் அந்த ஒளியானது எனக்கு மேல் காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது. அது என்னிடமிருந்து இவ்விதம் சுழன்றுச் சென்று அந்தக் கூடாரத்தின் மேல் தங்கி, என்னை நோக்கி, 'உன்னை நான் அங்கு சந்திப்பேன். இதுதான் மூன்றாம் இழுப்பு. இதை யாரிடமும் கூறவேண்டாம்' என்றது. சபினோ கான்யாவிலும் அவர், “இதுதான் மூன்றாம் இழுப்பு'' என்றார். அதனுடன் மூன்று மகத்தான காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவை களில் ஒன்று எனக்கு இன்று... அல்லது நேற்று வெளிப்பட்டது. மற்றொன்று இன்றைக்கு வெளியானது. மூன்றாவது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அது நான் அறியாத மொழியில் எழுதப்பட்டிருந்தது. நான் நின்றவண்ணம் அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மூன்றாம் இழுப்பு வந்தது. (சகோதரன். பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறைகள் தட்டுகிறார்-ஆசி) தேவனுடைய பரிசுத்த ஆவியானவர். ஓ! என்னே ! அதன் காரணமாகத்தான் முழு பரலோகமும் அமைதியாயிருந்தது. 99இப்பொழுது நான்- நான் இத்துடன் நிறுத்தி விடுவது நல்லது. பாருங்கள்? இதற்கு மேல் ஒன்றையும் கூறாதபடிக்கு நான் ஆவியான வரால் தடை செய்யப்படுகிறேன். பாருங்கள்? ஆகவே நினைவில் கொள்ளுங்கள். ஏழாம் முத்திரை திறக்கப் படாத காரணம் (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறுமுறை தட்டுகிறார் -ஆசி). அவர் அதை வெளிப்படுத்தாத காரணம், அதைக் குறித்து யாரும் அறியக்கூடாது என்பதற்காகவே, அதைக் குறித்து நான் ஒரு வார்த்தையும் அறியாதிருக்கும்போதே, அநேக வருடங்களுக்கு முன்பு அத்தரிசனம் எனக்கு உண்டானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி). அது மற்றவைப் போன்று சரிவர தேவனுடைய வார்த்தையுடன் இணைகின்றது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை இருமுறை தட்டுகிறார் -ஆசி). தேவன் என் இருதயத்தை அறிவார். அது அவ்விதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது இங்கே உள்ளது. நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. ஊ ஊம் ஓ! என்னே . அது தேவனிடத்திலிருந்து வந்தது என்பதைக் காண்பிக்கிறது. ஏனெனில் இந்தக் கடைசி செய்தியில் தேவனளித்த வாக்குத்தத்தங் களுடன் அது வெகுவாக இணைகிறது. நீங்கள் கவனியுங்கள். இப் பொழுது, கவனியுங்கள். காலம் முடிவடையும் என்னும் இச்செய்தியில் அதாவது இந்த முத்திரையில்.... அவர் ஆறு முத்திரைகள் என்னவென்பதை வெளிப்படுத்தினார். ஆனால் ஏழாம் முத்திரையைக் குறித்து அவர் ஒன்றும் கூறவில்லை. முடிவின் காலத்தின் முத்திரைத் தொடங்கும்போது, நாம் அதை அறிந்துக் கொள்ளுமுன்பாக அது பரிபூரண இரகசியமாயிருக்கும் என்று வேதம் கூறுகின்றது. வெளிப் படுத்தல் 10:1—7-ஐ நினைவுபடுத்திக் கொள்ளவும். ''ஏழாம் தூதனின் செய்தியின் முடிவில், தேவனுடைய எல்லா இரகசியங்களும் அறியப் படும். அதிகாரம் 10:1-7. நாம் ஏழாம் முத்திரை திறக்கப்படுகின்ற முடிவு காலத்தில் இருக் கிறோம். 100இப்பொழுது, நான் எப்படி அதை அறிவேன்? சென்ற ஞாயிறன்று நான், “தாழ்மையுள்ளவர்களாயிருங்கள், தாழ்மையுள்ளவர்களாயிருங்கள், தேவன் சிறிய காரியங்களின் மூலமாகவே கிரியை செய்கிறார்'' என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று பிரசங்கித்தபோது நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நானே உணரவில்லை. ஆனால் இப்பொழுது அது என்னவென்று எனக்குப் புலப்பட்டுவிட்டது. அது மிகவும் எளிய விதத்தில் காணப்படுகின்றது. அத்தகைய ஒன்று ரோமா புரியிலுள்ள வாடிகனில் (Vatican) வெளிப்படும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஆனால் யோவான் ஸ்நானனைப் போன்ற ஒரு வனுக்கு அது கிடைக்கின்றது. நம் கர்த்தரின் மாட்டுத் தொழுவத்தின் பிறப்பைப் போன்று அது எளிமையானது. தேவனுக்கு மகிமை! ஆகவே எனக்கு உதவி புரியும்... சமயம் வந்துவிட்டது. ஆமென்! நாம் அந்த சமயத்தில் வாழ்கிறோம். ஓ, என்னே ! 101இப்பொழுது தேவனளிக்கும் தரிசனத்தின் உண்மையை உங்க ளால் காண முடிகின்றதா? - ஏழு தூதர்கள் என்னை மேற்கு திசையி லிருந்து கொணர்ந்தனர். அவர்கள் மேற்கிலிருந்து கிழக்கு திசைக்கு வந்து, இன்றிரவு அளிக்கப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தனர். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை இரண்டு முறை தட்டுகிறார்ஆசி) ஓ. என்னே ! இப்பொழுது அந்த மகத்தான இடியின் சத்தமும், இங்கு கொண்டு வரப்பட வேண்டிய ஊழியம் எல்லாம் வெளியாகி அது தேவனிடத்தினின்று வந்தது என்று நிரூபிக்கப்பட்டு வந்தது. சற்று யோசனை செய்து பாருங்கள். முத்திரைகளின் இரகசியங்களை நான் அறிந்திருக்க வில்லை. ஆனால் இந்த வாரம் அவை வெளிப்படுத்தப்பட்டன. யாராவது அதைக் குறித்து யோசித்தீர்களா? அந்த ஏழு தூதர்களும், வெளியாக்கப் படவிருக்கும் ஏழு செய்திகளாக நான் அதை உங்களுக்கு அளிக்க வேண்டுமென்று கருதி, அதற்கென்று என்னை இங்குகொண்டு வந்தனர் என்று உங்களில் எவராவது அதை நினைத்தீர்களா? பாருங்கள்? நினைவில் கொள்ளுங்கள், அந்த ஏழாவது செய்தியாளன். அந்த ஏழு செய்தியாளர்களும்... ஏழாம் தூதன் மாத்திரம் மற்றவர்களைக் காட்டிலும் என் கவனத்தை அதிகம் கவர்ந்தான். அவர்கள் இவ்விதம் அங்கு நின்றுக் கொண்டிருந்தனர். பாருங்கள், நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். நான் இங்கு நின்று கொண்டு, கவனித்துக் கொண்டு... பாருங்கள், சிறகுகளை அடித்து பறந்து செல்லும் அந்த சிறிய பறவைகளின் முதற் கூட்டத்தைக் கவனமாகப் பார்த்துக் கொண் டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவை கிழக்கு நோக்கி பறந்து சென்றன. அடுத்தபடியாகக் காணப்பட்ட இரண்டாம் பறவைக் கூட்டம், முதற் கூட்டத்திலுள்ள பறவைகளைக் காட்டிலும் பெரிதாகவும் பிரகாசமாகவும் காணப்பட்டன. அவை புறாக்கள் போல் தோன்றின. அவைகளின் சிறகுகள் முனை கூர்மையாகவும் அமைந்திருந்தன. அவை கிழக்கு நோக்கி பறந்துச் சென்றன. முதலாம் இழுப்பு, இரண்டாம் இழுப்பு, அடுத்தபடியாகத் தூதர்கள். 102நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வெடி சத்தம் அகன்றது, நான் இவ்விதம் மேற்கு திசை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் வந்து என்னைக் கொண்டு சென்றதால் என் சுய உணர்வை இழந்தேன். நான் தூதர்களின் கூட்டத்துக்குள் நுழைந்தபோது, என் இடது பாகத்தில் காணப்பட்டவன் தான் எனக்கு வினோதமாகக் காட்சியளித்த அந்த தூதன், இடமிருந்து வலம் எண்ணும் போதுே, அவன் ஏழாம் தூதன். ஏழு செய்தியாளர்களை நினைவில் கொள்ளுங்கள். ஜூனியர் ஜாக்ஸன் சொப்பனத்தில் கண்ட வெண்பாறையிலான கூர் நுனிக் கோபுரம் (pyramid) ஞாபகத்திலிருக்கிறதா? (சபையார் ''ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) பாருங்கள். அதன் அர்த்தத்தை நான் விவரித்துக் கூறினேனே? கவனியுங்கள். நான் உங்கள் மத்தி யிலிருந்து புறப்பட்ட அன்றிரவு... ஆறு சொப்பனங்கள் உண்டாயின. அவை யாவும் ஒன்றையே சுட்டிக்காண்பித்தன. அதன் பின்னர் தரிசனம் உண்டாகி, என்னை மேற்கிற்கு அனுப்பினது. ஜூனியர் அதை கவனித்துக் கொண்டிருந்த சமயம்... கவனியுங்கள். எவ்வளவு பரிபூரணமாக அமைந்துள்ளது! இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலேயே இவை உண்டாயின என்பதை நீங்கள் உணருகின்றீர்கள் என்று நான் நம்புகிறேன். அவரே எல்லாவற்றிற்கும் மூலமானவர், இதற்கு முன்பு நான் உங்கள் ஜீவியத்தில், இவ்வளவு வெளிப்படையாகப் பேசாததற்கு ஒரே காரணம். ஆனால், அந்த சமயம் அருகாமையில் வந்து கொண் டிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? கவனியுங்கள். 103கவனியுங்கள், இதை ஆணித்தரமாக உங்களிடம் கூற விரும்பு கிறேன். நான் உங்களை விட்டு மறுபடியும் செல்லவிருக்கிறேன். நான் எங்கே போவேனென்று தெரியாது. மற்றவிடங்களிலும் நான் சுவி சேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது... ''நான் எல்லாவிதமான மூட வைராக்கியக் கொள்கைகளையும் கேட்டிருக்கிறேன்'' என்று நீங்கள் ஒருக்கால் கூறலாம். அதைக் குறித்து எனக்குத் தெரியாது. நான் எந்த ஒரு மனிதனையும் நியாயந்தீர்க்க முடியாது. எனக்காகவே மாத்திரம் நான் தேவனிடத்தில் பதில் கூற வேண் டியவனாயிருக்கிறேன். இத்தனை வருட காலமும், நான் கர்த்தருடைய நாமத்தில் கூறின ஏதாவதொன்று சரியாயிராமல் போயிருக்கின்றதா? (சபையார் ''இல்லை'' என்று கூறுகின்றனர் -ஆசி) அவ்விதம் யாருமே கூறமுடியாது. ஏனெனில் அவர் என்னிடம் கூறின விதமாகவே நான் உங்களுக்கு எடுத்துரைத்திருக்கிறேன் அது உண்மையென்று ஊர்ஜிதப்படுத்த இதைக் காண்பிக்க விரும்புகிறேன். “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த் தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்'' - சொப்பனத்தின் அர்த்தத்தை விவரித் தல். யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தத்தை விவரித்தான், தரிசனங் களும் கண்டான். அது உண்மையா? (சபையார் ”ஆமென்“ என்று கூறுகின்றனர் -ஆசி) 104இதை இப்பொழுது கவனியுங்கள்- இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது ஜூனியர் தன் சொப்பனத்தில் கூர்நுனிக் கோபுரம் வைக்கப்பட்ட ஒரு வயல்வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது பாறை களில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. நான் ஜனங்களுக்கு அது என்ன வென்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேனாம். ஜூனியர், அது சரியா? (சகோதரன் ஜூனியர் ஜாக்சன் “அது உண்மை '' என்று கூறு கின்றார் -ஆசி) இது நிகழ்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு இச் சொப்பனத்தை அவர் கண்டார். இப்பொழுது அடுத்ததைக் கவனியுங்கள். நான் நீண்ட கடப் பாறை போன்ற ஒன்றை எடுத்து அதை வெட்டினவுடன், அதற்குள் வெண்பாறை ஒன்று இருக்கக் கண்டேனாம். அதில் ஒன்றும் எழுதப் படவில்லை. அப்பொழுது நான் மேற்கு திசையை நோக்கிப் புறப்பட் டேனாம். புறப்படும்போது, ''நீங்கள் மேற்கு பக்கம் செல்ல வேண்டாம். நான் திரும்பி வரும்வரை இதை பார்த்துக் கொண்டே இருங்கள்'' என்று கூறினோனாம். அந்த வெடி வெடிப்பதற்காக மேற்குச் சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்றவனாக கிழக்கு திசை நோக்கி திரும்ப வந்து, எழுதப் படாத வார்த்தைக்கு அர்த்தம் உரைத்தேன். இது சர்வ வல்லமையுள்ள தேவனின் பார்வையில் பரிபூரணமாக அமையாவிடில், வேறு எது அமையும்? நண்பர்களே, நான் எதற்காக இதைக் கூறுகின்றேன்! நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்பிக்கவே. மற்றவை தேவனுடைய வார்த்தையுடன் சரிவர பொருந்தியது போன்று, இதுவும் தேவனுடைய வார்த்தையுடன் முற்றிலும் பொருந்துகின்றது. நாம் இங்கே இருக்கிறோம். நண்பர்களே, நாம் முடிவு காலத்தில் வாழ்கிறோம். 105வெகு விரைவில் “காலம் என்பது கடந்து செல்லும்.'' இலட்சக் கணக்கானோர் உயிரிழப்பார்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோர் அணுசக்தியின் காலத்திற்கு தீவனமாவார்கள் (fodder). நாம் கடைசி மணி நேரத்தில் வாழ்ந்து வருகிறோம். சர்வ வல்லவரின் கிருபையாலும் அவருடைய ஒத்தாசையாலும் அவருடைய ஜனங்கள் கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். ”இன்னும் எவ்வளவு காலம் உள்ளது சகோதரன் பிரான்ஹாம்?'' ஒருக்கால் இருபது வருடம், அல்லது ஐம்பது வருடம், அல்லது நூறு வருடம்கூட செல்லலாம் எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்று காலையிலும் அவர் வரக்கூடும். இல்லையேல் இன்றிரவு வரலாம். எனக்குத் தெரியாது. அவர் வரும் நாளை அறிவதாகக் கூறுபவர் தவறு செய்கின்றனர். பாருங்கள்? உண்மையில் அவர்களுக்குத் தெரியாது. தேவன் மாத்திரமே அதை அறிவார். 106இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய சமூகத்துக்கு முன்பாக நான் சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைத்தேன். அவை யாவையும் பரிசுத்த ஆவியினால் நான் பகுத்தறிந்தேன. அவை ஒவ்வொன்றும் வேதத்தில் தங்கள் தங்கள் இடத்தில் சரியாகப் பொருத்தப்பட்டன. ஆனால், இந்த முத்திரையின்கீழ் அடங்கியிருக்கும் அந்த மகத் தான இரகசியம் என்னவென்பது எனக்குத் தெரியாது. அது எனக்குத் தெரியாது. அது என்ன கூறினது என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், நான் பார்த்தது அந்த ஏழு இடிகள் ஒன்றுக் கொன்று அருகாமையில் இருந்து கொண்டு, ஏழு வித்தியாசமான சமயங் களில் முழங்கி, நான் கண்டவற்றை வெளிப்படுத்தினது என்பதை மாத்திரம் நானறிவேன். அதை நான் கண்டபோது, அங்கு பறந்து வந்த அதன் அர்த்தத்தை நான் உற்று நோக்கினேன். ஆனால் அது என்னவென் பதை என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை. நான் கூறுவது முற்றிலும் உண்மையாகும். பாருங்கள்? அது வெளிப்படுவதற்கு இன்னும் சமயம் வரவில்லை . ஆனால் அந்த சுற்று வட்டத்திற்குள் (Cycle) அது வருவதற்கு சமயம் அருகாமையில்தான் உள்ளது. நான் கர்த்தரின் நாமத்தில் இதைக் கூறுகிறேன் என்பதை நினைவுகூரவும். எந்த நேரத்தில் என்ன நேரிடும் என்பதை நீங்கள் அறியாதபடியினால், நீங்கள் எப்பொழுதும் ஆயத்த மாயிருங்கள். 107இப்பொழுது இது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்படுகின்றது. இதை கேட்கும்போது, என் நண்பர்களில் ஆயிரக்கணக்கானவர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, 'சகோ. பிரான்ஹாம் தன்னை தேவனுடைய சமூகத்தில் உயர்த்தி, தீர்க்கதரிசியாகவோ ஊழியக்கார ராகவோ தன்னைப் பாவித்துக் கொள்கிறார்' என்று கருதி என்னை விட்டு விலகக்கூடும். நான் உங்களுக்கு இதைச் சொல்லட்டும். என் சகோதரரே, அது தவறாகும். நான் கண்டதையும் எனக்கு அறிவிக்கப்பட்டதையும் மாத்திரமே நான் உரைக்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செய்யப் போகின்றது யார்... என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாது. அனால் ஒன்றை நானறிவேன்- அதாவது அந்த ஏழு இடிகளும் பரலோகம் அமைதியான காரணத்தின் இரகசியத்தை தங்களுக்குள் வைத்துள்ளன. எல்லோருக்கும் புரிந்துவிட்டதா? (சபையார் 'ஆமென்'' என்று கூறு கின்றனர் - ஆசி) அந்த மகத்தான நபர் தோன்ற நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே, அவர் தோன்றும் நேரம் இப்பொழுதாக இருக் கலாம். ஜனங்களை தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப முயன்ற என்னுடைய ஊழியம் ஒருக்கால் அதற்கு அஸ்திபாரமாக அமைந் திருக்கும். அப்படியானால், நான் உங்களை விட்டு ஒரேயடியாகச் செல்ல நேரிடும். ஒரே சமயத்தில் நாங்கள் இருவர் இருக்க முடியாது. பாருங்கள்? அப்படி இருக்க நேர்ந்தால், அவர் பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும். எனக்குத் தெரியாது. 108ஆனால் அந்த இரகசியம் அது என்னவென்றும், அது வரை அது வெளிப்படுவதை நான் கண்ணாரக் காணவும் தேவன் எனக்கு சிலாக்கியம் அளித்தார். இப்பொழுது, அது சத்தியமாகும். இவ்வாரம் நடைபெற்ற யாவையும் நீங்கள் கவனித்துக் கொண்டு வந்தீர்களென்று நிச்சயமாயுள்ளேன். காலின்ஸ் (Collins) என்பவரின் மகன் அன்றிரவு சாகும் தருவாயில் இருந்ததை நீங்கள் நிச்சயம் கவனித் திருப்பீர்கள்; அவ்வாறே இரத்தப் புற்றுநோய் கொண்ட அந்தப் பெண்ணும். தேவனுடைய இராஜ்யம் வரப் போகின்றது. அது சந்தேகமான ஒன்றாய் இருந்து வந்து இப்பொழுது படிப்படியாக அது உறுதியாயுள்ளது. ஆனால் அது ஜனங்களை மூச்சு திணறச் செய்ய வேண்டாம். ''நீதிமானாக்கப்படுதல்' என்னும் சத்தியத்திலிருந்து, “பரிசுத்தமாக்கப் படுதல்'', ”பரிசுத்தாவியின் அபிஷேகம்' போன்ற சத்தியங்களுக்கு வந்து, இப்பொழுது இங்கே, இங்கே வந்துள்ளோம். பாருங்கள்? நாம் ஒவ்வொரு முறையும் தேவனுடைய அருகாமையில் இழுக்கப்பட்டுக் கொண்டே வருகிறோம். மெதோடிஸ்ட் போதகர்களே, “பரிசுத்தமாக்கப்படுதல்” என்னும் உங்கள் செய்தியானது, லூத்தர் பிரசங்கித்ததைக் காட்டிலும் மேலானது என்பதை உங்களால் காண முடியவில்லையா? பெந்தெகொஸ்தரே. ''பரிசுத்த ஆவியின் அபிஷேகம்'' என்னும் உங்கள் செய்தியானது, மெதோடிஸ்டுகள் பிரசங்கித்ததைக் காட்டிலும் மேலானது என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா? நான் சொல்வது உங்களுக்குப் புரிகின்றதா? ஓ, அநேக காரியங்கள் இப்பொழுது நம்மிடையே காணப்படு கின்றன. அது உண்மை . தவறை இழிவாகக் கருதாமல், ஜனங்கள் சத்தியத்தைக் கூறாமல் பொய்யைக் கூறுவதை நான் வெறுக்கிறேன். ஆனால் நான் - நான் சத்தியத்தை மனப்பூர்வமாய் நேசிக்கிறேன், அது எவ்வளவு தான் மற்றவர்களுக்கு இந்த வழியில், அந்த வழியில் தடங்கலாய் இருந்தாலும், அது சத்தியமாயிருந்தால், தேவன் அது சத்திய மென்று முடிவில் ஊர்ஜிதப்படுத்துவார். அவர் ஒரு நாளில் இதை செய் யாமற்போனால், நான் கண்ட தரிசனங்கள் தவறாயிருக்க வேண்டும். அது எங்கே என்னைப் பொருத்துகின்றது என்பதை நீங்கள் அறிகிறீர்கள் அல்லவா? 109''சகோ. பிரான்ஹாமே, அது எப்பொழுது சம்பவிக்கும்?'' என்னால் கூற முடியாது, எனக்குத் தெரியாது. ஆனால் வரப்போகும் ஒரு நாளில், நாம் இந்தப் பூமியில் சந்திக்கா விடிலும், அங்கே கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக சந்திக்கப் போகின்றோம். நீங்கள் காணப்போகின்றது என்னவெனில், அந்த அறையில் தேவனிடமிருந்து வெளிப்பாடு மற்றவைகளைப்போல வந்தபோது, அவைகள்... அந்த முத்திரையின் ஒரு இரகசியம் என்ன வெனில் அது மாத்திரம் வெளிப்படாததன் காரணம், ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முழங்கினதினாலேயே. அங்கே, அது பரிபூரணமாய் உள்ளதா? ஆனால் யாருக்கும் அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. அது எழுதப்படவுமில்லை. ஆகவே நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நாம் இங்கே இருக்கின்றோம். தேவனுடைய வார்த்தைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவுக்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். நம் முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் அனுப்பப்படாமலிருந்தால், நாம் நம்பிக்கையற்றவர்களாய் பெரிய பாவச்சேற்றில் மூழ்கிக் கிடந் திருப்போம். ஆனால் அவருடைய கிருபையினால், அவருடைய இரத்தம் நம்மைப் பாவமறக் கழுவுகின்றது. ஒரு வாளியிலுள்ள வெண்மையாக் கும் திரவத்தில் ஒரு துளி எழுதும் மையைப் போட்டால் அந்த மை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும். அவ்வாறே நம் பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, அது இயேசுவின் இரத்தத்தில் போடப்படு கின்றது. அதன் பின்பு அது மறுபடியும் காணப்படுவதில்லை. தேவன் அவைகளை மறந்துவிடுகின்றார். பாவம் செய்யாததுபோன்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம். அந்த பலியானது பீடத்தின்மேல் நமது பிராயச் சித்தத்திற்காக இருக்கும் வரை, அவ்வளவுதான். அதுவேதான், பாருங்கள். நாம் இனி ஒருபோதும் பாவிகளல்ல. தேவனுடைய கிருபை யால் நாம் கிறிஸ்தவர்களாகிறோம். நாமாகவே நாம் எப்பொழுதும் துன் மார்க்கமாகவே இருப்போம். ஆனால் தேவகிருபையோ நமக்குப் பிரத் தியட்சமானதால் நாம் இன்று இந்நிலையை அடைந்துள்ளோம்-கிறிஸ்தவ சகோதர சகோதரிகளாக. 110இது எனக்கு மகத்தான வாரமாக அமைந்தது. நான் களைப்புற்றி ருக்கிறேன், என் சிந்தையும் களைப்புற்றிருக்கிறது. ஏனெனில் இதுதான் என்னால் செய்யக்கூடிய காரியம். ஒவ்வொரு நாளும் விசித்திரமான காரியங்கள் நடந்து கொண்டு வந்தன. சில நிமிடங்கள் அந்த அறையில் தங்கும்போது, நான் பிரமிக்கத்தக்க அளவுக்கு ஏதாவது சம்பவிக்கும். நான் முன்பு எழுதியிருந்த குறிப்புகளை எடுத்துக் கொள்வேன். டாக்டர். உரியா ஸ்மித் (Dr. Uriah Smith) என்பவரும் மற்றவர்களும் எழுதிய புத்தகங்களைப் படிப்பேன். “இதுதான் அவர்கள் ஆறாம் முத் திரைக்குக் கூறும் வியாக்கியானம்; இது நான்காம் முத்திரை. இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்'' என்று படிப்பேன். அவர் இவ்விதம் கூறியிருக்கிறார். மற்றொருவர் வேறுவிதமாகக் கூறியுள் ளார். அது சரிவரத் தென்படவில்லை. பாருங்கள்? 'அப்படியானால் அது என்ன கர்த்தாவே?' என்று கர்த்தரிடம் விண் ணப்பித்தவாறு இங்கும் அங்கும் நடப்பேன். பிறகு முழங்காற்படி யிட்டு ஜெபித்து, மறுபடியும் வேதத்தைப் படிப்பேன்- பின்பு இங்கும் அங்கும் நடப்பேன். 111பிறகு நான் அமைதியாயிருக்கும்போது, சடுதியாக அது எனக்கு வெளிப்படும். நான் உடனே பேனாவை எடுத்து நான் என்ன காண்கி றேனோ, என்ன செய்கிறேனோ அதை இவ்விதமாக கவனித்துக் கொண்டு அதை எழுதுவேன். அது வேதவாக்கியங்களுடன் பொருந்துகின்றதா என்று நாள் முழுவதும் தேடிக் கண்டுபிடித்து, அதை ஒப்பிட்டுப் பார்ப்பேன். அப்பொழுது அவைகள் எல்லாம் நிரூபிக்கப்படும்''. பாருங்கள்? நான் இதை இங்கே பெற்றுக் கொண்டேன். “அநேகம் பேருக்கு தரிசனங்களும் வெளிப்பாடுகளும் கிடைக் கின்றனவே'' என்று நான் எண்ணுவதுண்டு. அது வேத வார்த்தைக்கு முரண்பாடாயிருக்குமானால், அதை விட்டுவிடுங்கள். ஆம், அதை விட்டு விடுங்கள். அது உண்மை . 112இப்பொழுது, இப்பொழுது நான் இதையும் இதையும் பார்த்து சிறு சிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வேன். 'நமது பள்ளிக்கூட வகுப்பு இதை ஆவலோடு கேட்கும். ஏனெனில் அது வேத வாக்கியங் களுடன் இங்கு பொருந்துகின்றது, அங்கும் பொருந்துகின்றது' இது இங்கே என்ன கூறுகிறதென்று நான் பார்க்கட்டும். ஆம், ஆம், அது இங்கே சரியாக உள்ளது.'' என்று எண்ணிக் கொள்வேன். அது உண்மை . 113இது பரம இரகசியம் வெளிப்பட்ட வாரமாயிருந்தது. எல்லாமே வினோதமாயிருந்தது. ஜனங்கள் வெளிப்புறத்திலும், ஜன்னல்கள், கதவுகள் அருகாமையிலும் பின்னால் சார்ந்து நின்று கொண்டு செய்தியைக் கேட்டனர். நான் ஒரு பேச்சாளன் என்று கூறுவதற்குத் தகுதியுடையவனல்ல. நான் ஒரு பேச்சாளன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள எனக்குப் போதிய ஞானமுண்டு. அப்படியிருந்தும் ஜனங்கள் ஏன் அமர்ந்திருந்து அவ்விதம் செய்தியைக் கேட்க வேண்டும்? அவர்கள் ஏன் அதைச் செய்ய வேண்டும்? அவர்கள் என்னைப்போன்ற ஒருவன் பேசுவதைக் கேட்க வரவில்லை. ஆனால் அதிலுள்ள ஏதோ வொன்று ஜனங்களை அதற்கு இழுப்பதால் அவர்கள் வருகின்றனர். அவர்களை ஏதோவொன்று இழுக்கின்றது. பாருங்கள்? அதிலுள்ள ஏதோவொன்று அவர்களை இழுக்கின்றது. நான் ஊழியத்தைத் தொடங்கினபோது, என் மனைவி மேடையில் நின்று இந்தப் பாட்டை இங்கு பாடினாள், ''அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் தூரதேசத்திலிருந்து அவர்கள் வருகின்றனர் இராஜாவுடன் அவருடைய விருந்தாளிகளாக விருந்துண்ண திவ்விய அன்பினாலே பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்த முகத்தைக் காணவும் ஆசிர்வதிக்கப்பட்ட அவருடைய கிருபையில் பங்கு கொள்ளவும் அவர் கிரீடத்தில் இரத்தினங்களாக ஜொலிக்கவும் இந்த யாத்திரீகர்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!“ 114“இயேசுகிறிஸ்துவின் கிரீடத்தில் நீங்கள் விலையுயர்ந்த கற்களாக ஜொலிக்க வேண்டுமென்பதை” எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். பவுலும் சபையிடம் ''நீங்கள், இயேசுகிறிஸ்துவின் கிரீடத்தில் விலைமதிக்க முடியாத கற்களாகப் பிரகாசிக்க வேண்டும்'' என்று கூறினான். ஆம், நாம் இயேசு கிறிஸ்துவின் கிரீடத்தின் கற்களாக இருக்க விரும்புகிறோம். இயேசு கிறிஸ்துவின் ஸ்தானத்தில் ஒரு மனிதனை வைக்க நாம் பிரியப்படுவதில்லை. என்னைக் குறித்து நீங்கள் மறந்துவிடுங்கள், நான் உங்கள் சகோதரன்-கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. நான் ஜீவிப்பதற்கு எவ்வித தகுதியுமில்லை. அது முற்றிலும் உண்மை . நான் தாழ்மையாயிருக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் கூறவில்லை. அது சத்தியம். நல்லது என்று கூறுவதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை. ஆனால் தேவனுடைய கிருபையோ என் மங்கின கண்கள், காலத் திரைக்குப் பின்னாலுள்ளவைகளை கண்டு, திரும்பி வரச் செய்தது. 115நான் சிறு பையனாயிருந்தபோது, ஜனங்களை நான் அதிகமாய் நேசித்ததுண்டு. அவ்வாறே யாராவது ஒருவர் என்னை நேசித்து என்னிடம் பேசவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. என் குடும்பத்தின் பெயர் இழுக்கடைந்த காரணத்தால் யாரும் என்னிடம் பேசுவது கிடையாது. ஒருவரும் அதைச் செய்வதில்லை. ஆனால் என்னையே நான் தேவனிடம் சமர்ப்பித்தபோது... என் குடும்பம் ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரின் வழி வந்திருந்ததால் (அவர்கள் எல்லாரும் கத்தோலிக்கர்)... எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன்; ஆனால் நான் அங்கு சென்றபோது, அவர் வேறு வழியில் இருந்தார். நான் முதலாம் பாப்டிஸ்டு சபைக்குச் சென்ற போது, அவர் வேறு வழியில் செல்வதை நான் கண்டேன். அப்பொழுது நான், 'கர்த்தாவே, உண்மையான ஒரு வழி இருக்க வேண்டுமே' என்று கேட்டேன். ஏதோவொன்று என்னிடம், 'அது தான் தேவனுடைய வார்த்தை' என்றது. நான் அன்று முதல் தேவனுடைய வார்த்தையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் தரிசனங்கள் எல்லாவற் றையும் பாருங்கள். 116அன்று நான் மூலைக்கல்லை நாட்டினபோது, அந்த இடத்தில் அவர் அன்று காலை தரிசனத்தில் காண்பித்த அந்த வசனத்தை அதில் எழுதினேன். ''சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதை யாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு புத்தி சொல்லு. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக் கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும்'' (2 தீமோ. 4:4-5). என் அருகாமையிலிருந்த அந்த இருமரங்களும் கூட அதையே செய்ததை நான் கண்டேன். அது உண்மை . இப்பொழுது நாம் அங்குதான் வந்துள்ளோம். அது உண்மை . இப்பொழுது, நீங்கள் செய்யாத... 117நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு மறுபடியும் ஆலோசனைக் கூறுகின்றேன், நீங்கள் யாரிடமும் ''உங்களுக்கு நன்றி'' என்று சொல்ல வேண்டாம். ஒரு போதகன் அல்லது மரித்துப் போகும் எந்த மனித னிடமும் நல்லது என்பது காணப்படும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களிடம் நல்லது என்பது கிடையாது. அது யாராயிருந் தாலும் எனக்குக் கவலையில்லை, எந்த மனிதனிடத்திலும் நல்லது என்பது இல்லை. அது உண்மை . 356. இங்கு அநேக எக்காளங்கள் இருந்தால், அவைகள் ஒன்றிலிருந்து இசை எழும்ப வேண்டுமென்றால் அதை ஒரு மனிதன் தான் எழுப்ப முடியும். எக்காளங்கள் தாமாகவே சப்தமிட முடியாது. அந்த எக்காளத்தை எவ்விதம் தொனிக்கச் செய்ய முடியும் என்று அறிந்த ஒருவன் மாத்திரமே எக்காளத்தை எடுத்து அதனின்று சப்தம் எழச் செய்ய முடியும். எக்காளத்திற்கு அதனிடம் எந்த ஒரு வேலையும் இல்லை. அந்த சப்தம் அதன் பின்னுள்ள அதை ஊதும் ஞானத்திலிருந்து வருகின்றது. அது உண்மை . ஆகவே எல்லா எக்காளங்களும் ஒரே மாதிரிதான். 118அவ்வாறே எல்லா மனிதரும் ஒரே விதமாக, எல்லா கிறிஸ்த வர்களும் ஒரே மாதிரியாய் இருக்கின்றனர். நமக்குள்ளே யாரும் பெரியவரில்லை. நமக்குள்ளே பெரிய மனிதரோ, பெரிய ஸ்திரீகளோ கிடையாது. நாமெல்லாரும் சகோதரரும் சகோதரிகளுமாம். நாம் எல்லோரும் ஒரு அடைப்புக்குள் (bracket) இருப்பவர்கள். நாம் பெரி யவர்கள் அல்ல. ஒருவர் மற்றவரைப் பெரியவராகக் கருத முடியாது, இல்லை, ஐயா! நாமெல்லாரும் மனிதப் பிறவிகள். நான் கூறியதை நீங்கள் வியாக்கியானம் செய்ய முயற்சிக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவுடன் நெருங்கிய ஜீவியம் செய்து அவருக்கு கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்யவேண்டாம். இப்பொழுது எல்லோருக்கும் அது புரிகின்றதா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) உங்கள் முழு இருதயத்தோடு அவரில் அன்புகூருங்கள். அவ்விதம் நீங்கள் செய்கின்றீர்களா? (”ஆமென்'') நேசிக்கிறேன் (நான் நேசிப்பேன்) நேசிக்கிறேன் முந்தியவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே 119தேவனுக்கே துதியுண்டாவதாக! எல்லோருக்கும் நன்றாகப் புரி கின்றதா? (சபையார் ''ஆமென்'' என்று கூறுகின்றனர்-ஆசி) எல் லோரும் விசுவாசிக்கின்றீர்களா? (“ஆமென்”') நான் முதலில், ''எங்கள் செய்தியை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?'' என்ற செய்தியை அளித்தேன் என்பது நினைவிருக் கிறதா? அவர் தமது இரக்கத்தையும் அவர் நல்லவர் என்பதையும் உனக்கு வெளிப்படுத்தியுள்ளாரா?- (''ஆமென்'') ஆமென். அவரில் உங்கள் முழு இருதயத்தோடும் அன்பு கூருவதற்குக் கவனமாயிருங்கள். நான் இப்பொழுது வீடு திரும்பப் போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், ஜூன் மாதம் முதலாம் தேதியன்று மறுபடியும் வருவேன். கர்த்தர் என் இருதயத்தை ஏவினால், கோடையின் ஆரம்பத்தில் ஜூன் மாதம் அல்லது அதற்கருகாமையில், அல்லது இலையுதிர் காலத் தின் ஆரம்பத்தில், நான் மறுபடியும் வந்து, 'ஏழு கடைசி எக்காளம்' செய்தியை அளிக்க நான் ஏழு இரவுகளை ஒதுக்குவேன். உங்களுக்கு அது பிரியமாயுள்ளதா? நீங்கள் விரும்புகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்) தேவன் அதற்கென்று எனக்கு உதவி புரிய நீங்கள் எனக்காக ஜெபம் செய்வீர்களா? ('ஆமென்“') சரி, நாம் மறுபடியும் சந்திக்கும்வரை இந்த பழமையான நல்ல பாட்டை நினைவுகூருங்கள். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தியவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. நீங்கள் தலைவணங்குங்கள். நான் உங்களுக்காக ஜெபம் செய்ய விரும்புகிறேன். உங்கள் போதகர் கூட்டத்தை முடிக்கு முன்பு, உங்க ளுக்காக நான் ஜெபம் செய்ய விரும்புகிறேன். 120எங்கள் பரமபிதாவே, ஜனங்கள் இதை அறிந்து கொள்ளட்டும். கர்த்தாவே, சிலர் அதை புரிந்துகொள்ளவில்லையென்பதை நான் உறுதியாய் அறிவேன். ஆனால் பிதாவே, இவர்கள் இந்த நோக்கத்தை அறிந்து, நீர் அவர்களுக்கு அளித்த கிருபையின் காரணமாகவே இவை வெளிப்பட்டன என்று அறிந்து கொள்ளட்டும். நீர் எங்களுக்கு வெளிப் படுத்தினவைகளை நாங்கள் அறிந்துகொள்ள எங்களுக்கு அறிவைக் கொடுத்ததற்காக, கர்த்தாவே, உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். இந்த கூட்டத்திற்கு வந்துள்ள யாவருக்கும் நான் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, இங்குள்ள யாராவது விசுவாசிகளாயிரா விட்டால் அவர்கள் விசுவாசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஒலிநாடாக்களில் செய்திகளைக் கேட்கப் போகும் எல்லாருக் காகவும் நான் ஜெபிக்கிறேன். அவிசுவாசிகளின் வீட்டில் இந்த ஒலி நாடாக்கள் கேட்கப்படுமானால் நிச்சயம் இது அங்கு கேட்கப்படும்... பிதாவே அவர்கள் தேவ தூஷணமான வார்த்தைகளைப் பேசும் முன்பு, முதலில் உட்கார்ந்து வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, சொல்லப் பட்டவைகளை அதனுடன் ஒப்பிட்டு அது சத்தியமா இல்லையா என்று உத்தமமாக அறிய முற்படுகின்றனர் என்பதை உம்மிடம் அறிவிக் கட்டும். பிதாவே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். 121சுவர்களின் அருகாமையிலும், வெளிப்புறத்திலும், மோட்டார் வாகனங்களிலிருந்தும் செய்தியைக் கேட்டவர்களுக்காகவும், இந்த சிறு பிள்ளைகளுக்காகவும், உள்ளிருந்தவர்களுக்காகவும் நான் ஜெபிக் கிறேன். கர்த்தாவே, எல்லோருக்காகவும் நான் ஜெபங்களை ஏறெடுக் கிறேன். கர்த்தாவே, என் ஜெபத்திற்கு நீர் பதிலுரைத்து அவர்களை ஆசீர் வதிக்க நான் வேண்டுகிறேன். கர்த்தாவே, முதலாவதாக எல்லோருக் கும் நித்திய ஜீவனை அளியும். ஒருவரும்கூட கெட்டுப் போகாதபடிக்கு உம்மிடத்தில் மன்றாடுகிறேன். பிதாவே, இம்மகத்தான சம்பவம் எப்பொழுது நிகழும் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த அடையாளங்கள் தோன்று வதையும், வேத வாக்கியங்கள் நிறைவேறுவதையும் நாங்கள் காணும் போது, அவை எங்கள் இருதயங்களை, அதிகமாய் எச்சரிக்கின்றன. பிதாவே, தேவனே, நீரே எங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டுகிறேன் எங்கள் அருமை போதகரான சகோ. நெவிலுக்கு உதவி புரிய மன்றாடுகிறேன். கர்த்தாவே, அவரைக் கிருபையினாலும், வல்லமை யினாலும் அறிவினாலும் நிரப்பி, சேகரிக்கப்பட்ட இந்த ஆகாரத்தைக் கொண்டு அவர் தேவனுடைய ஆடுகளைப் போஷிக்க கிருபை செய்யும். கர்த்தாவே, எல்லா வியாதிகளையும் அவர்களை விட்டு அப்புறப் படுத்த வேண்டுமாய் கெஞ்சுகிறேன். ஜனங்கள் நோய்வாய்ப்படும் போது, எல்லாவற்றிற்கும் போதுமானதாயுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இப்பொழுதும் எங்கள் பாவநிவாரணத்திற்காக பலிபீடத்தின் மேல் இருக்கிறது என்பதை அவர்கள் நினைவு கூரட்டும். அவர்கள் உடனே சொஸ்தமாக வேண்டுகிறேன். அவர்களுக்கு அதைரியத்தையளிக்கும், அல்லது தத்துவங்களை உண்டாக்கத் தூண்டும், பிசாசின் வல்லமையை அவர்களிடமிருந்து விலக்க வேண்டுமாய் கெஞ்சுகிறேன். சத்துருவின் எல்லா வல்லமைகளி னின்றும் அவர்களை விலக்கிக் காத்துக்கொள்ளும். உமது வசனத்திற்குத் திரும்ப எங்களை பரிசுத்தப்படுத்தும், கர்த்தாவே, இவைகளை எங்க ளுக்கு அருளும். 122கர்த்தாவே, எனக்கு உதவி புரிய உம்மிடம் மன்றாடுகிறேன். நான்-நான்-நான் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கிவிட்டேன். இன்னும் என்வாழ் நாட்கள் அதிகமாயிராது என்பதை அறிவேன். எனக்கு உதவி புரிய உம்மை வேண்டுகிறேன். நான் இச்செய்தியைக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்டிருக்கும் வரை, கர்த்தாவே, அதை உத்தமும் உண்மை யுமாய் செய்யக் கிருபை புரியும். நான் இவ்வூழியத்தை முடிக்கும் காலம் வரும்போது, அந்த நதியின் அருகாமையில் வந்து அலைகள் புரளும் போது, இந்த பழைய பட்டயத்தை உத்தமும், உண்மையுள்ள வரும், சத்தியத்தை முழுவதுமாய் பிரசங்கிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க அருள் புரியும். கர்த்தாவே, அதுவரை நான் திடகாத்திரமுள்ளவனாயும், ஆரோக்கியமுள்ளவனாயும், தைரியமுள்ளவனாயும் இருக்க உதவி புரியும். என் சபையை ஆதரியும். ஆண்டவரே, எங்களெல்லாரையும் ஒருமித்து ஆசீர்வதியும். நாங்கள் உம்முடையவர்கள். உமது ஆவி எங்கள் மத்தியில் இப்பொழுது, இருப்பதை உணர்கிறோம். எங்கள் ஜெபங்களுக்கு நீர் பதிலளிப்பீரென நம்புகிறோம். நாங்கள் இப்பூமியில் வாழவிருக்கும் எஞ்சியுள்ள நாட்கள் முழுவதும் எங்களையும் உமது வார்த்தையுடன் உமது ஊழியத்திற்கென்று ஒப்புக் கொடுக்கிறோம். தேவகுமாரனும் எங்கள் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய மகிமைக்காக வேண்டுகிறேன். ஆமென். நேசிக்கிறேன் (கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக) நேசிக்கிறேன். (என் இதயப் பூர்வமாக) முந்தியவர் நேசித்ததால் சகோ.நெவில், கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. (நேசிக்கிறேன் என்ற பாடலை சபையார் தொடர்ந்து பாடு கின்றனர். சகோதரன் ஆர்மன் நெவில் கூட்டத்தை முடிக்கிறார் -ஆசி) ஏழாவது முத்திரை தொடர்கிறது. 123(சகோதரன் பிரான்ஹாம், பகுதிகள் 261-374ல் அடங்கியுள்ளவை களை ஆரம்பத்தில் வெளியிடவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக பகுதி கள் (paragraphs) 377-414 உள்ளவைகளே, அக்காலத்தில் ஏழாவது முத்திரை ஒலிநாடாவை விநியோகிக்க அதிகாரபூர்வமான முடிவாய் இருக்கும்படியாய் திங்கள் கிழமை மார்ச் 25, 1963 அன்று தொடர்ந்து (பகுதிகள் 377-414-தமிழாக்கியோன்) பேசினார் -ஆசி). ......அவன் (சாத்தான்) அதைக் குறித்து ஒன்றும் அறியாதது நல்லது. ஏனெனில் அவன் அறிந்திருந்தால் அதை ஆள்மாறாட்டம் செய்திருப்பான். அதுதான் அவன் காரியங்களைச் செய்ய கையாளும் தந்திரம், ஆகையால்தான், தேவன் முழு உலகிற்கும், பரலோகத்திற்கும் இதை மறைத்து வைத்து, யாரும் அறியக்கூடாத விதத்தில் செய்து விட்டார். தேவன் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். ஆறாம் முத்திரையில் மூன்று வித நோக்கங்கள் இருப்பதை இன் றிரவு நீங்கள் அறிய விரும்புகிறேன். மூன்று வித நோக்கங்கள் ஆறாம் முத்திரையில் உள்ளது. குதிரையின் மேல் ஏறியிருந்தவர்களிடமும் மூன்று வித நோக்கங்கள் காணப்பட்டன. 124இவை எல்லாவற்றிலும் மூன்று வித நோக்கங்கள் உள்ளன. இது மறுபடியும் மூன்று', 'ஏழு' என்னும் எண்ணிக்கைகளுக்கு நம்மை கொண்டு செல்கின்றன-ஏழு முத்திரைகள், ஏழு கலசங்கள் போன்றவை. தேவனுடைய கணிதத்தில் மூன்று, ஏழு என்னும் எண்ணிக்கைகள் தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துவதற்கு உபயோகிக்கப் படுகின்றன. இப்பொழுது நீங்கள், குதிரையின் மேலேறியிருந்தவர்களைக் கவனியுங்கள் - மூன்று குதிரைகள் புறப்பட்டுச் சென்றன. அவைகளில் ஒன்று வெள்ளை நிறம் கொண்டது. ஒன்று சிகப்பு நிறம் கொண்டது மற்றொன்று கறுப்பு நிறமுடையது, நான்காவது குதிரையின் நிறம் எல்லா நிறங்களும் கலந்ததாயிருந்தது, பாருங்கள், மூன்று வித நோக்கங்கள். 125இப்பொழுது, தேவனும் அதையே செய்தார். அவர் அவருடைய சிங்கத்தை அனுப்பும்போதும் அதையே செய்தார். சிங்கம் என்பது அந்திக் கிறிஸ்துவிடம் போரிடும் தேவனுடைய வார்த்தையாகும். உபத்திரவ காலத்தில் அவர் காளையை அனுப்பினார் என்று நாம் காண்கிறோம். பலி செலுத்தப்படும் மிருகம். இந்த உபத்திரவ காலத் தில் ஜனங்கள் அடிமைகளாகப் பணிபுரிந்து, தங்களைப் பலியாக ஒப்புக் கொடுப்பதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. 126அடுத்த சபையின் காலம் சீர்திருத்தக்காரரின் காலமாகும். அப்பொழுது தேவன் மனித ஞானத்தை அனுப்பினார்-மிருகம் மனித தலையைப் பெற்றிருந்தது. அது சீர்திருத்தக்காரரிலிருந்து புறப்பட்டு சென்ற வல்லமையைக் குறிக்கின்றது. இப்பொழுது நீங்கள் கவனித்தீர்களா? ஒவ்வொருவரும்... இன்றைக்கும் ஜனங்கள் சீர்திருத்தக்காரரின் காலத்தில் உண்டாயிருந்த கொள்கையின்படி வாழ்கின்றனர் என்பதில் வியக்கத்தக்கது ஒன்று மில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் வேத கல்லூரிகள் போதித்த வண் ணம், சபை முறைமைகளைக் கடைபிடிக்கின்றனர். ஒரு காலத்தில் அது தேவன் கையாடிய முறையாகும். ஆனால் அந்த காலத்தை நாம் கடந்து விட்டோம். 127இப்பொழுது நாம் கழுகின் காலத்தில் பிரவேசித்துள்ளோம். எல்லாமே வெளிப்பட வேண்டிய காலமாயுள்ளது இது. வெளிப்படுத்தல் 10:1-7 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்கே வெளிப்படுத்தல் 10:1-7ல் “ஏழாம் தூதனுடைய செய்தியின் நாட்களில் தேவரகசியம் யாவும் நிறைவேற வேண்டும்,'' என்பதை நாம் காணலாம் இப்பொழுது திறக்கப்பட்ட ஆறாம் முத்திரையிலும் மூன்றுவித நோக்கங்கள் அடங்கியிருப்பதை நாம் காணலாம். இப்பொழுது அம்மூன்று நோக்கங்களும் இவைகளே. முதலாவதாக, உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள் சுத்தி கரிக்கப்படுவதற்கென உபத்திரவ காலத்தில் பிரவேசிக்க வேண்டும். அவளிடமிருந்து அவிசுவாசம் என்னும் பாவம் போக்கப்பட வேண்டும். செய்தியை அவள் புறக்கணித்ததால் அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும்! இது உபத்திரவ காலத்தில் நிகழ்கின்றது. வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்திலும் 7ம் அதிகாரத்திலும் இடையே அவள் சுத்திகரிக்கப் பட்டு, அவளுக்கு வெண்வஸ்திரம் அளிக்கப்படுகின்றது. அவள் மணவாட்டியல்ல, அவள் சபையைச் சார்ந்தவள். செய்தியை ஏற்றுக் கொள்வதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் வாய்க்காமலிருந்திருக்கலாம். அல்லது கள்ளத்தீர்க்கதரிசிகளின் மூலமாய் அவர்கள் கண்கள் மறைக்கப் பட்டிருக்கலாம். எனினும், அவர்கள் உத்தம இருதயம் படைத்தவர்கள். தேவன் அவர்கள் இருதயங்களை அறிவார். அவர்கள் உபத்திரவ காலத்தில் சுத்திகரிக்கப்படுகின்றனர். 128வேறொரு சுத்திகரிப்பின் காலம் வருகின்றதைக் கவனித்தீர்களா? அது இஸ்ரவேலர் ஒன்று கூடும்போது நிகழும். இது இரண்டாம் நோக்க மாகும். உபத்திரவ காலத்தில் தேவன் இஸ்ரவேலரை சுத்திகரிப்பார், அங்கு ஒன்று கூடும் லட்சக்கணக்கானவர்களில் 1,44,000 பேர் தெரிந் தெடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றனர். தேவன் இஸ்ரவேலரை சுத்தி கரிக்கின்றார். 129பூமி முழுவதும் சுத்திகரிக்கப்பட வேண்டுமென்பதை கவனி யுங்கள். சந்திரனும், நட்சத்திரங்களும், இயற்கை யாவும் சுத்திகரிக் கப்படும் அது என்னவென்று தெரிகின்றதா? பூமியானது சுத்திகரிக் கப்பட்டு, தன்னை புதுப்பித்துக் கொண்டு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு ஆயத்தமாகின்றது. ஆயிரம் வருட அரசாட்சி வரவிருக்கின்றது. அழுக் குள்ள யாவும் ஆறாம் முத்திரையின்போது சுத்திகரிக்கப்படவேண்டும். இப்பொழுது, இப்பொழுது, ஏழாம் முத்திரை திறக்கப்படும்போது, அதில் மூன்று வித இரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை கவனித்தீர்களா? இதைக் குறித்து நான்... பேசுவேன் ஏற்கனவே நான் பேசியுள்ளேன். அதுதான் ஏழு இடி முழக்கங்களின் இரகசியமாகும். பரலோகத்திலுள்ள ஏழு இடிகள் இந்த இரகசியத்தை வெளியரங்க மாக்கும். அது கிறிஸ்துவின் வருகையின் போது அது இருக்கும். ஏனெனில் அவர் எப்பொழுது வருவாரென்பதை யாருமே அறியா ரென்று இயேசு தாமே கூறியுள்ளார். 130யூதர்கள் அவரிடம் அதைக் கேட்டபோது, நீங்கள் கவனித்தீர் களா? நாம் ஆறு முத்திரைகளை மத்தேயு 24-ம் அதிகாரத்துடன் ஒப்பிட் டுப் பார்த்தபோது, ஏழாம் முத்திரை விடப்பட்டதை நாம் கண்டோம். ஏனெனில் அவர் வரும் நாளையாவது நாழிகையாவது தேவன் மாத்திரமே அறிவா ரென்றும், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் என்றும் இயேசு கூறினார். ஆகவே, அது எழுதப்படாமலிருப்பதில் வியப்பொன்று மில்லை. ஆகவே அவர்கள் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக்கொண்டனர். அப் பொழுது யாரும் எவ்வித செயல்களும் புரியவில்லை. தேவதூதர் களும் அதை அறியார்கள். அவர் எப்பொழுது வருவாரென்று யாரும் அறியார். ஆனால் அவர் வரும் சமயத்தில் இந்த ஏழு இடிகளின் ஏழு சத்தங்கள் முழங்கி, அந்த மகத்தான காரியத்தை வெளிப்படுத்தும். ஆகவே, அது என்னவென்று நமக்குத் தெரியாது. அந்த நேரம் வரும்வரை அது வெளிப்படாது. ஆனால் அது வெளிப்படவேண்டிய அந்த நாளிலும், அந்த நேரத்திலும், அது திண்ணமாக வெளிப்படும். எனவே நாம் செய்யவேண்டியது என்னவெனில், தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் இருந்து, அவருக்குச் சேவை செய்து, கிறிஸ்தவ ஜீவியம் செய்வதற்கு அவசியமான யாவற்றையும் கடைபிடித்தலாகும். ஆறாம் முத்திரை நமக்கு திறக்கப்பட்டதை நாம் கண்டோம். ஆனால் அந்த நேரம் வரும்வரை, ஏழாம் முத்திரை பொது ஜனங்களுக்கு திறக்கப் படாது. 131இப்பொழுது, இந்த ஏழு சத்தங்களும் முழங்க தேவன் அனுமதிக்க ஒரு காரணம் இருக்கவேண்டும். ஏனெனில், அது சம்பவிக்க வேண்டும். கிறிஸ்து, ஆட்டுக்குட்டியானவர் தம் கையில் புஸ்தகத்தை வாங்கி, ஏழாம் முத்திரையையும் திறந்தார் என்று பார்க்கிறோம். ஆனால் நீங்கள் பாருங்கள், அது மறைக்கப்பட்ட இரகசியமாயிருக்கிறது. எவருமே அதை அறியார். ஆனால் அவர், ''யாருமே அவர் வருகையின் நேரத்தை அறியார்கள்'' என்றார். ஏழு இடிகளில் அடங்கியுள்ள இரகசியத்தையும் அவர்கள் அறியார்கள். ஏனெனில் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. அதைக் குறித்து அவ்வளவுதான் நாம் அறிந்து கொண்டிருக் கிறோம். மற்றவை வெளிப்பட்டுவிட்டன. ஆனால் இது வெளிப்பட வில்லை, நான் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, நான் இதைக் கேட்டேன்... அல்லது ஏழு இடிகள் வரைக்கும் உள்ள இரகசியங்கள் எல்லாம் வெளிப்படுவதை நான் கண்டேன். அதுவரைக்கும் தான் நமக்கு வெளிப்பட்டுள்ளது. ஆகவே இப்பொழுது, நாம் ஒவ்வொருவரும் தேவனை சேவித்து, நன்மையானவைகளைச் செய்து, நம் வாழ்நாள் முழுவதும் அவரில் அன்புகூர்ந்து அவரைச் சேவிப்போம் என்று நம்புகிறேன். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். 132தேவகிருபையால், முத்திரிக்கப்பட்டிருந்த ஆறு முத்திரைகளின் கீழ் அடங்கியிருந்த இரகசியங்களையும் நாம் அறிந்துகொண்டோம். ஆனால் பொது ஜனங்களுக்கு ஏழாம் முத்திரையின் இரகசியம் வெளிப் படக்கூடாது என்பதையும் நாம் புரிந்துகொண்டோம். இப்பொழுது அவருடைய வருகையும் அவர் வரும் நாழிகையும் பூமி அழிதலும்... மத்தேயு 24-ம் அதிகாரத்தில் அவர்கள், “உமது வருகைக்கும் உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன?' என்று கேட்டபோது அவர் அதைக் குறித்து சொல்லிக் கொண்டே வந்து, முடிவில் 31-ம் வசனத்தில் இஸ்ரவேல் ஒரு நாடாக ஒன்று சேரும் என்று சொல்லிவிட்டு, உடனே உவமைகளுக்குச் செல்கின்றார், பாருங்கள். ''அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.'' பின்னர், 'அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது சமயம் வந்துவிட்டது என்று அறியுங்கள்'' என்கிறார். பாருங்கள்? இஸ்ரவேல் ஒரு நாடாக ஒன்று சேர்ந்ததை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அவர் இந்த ஏழாம் முத்திரையைக் குறித்து ஒன்றும் வெளிப்படுத்தவில்லை என்பதைக் கவனியுங்கள். தொடர்ந்து சேவை செய்வதேயாகும். ஏனெனில் இது ஓர் மகத்தான இரகசியமாயிருப்பதால் யோவான் அதை எழுத தேவன் அனுமதிக்கவில்லை. அவை முழங்கின. அது திறக்கப்படு மென்று வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஆனால் இதுவரை அது திறக்கப்படவில்லை. 133ஆகவே இங்கே, இந்த ஏழாம் முத்திரையை, அவர் திறந்த போது, மறுபடியும் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார். பாருங்கள். எனவே, அது இன்னமும் முற்றிலுமான ஒரு இரகசியமாயுள்ளது. அது வெளிப்படக்கூடிய நேரம் இன்னும் வரவில்லை. ஆகவே இதுவரை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். மற்றவை இயேசு தம் மணவாட்டிக்காக பூமிக்கு மறுபடியும் தோன்றும் நேரத்தில் வெளிப்படும். அச்சமயம் என்னென்ன நேரிடுமோ, அது அப்பொழுது புலப்படும். அதுவரை, நாமெல்லாரும் ஜெப சிந்தையுடையவர்களாய், நல்ல கிறிஸ்தவ ஜீவியம் செய்து, அவருடைய வருகையை எதிர்நோக்கியிருப்போமாக. 134இந்த ஒலிநாடா யாரிடமாவது கிடைக்கப் பெற்றால், இதைக் கொண்டு ஒரு தத்துவத்தையோ அல்லது கொள்கையையோ உண்டாக்கிக் கொள்ள முயலவேண்டாம். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவனுக்குத் தேவன் நமக்குக் காண்பித்த எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நான் எட்டு நாட்களாக அந்த அறை யில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் உங்களுக்கு விளக்கின செய்தியை அநேகர் புரிந்து கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன். ஆவிக்குரிய காரியங்கள் முழுவதும் நடந்து கொண்டேயிருந்தன வென்றும் அவைகளை நீங்கள் அறியாமலிருந்தீர்கள் என்றும் நான் உறுதியாகக் கூறமுடியும். ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு அளித்த இச்செய்தி தேவனால் அனுப்பப்பட்டு, வேதவாக்கியங்களால் விளக்கப்பட்டு, அது உண்மையென்று தேவனால் உறுதிப்படுத்தப் பட்ட ஒன்றாகும். 135ஏனெனில் நான் இதை பிரசங்கிக்கும் முன்னமே, மேற்கு திசைக்குப் போக எத்தனித்திருக்கையில், ஒருநாள் காலை பத்து மணிக்கு கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தை அருளினார். நான் உங்களிடம் தரிச னத்தைக் கூறினேன்-அதாவது ஏழு தூதர்கள் கூட்டமாக வந்த காட்சி. ஆனால் அதன் பொருள் எனக்கு அப்பொழுது விளங்கவில்லை. நாம் அதை நினைவில் வைத்துள்ளோம். இதை நீங்கள், 'ஐயன்மீர், இதுவா சமயம்?'' என்னும் செய்தியடங்கிய ஒலி நாடாவில் கேட்கலாம். ஆம், அதைத்தான் இப்பொழுது நீங்கள் கண்டு கொண்டிருக்கின்றீர்கள். அந்த ஏழு தூதர்கள்....... நான் அப்பொழுது மேற்கில் இருந்தேன். 136அந்த சிறு செய்தியாளர்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? அவர்கள் கிழக்கு நோக்கிச் சென்றனர். அடுத்தபடியாகத் தோன்றிய செய்தியாளர்கள் - புறாக்கள் (சற்று பெரிய பறவைகள்) -அவைகளும் கிழக்கே சென்றன. நான் பார்த்துக்கொண்டே நின்றேன். அவைகள் எல்லா நேரத்திலும் என்னுடனே கூட இருந்தன. அது தான் முதலாம் இழுப்பும் இரண்டாம் இழுப்புமாகும். இப்பொழுது, மூன்றாவது, மேற்கிலிருந்து பயங்கர வேகத்தில் வந்து என்னை தூக்கிக் கொண்டு சென்றனர். அதுதான் நான் இந்த ஏழு முத்திரைகளின் இரகசியங்களுடன் திரும்ப கிழக்கிற்று வருதலாகும். ஜூனியர் ஜாக்ஸனும் தம் சொப்பனத்தில் அவ்விதமாகவே கண்டார். அந்த சொப்பனத்தின் அர்த்தத்தை நான் விவரிக்க கர்த்தர் அனுமதித்தார். “அந்த கூர்நுனி கோபுரத்தின் உள்ளில் ஒரு வெண்பாறை உண்டா யிருந்தது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை. ஆகவே தான் இத்தூதர் களின் செய்தியோடு பொருந்தத்தக்கதாய், நான் மேற்குக்குச் சென்று மறுபடியும் வந்து சபைக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று, ''நிகழவிருக்கும் அடுத்த காரியம் இந்த சபையில் தான் நிகழும்'' என்று நான் கூறினது நினைவிருக்கின்றதா? அது முற்றிலும் அப்படியே ஆகும். 137நிகழ்ந்த வேறொரு காரியத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்; 'ஐயன்மீர், இதுவா சமயம்?' என்னும் செய்தியடங் கிய ஒலி நாடாவை நீங்கள் கேட்டிருப்பீர்களானால் ஒரு தூதன் மாத்திரம் என் கவனத்தை அதிகம் கவர்ந்தான் என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்- மற்றைய தூதர்கள் சாதாரணமாகத் தென்பட்டனர். இவன் மாத்திரம் பிரத்தியேகமாயிருந்தான். கூர்நுனி கோபுரத்தின் அமைப்பில் வந்த தூதர்களின் வட்டத்தில் இவன் என் இடது பாகத்தில் இருந்தான். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அந்த கூர்நுனி கோபுரத்தில், அங்கே தான் அந்த இரகசியமான வெண் பாறை எழுதப்படாமல் இருந்தது என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். ஆகவே அந்த தூதர்கள் என்னை தாங்களாகவே அந்த கூர்நுனி கோபுரத்திற்குள் கொண்டு சென்றனர். தேவனுடைய இரகசியங்கள் அவர்களுக்கு மாத்திரமே தெரிந்திருந்தன. ஆகவே, இப்பொழுது அந்த கூர்நுனி கோபுரத்தை அல்லது கூர்நுனி கோபுரத்தினுள் அடங்கிய ஏழு முத்திரைகளின் இரகசியமான அந்த செய்தியை வியாக்கியானப்படுத்த வந்த செய்தி யாளர்கள் அவர்கள்தான். 138எனது இடது பக்கமிருந்த அத்தூதன், இடமிருந்து வலம் எண்ணி னால் ஏழாம் தூதன் அல்லது கடைசி தூதனாயிருப்பான். அவன் என் இடது பாகத்திலிருந்தபடியால், நான் அவனை மேற்கு திசையில் நோக்கி நின்றேன்; கிழக்கு நோக்கி வரும் அவன் என் இடது பாகத்தில் இருப் பான். அதுவே கடைசி தூதனின் செய்தியாகும் மிகவும் கீர்த்தி வாய்ந் தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்த்தவண்ணமாய், கூர்மையான சிறகுகள் பெற்றவனாய் என்னை நோக்கி பறந்து வந்தானென்று நான் உங்களிடம் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதுதான் ஏழாம் முத்திரை, அது இப்பொழுதும் பிரத்தியேகம் வாய்ந்தது. அது இன்னது என்பது நமக்கு இதுவரை தெரியாது. ஏனெனில் அது உடைக்கப்பட அனுமதியில்லை. ஆனால் இப்பொழுது, இது எவ்வித கூட்டமாயிருந்தது என்பதை கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஆசனத்தின் முனையில் உட்காரும் அளவுக்கு அது சிலிர்ப்புடையதாய் இருந்தது. பகல் ஒன்று அல்லது இரண்டு மணிக்கே நீங்கள் இங்கு வந்து, முன்னால் உட்கார வேண்டுமென்று கருதி, சபையின் கதவுகள் திறக்கும் வரை காத்து நின்றீர்கள்-சுவர்களின் அருகாமையில் கால்கள் மறுத்துப்போக நின்று கொண்டிருந்தீர்கள். 139இது என்ன? பரிசுத்த ஆவியானவர் இந்தச் செய்தியாளர்களை அனுப்புதல். ஆகவே அவர்கள் இவைகளை நமக்கு வெளிப்படுத்தித் தந்தனர். இவை தேவனுடைய வார்த்தையுடன் முற்றிலும் இணைந்து போவதைக் கவனியுங்கள். இது சத்தியம் என்பதை உங்களுக்கு உணர்த்த, அது நிகழும் இரண்டு மாதங்களுக்கு முன்னமே அவர் அதை அறிவித்தார். ஒன்றை யுமே அறியாதவனாய் நான் மேற்குக்குச் சென்று. அவரளித்த வெளிப் பாட்டைப் பெற்றவனாய் மறுபடியும் வந்து உங்களுக்கு எடுத்துரைத் தேன். அவர் என்னை தரிசனத்தில் கொண்டு சென்றபோது, இதைக் குறித்து ஒன்றையாவது அப்பொழுது எனக்கு அவர் வெளிப்படுத்த வில்லை. நான் பயந்து போனேன். நான் வெடியில் இறந்து போவேன் என்று பயந்திருந்தேன். நீங்கள் பாருங்கள்? அப்பொழுது அவர்கள் அதன் அர்த்தத்தை எனக்கு விவரிக்க முடியவில்லை. அது தேவையாயிருந்தபோது அந்த அறையில் எனக்கு வெளிப் பாடு கிடைத்தது. அவர் அளித்தவண்ணமாகவே நான் உங்களுக்கு எடுத்துரைத்தேன். ஆகவே, நண்பர்களே, நீங்கள் பாருங்கள்? அவைகள் எப்பொழுதுமே பரிபூரணமாயுள்ளன. தரிசனங்கள் பொய்யாகா. அவை முற்றிலும் உண்மை . இப்பொழுது, தரிசனமும், வார்த்தையும், சரித்திரமும், சபையின் காலங்களும் ஒன்றோடொன்று இணைகின்றன. எனவே எனது அறிவுக்கேற்பவும், தேவனுடைய வார்த்தையின்படியும், அவருடைய தரிசனத்தின்படியும் வெளிப்பாட்டின்படியும், உங்களுக்கு அளிக்கப் பட்ட வியாக்கியானம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாம். இப்பொழுது, கர்த்தர் உங்களெல்லாரையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக! நாமெல்லாரும் நின்று அந்த நல்ல பழமையான சபையின் பாடலைப் பாடுவோம். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென். 140(சகோதரன் பிரான்ஹாம் முந்தின நாள் மாலை மார்ச் 24, 1963 அன்று பேசிய பகுதி 374 லிருந்து கீழ்க்கண்ட நான்கு வரிகளைச் சேர்க்கிறார்- ஆசி) நேசிக்கிறேன் (கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக) நேசிக்கிறேன் (என் இதயப் பூர்வமாக) முன்பு அவர் நேசித்ததால் சகோதரன் நெவில், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.